இனி இபிஎஃப்ஓ தளத்தில் யுஏன் எண் ஆக்டிவேட் செய்ய முடியாது.. வெளியான முக்கிய அறிவுப்பு! | TV9 Tamil News

இனி இபிஎஃப்ஓ தளத்தில் யுஏன் எண் ஆக்டிவேட் செய்ய முடியாது.. வெளியான முக்கிய அறிவுப்பு!

Updated On: 

18 Apr 2026 00:20 AM

 IST

New Update On UAN In EPFO | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் இணையதளம் மூலம் யுஏஎன் எண்ணை அப்டேட் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி இபிஎஃப்ஓ இணையதளம் மூலம் யுஏஎன் ஆக்டிவேட் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 / 5இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான வரப்பிரசாதமாக உள்ள ஒரு திட்டம் தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம். இந்த அமைச்சகத்தில் ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்பட்டு அந்த கணக்கில் மாதம் மாதம் குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்படும். அந்த பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள அனுமதி உள்ளது

இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான வரப்பிரசாதமாக உள்ள ஒரு திட்டம் தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம். இந்த அமைச்சகத்தில் ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்பட்டு அந்த கணக்கில் மாதம் மாதம் குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்படும். அந்த பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள அனுமதி உள்ளது

2 / 5

இந்த நிலையில் தான், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் இருந்து பணம் எடுப்பது, பிஎஃப் பேலன்ஸ் செக் செய்வது, வட்டி வந்துவிட்டதா என சோதனை என அனைத்து விதமான சேவைகளையும் பெற யுஏன் எண் எண்ணை வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என கூறியுள்ளது. 

3 / 5

இந்த யுஏஎன் எண்ணை ஆக்டிவேட் செய்தால் மட்டுமே பயனர்களால் பிஎஃப் தொடர்பான எந்த வித சேவைகளையும் பெற முடியும். அதேபோல, இந்த யுஏன் எண் மூலம் ஊழியர்கள் தாங்கள் ஏற்கனவே பணி செய்த ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு அதாவது புதிய நிறுவனத்திற்கும் மாற முடியும். 

4 / 5

இதுவரை ஊழியர்கள் தங்களது யுஏன் எண்ணை, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் இணையதளம் மூலமே ஆக்டிவேட் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை தான் ஊழியர் வருங்கால  வைப்பு நிதி அமைச்சகம் மாற்றி அமைத்துள்ளது. அதாவது இனி பயனர்களால் இபிஎஃப்ஓ இணையதளம் மூலம் யுஏன் எண்ணை ஆக்டிவேட் செய்ய முடியாது. 

5 / 5

அதாவது பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள் இனி தங்களை யுஏஎன் எண்ணை இபிஎஃப்ஓ இணையதளத்தில் ஆக்டிவேட் செய்ய முடியாது. மாறாக அவர்களால் உமாங்க் செயலியில் மட்டுமே தங்களது யுஏஎன் எண்ணை ஆக்டிவேட் செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow Us