மூங்கில் காடுகள் நிறைந்த யானைகள் நடமாடும் பகுதி.. தங்கியிருந்து சுற்றி பார்க்க ஏற்ற இடம்.. கிருஷ்ணகிரியில் இருந்து 2 மணி நேர பயணம் தான்! | TV9 Tamil News

மூங்கில் காடுகள் நிறைந்த யானைகள் நடமாடும் பகுதி.. தங்கியிருந்து சுற்றி பார்க்க ஏற்ற இடம்.. கிருஷ்ணகிரியில் இருந்து 2 மணி நேர பயணம் தான்!

Published: 

22 Feb 2026 12:27 PM

 IST

Aiyur Eco Park Tourist Spot: தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் வரிசையில் இன்று நாம் பார்க்கப்போவது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள அய்யூர் சுற்றுச்சூழல் பூங்காவாகும். இந்த பூங்காவுக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள் வீடு திரும்ப மனமில்லாமல் மாறும் அளவுக்கு இங்கு சுற்றுலா இடங்கள் அமைந்துள்ளன.

1 / 5தமிழகத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரபலமான சுற்றுலா தலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சுற்றுலா தலம் குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  தேன்கனிக்கோட்டைக்கு அருகில் அய்யூர் காப்புக் காட்டுக்குள் அமைந்துள்ளது சுற்றுச்சூழல் பூங்கா.  இந்த பூங்காவானது  மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 1060 மீட்டர் உயரத்தில்  அமைந்துள்ளது. கடல் மட்டத்தில்  இருந்து  சுமார் 3000 அடி உயரம் ஆகும். இவ்வளவு உயரத்தில் அமைந்துள்ளதால், இந்தப் பகுதி மிகவும் குளிர்ச்சியான சூழலுக்கு பெயர் பெற்றது.

தமிழகத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரபலமான சுற்றுலா தலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சுற்றுலா தலம் குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டைக்கு அருகில் அய்யூர் காப்புக் காட்டுக்குள் அமைந்துள்ளது சுற்றுச்சூழல் பூங்கா. இந்த பூங்காவானது மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 1060 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 அடி உயரம் ஆகும். இவ்வளவு உயரத்தில் அமைந்துள்ளதால், இந்தப் பகுதி மிகவும் குளிர்ச்சியான சூழலுக்கு பெயர் பெற்றது.

2 / 5

மிகவும் ரம்மியமான சூழலில் காணப்படும் இந்த பூங்கா பகுதியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் வனத்துறை சார்பில் மூங்கில் காடுகள், மர குடில்கள், நவீன கண்காணிப்பு கோபுரங்கள், பூங்காக்கள், செயற்கை நீர் வீழ்ச்சிகள், குழந்தைகள் பூங்கா, மூங்கில் குடில்கள், ஹரிடேஜ் குடில் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இயற்கை சூழல் சார்ந்து அமைந்துள்ள இந்த இடமானது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா விரும்பிகளை கவரக்கூடிய பகுதியாகும்.

3 / 5

இந்தப் பகுதியானது யானைகள் அதிக அளவு வாழக்கூடிய இடமாகும். இதனால், இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்து வருகிறது. இங்கு உள்ள சாமி ஏரியில் நிறைந்திருக்கும் தண்ணீரை குடிப்பதற்காக ஏராளமான யானைகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகள் வருவது வழக்கமாகும். அவ்வாறு வருகை தரும் விலங்குகளை சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான முறையில் கண்கூறாக கண்டு ரசிக்கலாம். அதற்காக வனத்துறை சார்பில் வாட்ச் டவர் (சுற்றிபார்க்கும் கோபுரம்) அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீது நின்று கொண்டு சாமி ஏரியில் தண்ணீர் பருகும் விலங்குகளை பார்க்கலாம்.

4 / 5

இதனால், இந்த சுற்றுலா தலம் ஒரு திரில்லிங்கான அனுபவத்தை நமக்கு தரும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. இந்த பகுதிக்கு வந்துவிட்டு குளிக்காமல் சென்றால் எப்படி. இதற்காகவே இந்த பகுதியில் ஏராளமான நீர்வீழ்ச்சிகள் உள்ளன. அந்த அருவிகளுக்கு சுற்றுலா வழிகாட்டி மூலம் சென்று பாதுகாப்பான முறையில் நீராடி விட்டு வரலாம். இந்த பகுதியில் தங்கியிருந்து சுற்றி பார்க்க விரும்பினால், வனத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளில் முகாமிட்டு இந்த பகுதியை திகைக்க திகைக்க சுற்றிப் பார்க்கலாம்.

5 / 5

இந்த பகுதியில் ஏராளமான மரங்கள் படர்ந்து, அடர்ந்து வளர்ந்துள்ளதால் சூரிய வெளிச்சம் உள்ளே வராத அளவுக்கு குளிர்ச்சியான சூழல் நிலவும். இந்த பகுதிக்கு ஆண்டுதோறும் தமிழகம், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதுடன் தங்கி இருந்து சுற்றி பார்த்து செல்கின்றனர். இந்த பகுதியில் தங்குவதற்கு ரூ.1000 முதல் வரை தங்கும் அறைகள் உள்ளன. உணவு பொருட்கள் வாங்கிக் கொடுத்தால் அதனை சமைத்து கொடுப்பதற்கு ஆட்களும் இங்கு உள்ளனர். கிருஷ்ணகிரியில் இருந்து குமார் 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதிக்கு 2 மணி நேரத்தில் சென்றடையலாம்.