70 கி.மீ மைலேஜ்… ரூ.70,000க்கும் குறைவான விலையில் 4 சூப்பர் பைக்குகள் இதோ | TV9 Tamil News

70 கி.மீ மைலேஜ்… ரூ.70,000க்கும் குறைவான விலையில் 4 சூப்பர் பைக்குகள் இதோ

Published: 

07 Mar 2026 21:10 PM

 IST

Best Bikes Under 70000 : ரூ.70,000 பட்ஜெட்டில், அதிக மைலேஜ் கொண்ட 4 சிறந்த பைக் ஆப்சன்கள் குறித்து பார்க்கலாம். ஹீரோ எச்எஃப் டீலக்ஸ், ஹோண்டா ஷைன் 100, பஜாஜ் பிளாட்டினா 110, மற்றும் டிவிஎஸ் ஸ்போர்ட் போன்ற குறைந்த விலையில் கிடைக்கும் பைக்குகள் குறித்து பார்க்கலாம்.

1 / 5சிறந்த மைலேஜ் வழங்கும் குறைவான பட்ஜெட்டில் பைக்குகள்  வாங்க விரும்புகிறீர்கள் என்றால், இந்திய மார்கெட்டில் பல நல்ல ஆப்ன்கள் கிடைக்கின்றன. ஹீரோ, ஹோண்டா, பஜாஜ் மற்றும் டிவிஎஸ் போன்ற நிறுவனங்களின்  பைக்குகள் சுமார் ரூ.70,000 பட்ஜெட்டுக்குள் கிடைக்கின்றன. இந்த பைக்குகள் குறிப்பாக அன்றாட பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில் 100 சிசி முதல் 110 சிசி வரையிலான என்ஜின்களைக் கொண்டுள்ளன. இந்த பைக்குகளின் மிகப்பெரிய நன்மை அவற்றின் சிறந்த மைலேஜ் கொண்டது.

சிறந்த மைலேஜ் வழங்கும் குறைவான பட்ஜெட்டில் பைக்குகள் வாங்க விரும்புகிறீர்கள் என்றால், இந்திய மார்கெட்டில் பல நல்ல ஆப்ன்கள் கிடைக்கின்றன. ஹீரோ, ஹோண்டா, பஜாஜ் மற்றும் டிவிஎஸ் போன்ற நிறுவனங்களின் பைக்குகள் சுமார் ரூ.70,000 பட்ஜெட்டுக்குள் கிடைக்கின்றன. இந்த பைக்குகள் குறிப்பாக அன்றாட பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில் 100 சிசி முதல் 110 சிசி வரையிலான என்ஜின்களைக் கொண்டுள்ளன. இந்த பைக்குகளின் மிகப்பெரிய நன்மை அவற்றின் சிறந்த மைலேஜ் கொண்டது.

2 / 5

ஹீரோ HF டீலக்ஸ் இந்தியாவின் மிகவும் பிரபலமான பயணிகள் பைக்குகளில் ஒன்றாகும். இதன் குறைந்த விலையில், நம்பகமான எஞ்சின் மற்றும் சிறந்த மைலேஜ் ஆகியவை நீண்ட காலமாக இதை வாடிக்கையாளர்களின் விருப்பமாக மாற்றியுள்ளன. இதன் தொடக்க எக்ஸ் ஷோரூம் விலை தோராயமாக ரூ. 57,657. இந்த பைக் 97சிசி எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த பைக் லிட்டருக்கு தோராயமாக 70 கிமீ மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது.

3 / 5

ஹோண்டா ஷைன் 100 பைக் குறைந்த விலையில் சிறந்த செயல்திறனுக்கு பெயர் பெற்றது. இந்த பைக் இந்திய மார்க்கெட்டில் அதிக பிரபலமானது. இதன் தொடக்க எக்ஸ் ஷோரூம் விலை சுமார் ரூ.65,243. இது 98சிசி எஞ்சின் கொண்டுள்ளது, இது ஒரு மென்மையான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்குகிறது. மைலேஜைப் பொறுத்தவரை, இந்த பைக் லிட்டருக்கு சராசரியாக சுமார் 55 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும்.

4 / 5

பஜாஜ் பிளாட்டினா 110 பைக் சிறந்த மைலேஜ் மற்றும் வசதியான சவாரிக்கு பெயர் பெற்றது. இதன் தொடக்க எக்ஸ் ஷோரூம் விலை சுமார் ரூ. 69,832. இது 115.45சிசி எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது அதிக பவர் மற்றும் மைலேஜ் கொண்ட பைக்குகளை தேடுபவர்களுக்கு சிறந்த ஆப்சன். இந்த பைக் லிட்டருக்கு சுமார் 70 கி.மீ மைலேஜ் வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது.

5 / 5

டிவிஎஸ் ஸ்போர்ட் ஒரு பிரபலமான பட்ஜெட் விலையில் கிடைக்கம் ஒரு பைக். இதன் ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலை சுமார் ரூ.55,500. இது 109.7cc எஞ்சின் கொண்டுள்ளது. இது அன்றாட பயணங்களுக்கு போதுமான பவரை வழங்குகிறது. மைலேஜைப் பொறுத்தவரை, இது சராசரியாக லிட்டருக்கு 70 கி.மீ வரை மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாகவும் கருதப்படுகிறது.

Follow Us