தேர்தல் நடத்தை விதிகள்: வாட்ஸ்அப் குழுக்களுக்கு கட்டுப்பாடு – மீறினால் சட்ட நடவடிக்கை | TV9 Tamil News

தேர்தல் நடத்தை விதிகள்: வாட்ஸ்அப் குழுக்களுக்கு கட்டுப்பாடு – மீறினால் சட்ட நடவடிக்கை

Updated On: 

18 Mar 2026 16:05 PM

 IST

Strict Social Media Rules : தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவுவதை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் கடுமையான விதிமுறைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப்பில் தவறான தகவல் பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 / 5தற்போது தேர்தல் பிரச்சாரம் நேரடியாக மட்டுமின்றி, வாட்ஸ்அப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனால் ஆன்லைன் தகவல் பரிமாற்றங்கள் மீது தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

தற்போது தேர்தல் பிரச்சாரம் நேரடியாக மட்டுமின்றி, வாட்ஸ்அப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனால் ஆன்லைன் தகவல் பரிமாற்றங்கள் மீது தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

2 / 5

இதனையடுத்து முற்றிலும் பொய்யான அல்லது தவறான தகவல்களை பரப்புபவர்கள், தவறாக சித்தரிக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட வீடியோக்கள் ஆகியவற்றை மேற்கொள்பவர்கள் மூது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3 / 5

வாட்ஸ்அப் குரூப்களில் அரசியல் தொடர்பான பதிவுகளை பகிர்வது அல்லது வேறு ஒருவருக்கு ஃபார்வேர்டு செய்தவதும் கூட தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயலாக கருதப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

4 / 5

ஏஐ மூலம் உருவக்கப்படும் டீப் ஃபேக் வீடியோக்கள் புதிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன. இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் அல்லது அரசியல் தலைவர்கள் குறித்து போலியான வீடியோக்கள் பகிரப்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

5 / 5

மேலும், சாதி, மத ரீதியில் வெறுப்பை தூண்டும் பதிவுகள், ஒருவரின் கண்ணியத்தை பாதிக்கும் கருத்துகள் போன்றவற்றை பகிர்வது சட்டப்படி குற்றமாக கருதப்படும். மேலும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் போன்றோர் அரசியல் பதிவுகளை பகிர்வது கூட தேர்தல் விதிமுறையை மீறும் செயலாக கருதப்படும்.

Follow Us