இனி வீட்டிலிருந்தபடியே ஈஸியா ஆதாரில் முகவரி மாற்றலாம் – வந்தாச்சு புது அப்டேட்! | TV9 Tamil News

இனி வீட்டிலிருந்தபடியே ஈஸியா ஆதாரில் முகவரி மாற்றலாம் – வந்தாச்சு புது அப்டேட்!

Published: 

15 Apr 2026 16:40 PM

 IST

Aadhaar Update Made Easy : ஆதார் விவரங்களை மாற்ற மக்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் தற்போது, ஸ்மார்ட்போன் மூலம் வீட்டிலிருந்தபடியே இந்த பணிகளை எளிதாக செய்ய முடியும். இது குறிப்பாக கிராமப்புறங்கள் வசிப்பவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.

1 / 5இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கும் மிக முக்கியமான ஆவணமாக இருக்கும் ஆதார் கார்டை அப்டேட் செய்வது மிக எளிய செயல்முறையாக மாறியிருக்கிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம், தனது அதிகாரப்பூர்வ மொபைல் செயலியின் மூலம், ஆதார் விவரங்களை ஆன்லைனில்  அப்டேட் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், மொபைல் எண் மற்றும் முகவரி மாற்றம் செய்ய, ஆதார் மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் போயுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கும் மிக முக்கியமான ஆவணமாக இருக்கும் ஆதார் கார்டை அப்டேட் செய்வது மிக எளிய செயல்முறையாக மாறியிருக்கிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம், தனது அதிகாரப்பூர்வ மொபைல் செயலியின் மூலம், ஆதார் விவரங்களை ஆன்லைனில் அப்டேட் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், மொபைல் எண் மற்றும் முகவரி மாற்றம் செய்ய, ஆதார் மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் போயுள்ளது.

2 / 5

மொபைல் எண்ணை மாற்றுவதற்கு, முதலில் ஆதார் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் Update Mobile Number என்ற ஆப்சனைத் தேர்வு செய்து, நாம் மாற்ற வேண்டிய புதிய எண்ணை உள்ளிட வேண்டும். அதற்கு வரும் OTP-ஐ பதிவு செய்து, முகஅடையாள சரிபார்ப்பு (Face Authentication) முடித்தால், விண்ணப்பம் அனுப்பப்படும். அதன் பின்னர் UIDAI மூலம் சரிபார்ப்பு செய்யப்பட்டு, நமது வேண்டுகோள் நிறைவேற்றப்படும்.

3 / 5

அதேபோல், முகவரியை மாற்றிக்கொள்ளலாம். இதற்கு ஆதார் செயலியில் நமது ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணும் லாகின் செய்ய வேண்டும். பின்னர் Address Update பகுதியில் புதிய முகவரியை பதிவு செய்ய வேண்டும். தேவையான ஆவணங்களை பதிவேற்றி, ரூ.75 கட்டணம் செலுத்திய பின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இந்த செயல்முறையின் நிலையை செயலியிலேயே தொடர்ந்து கண்காணிக்கவும் முடியும்.

4 / 5

இந்த பணிகள் முடிவடைந்ததும் நம் போனுக்கு அப்டேட் செய்யப்பட்டது குறித்து தகவல் அனுப்பப்படும். இந்த புதிய ஆன்லைன் வசதி, மக்கள் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்துகிறது.

5 / 5

மேலும், நம் கோரிக்கை எந்த நிலையில் இருக்கிறது என்ற நிலையையும் நம் உடனுக்குடன் ஆதார் செயலி வழியாக தெரிந்து கொள்ள முடியும். இந்த முயற்சி, இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்திற்கு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இனி, ஆதார் விவரங்களை புதுப்பிப்பது சுலபம் மட்டுமல்ல, வேகமாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறும்.

Follow Us