Gmail : ஜிமெயில் ஸ்டோரேஜ் கிளியர்.. இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்! | TV9 Tamil News

Gmail : ஜிமெயில் ஸ்டோரேஜ் கிளியர்.. இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்!

Updated On: 

08 Mar 2026 19:24 PM

 IST

Gmail Storage Clearing Tips | பலரும் ஜிமெயிலில் ஸ்டோரேஜ் கிளியர் செய்யும்போது ஒரு தவறை செய்கின்றனர். அந்த தவறின் மூலம் மீண்டும் அவர்கள் ஸ்டோரேஜ் சிக்கலை சந்திக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், பயனர்கள் ஜிமெயில் ஸ்டோரேஜ் கிளியர் செய்யும்போது செய்யக்கூடாத தவறுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5உலக அளவில் ஏராளமான மக்கள் பயன்படுத்தும் முக்கிய தகவல் பரிமாற்ற செயலியாக கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் உள்ளது. நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என பெரும்பாலான இடங்களில் இந்த ஜிமெயில் செயலி பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய மிக முக்கியமான செயலியாக ஜிமெயில் உள்ள நிலையில், பொதுமக்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை ஒன்று உள்ளது. அதுதான் ஸ்டோரேஜ் சிக்கல். 

உலக அளவில் ஏராளமான மக்கள் பயன்படுத்தும் முக்கிய தகவல் பரிமாற்ற செயலியாக கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் உள்ளது. நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என பெரும்பாலான இடங்களில் இந்த ஜிமெயில் செயலி பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய மிக முக்கியமான செயலியாக ஜிமெயில் உள்ள நிலையில், பொதுமக்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை ஒன்று உள்ளது. அதுதான் ஸ்டோரேஜ் சிக்கல். 

2 / 5

ஜிமெயில் செயலியில் ஸ்டோரேக் சிக்கல் இருக்கும் பட்சத்தில் அதனை பயன்படுத்துவது மிகவும் சிக்கலானதாக மாறிவிடும். ஜிமெயில் அனுப்புவது, ஜிமெயில் பெறுவது ஆகியவை கடினமாகிவிடும். இந்த நிலையில், ஜிமெயிலில் ஸ்டோரேஜ் சிக்கலை மிக விரைவாக சரி செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

3 / 5

பலரும் இன்பாக்ஸில் இருக்கும் குறுஞ்செய்தியை டெலிட் செய்தாலும் ஸ்டோரேஜ் சிக்கல் தீரவில்லை என நினைப்பார்கள். ஆனால், உண்மையான சிக்கல் இமெயில்களை டெலிட் செய்த பிறகு தான் இருக்கிறது. அதாவது டெலிட் செய்யப்பட்ட அனைத்து மெயில்களும் டிராஷ் ஃபோல்டருக்குள் சென்றுவிடும். 

4 / 5

என்னதான் இமெயில்கள் இன்பாக்ஸில் இருந்து டெலிட் செய்யப்பட்டாலும், அவை டிராஷ் ஃபோல்டரில் இருக்கும்போதும் ஸ்டோரேஜ் பிடித்தம் செய்யும். இந்த நிலையில் ஸ்டோரேஜில் உள்ள டெலிட் செய்யப்பட்ட குறுஞ்செய்திகளையும் சேர்த்து டெலிட் செய்யும் பட்சத்தில் ஸ்டோரேஜ் சிக்கல் தீரும்.

5 / 5

ஜிமெயில் செயலியை பொருத்தவரை சப்ஸ்கிரிப்ஷன், ஆன்லைன் ஷாப்பிங் உள்ளிட்டவற்றுக்கான குறுஞ்செய்திகளும் வந்து குவியும். இதன் காரணமாக ஜிமெயில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ள நிலையில் அவ்வப்போது தேவைற்ற இமெயில்களை இன்பாக்ஸ் மற்றும் டிராஷ் ஃபோல்டரில் இருந்து டெலிட் செய்வது சிறந்ததாக இருக்கும். 

Follow Us