டி20 உலகக்கோப்பை 2026: 11 முறை டக் அவட் – மோசமான சாதனை செய்த இந்தியா | TV9 Tamil News

டி20 உலகக்கோப்பை 2026: 11 முறை டக் அவட் – மோசமான சாதனை செய்த இந்தியா

Published: 

24 Feb 2026 17:58 PM

 IST

T20 World Cup 2026 : டி20 உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியிலேயே, தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. குறிப்பாக இந்திய அணி வீரர்கள் 11 முறை டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்துள்ளனர்.

1 / 5டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர்கள்  மோசமான நிலையில் உள்ளது. பல போட்டிகளில் ஆரம்ப கட்டங்களிலேயே விக்கெட்டுகள் விரைவாக விழுந்ததால் நடுவரிசை வீரர்கள் தொடர்ந்து அழுத்தத்தில் விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்த உலகக்கோப்பை தொடரில் அதிக முறை,  ரன் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்த அணியாக இந்தியா மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் மோசமான நிலையில் உள்ளது. பல போட்டிகளில் ஆரம்ப கட்டங்களிலேயே விக்கெட்டுகள் விரைவாக விழுந்ததால் நடுவரிசை வீரர்கள் தொடர்ந்து அழுத்தத்தில் விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்த உலகக்கோப்பை தொடரில் அதிக முறை, ரன் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்த அணியாக இந்தியா மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.

2 / 5

இதுவரை நடைபெற்ற ஐந்து போட்டிகளில், இந்திய அணியின் எட்டு வீரர்கள் மொத்தமாக 11 முறை டக் அவுட் ஆகியுள்ளனர். உலக கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா 3 போட்டிகளில் தொடர்ந்து ரன் எடுக்காமல் டக் அவுட்டானது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அக்சர் படேலும் 2 முறை டக் அவுட் ஆனார்.

3 / 5

ஆல் ரவுண்டர்களான ஹர்திக் பாண்ட்யா மற்றும் சிவம் துபே ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். முதல் போட்டியில் ரன் எடுக்காமல் டக் அவுட்டான சிவம் துபே பின்னர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நம்பிக்கை அளித்து வருகிறார். அதே போல இஷான் கிஷன் அரைசதங்கள் அடித்திருந்தாலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டக் அவுட் ஆனார். ரிங்கு சிங் மற்றும் ஜஸ்பிரித் பும்ராவும் அதே போட்டியில் ரன் எடுக்காமல் வெளியேறினர்.

4 / 5

மேலும் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ஒரு போட்டியில், ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாமல் ரன் அவுட் ஆனதும் அணியின் மோசமான நிலையை வெளிப்படுத்தியது. டாப் ஆர்டர பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்காததே இந்தியாவின் மோசமான நிலைக்கு காரணம்

5 / 5

இன்னும் இரண்டு முக்கிய போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இந்திய அணி இந்த டக் அவுட் பிரச்னையிலிருந்து மீண்டு பெரிய வெற்றிகளை பதிவு செய்யுமா என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பான பங்களிப்பை வழங்குவது அவசியம்.