தேவைக்கு ஏற்ப முதலீடு செய்வது எப்படி?.. இந்த தவறுகளை செய்யாதீர்கள்! | TV9 Tamil News

தேவைக்கு ஏற்ப முதலீடு செய்வது எப்படி?.. இந்த தவறுகளை செய்யாதீர்கள்!

Updated On: 

14 Apr 2026 00:26 AM

 IST

How To Invest Based On Financial Needs | சேமிப்பு மற்றும் முதலீடு மிகவும் முக்கியமான ஒன்றுதான். ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பொருளாதார தேவை மற்றும் நிலை இருக்கும். அதற்கு ஏற்ப முதலீடு செய்வது சிறந்த லாபத்தையும், பலன்களையும் கொடுக்கும்.

1 / 5பாதுகாப்பான மற்றும் நிலையான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்றால் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக பலரும் தங்களது மாத வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் செய்யக்கூடிய மிக முக்கிய தவறு தான் சரியான முதலீட்டை தேர்வு செய்யாதது. 

பாதுகாப்பான மற்றும் நிலையான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்றால் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக பலரும் தங்களது மாத வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் செய்யக்கூடிய மிக முக்கிய தவறு தான் சரியான முதலீட்டை தேர்வு செய்யாதது. 

2 / 5

முதலீடு செய்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு சரியான முதலீடு செய்வதும் மிக முக்கியமாக உள்ளது. நம்முடை நிதி தேவையை அறிந்துக்கொண்டு முதலீடு செய்யும்போது அந்த பணத்தை திறம்பட கையாள முடியும். எனவே நிதி தேவைக்கு ஏற்ப முதலீடு செய்வது சிறந்ததாக உள்ளது. 

3 / 5

உங்களுக்கு குறுகிய காலத்திற்குள் பண தேவை உள்ளது, குறுகிய காலத்திற்குள்ளாகவே உங்களது பணம் முதிர்ச்சி அடைந்து லாபம் பார்க்க வேண்டும் என்றால் குறைந்த கால முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம். நிலையான வைப்பு நிதி திட்டம் உள்ளிட்ட அஞ்சலகங்கள் மூலம் அரசு செயல்படுத்தும் திட்டங்கள் சிறப்பானதாக இருக்கும். 

4 / 5

இதுவே உங்களுக்கு குறுகிய கால பண தேவை எதுவும் இல்லை. நீங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதலீடு செய்கிறீர்கள். அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளுக்கு உங்களுக்கு அந்த பணம் தேவை இல்லை என்றால் நீங்கள் எஸ்ஐபி உள்ளிட்ட திட்டங்களில் நீண்ட காலம் முதலீடு செய்து அதிக லாபத்தை பெறலாம். 

5 / 5

அதிக காலம் முதலீடு செய்ய வேண்டிய திட்டங்களில் குறைந்த காலம் முதலீடு செய்து உடனடி லாபத்தை எதிர்ப்பார்ப்பது மற்றும் குறைந்த கால முதலீடுகளில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதலீடு செய்வது இரண்டுமே தவறான முதலீட்டு திட்டமிடல் ஆகும். எனவே உங்கள் தேவைக்கு ஏற்ப முதலீடு செய்யுங்கள். 

Follow Us