முடி உதிர்வதற்கான காரணங்கள் என்ன? தவிர்ப்பது எப்படி?

Hair Growth Tips : உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஐம்பது வயதிற்குப் பிறகும் உங்கள் தலைமுடியை வளர்க்கலாம். இதற்கு முடிவதற்கான காரணத்தை கண்டறிவதும், பொறுமையான மற்றும் சரியான கவனித்துக்கொள்வதாலும் முடி உதிர்வதை தவிர்க்க முடியும். இந்த கட்டுரையில் முடி உதிர்வதற்கான பொதுவான காரணங்கள் என்ன ? தவிர்ப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

முடி உதிர்வதற்கான காரணங்கள் என்ன? தவிர்ப்பது எப்படி?

மாதிரி புகைப்படம்

Updated On: 

11 Jun 2025 22:27 PM

 IST

பொதுவாக வயதாகும் போது சில உடலில் ஏற்படும் மாற்றங்களை தவிர்க்க முடியாது. உடலில் ஏற்படும் மாற்றங்களை தள்ளிப்போடலாமே தவிர தவிர்க்க முடியாது. குறிப்பாக வயதான ஆண்களும் பெண்களும்  பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதில் தோல் மற்றும் முடி சம்மந்தப்பட்ட பிரச்னைகள் அடங்கும். குறிப்பாக முடி நரைத்தல் முக்கிய பிரச்னையாக இருக்கும். வயதாவதற்கு அறிகுறியாக முடி நரைத்தல் பிரச்னைகள் இருந்து வருகிறது. ஊட்டசத்து குறைபாட்டால் இள நரையை சரியான ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் சரி செய்யலாம். ஆனால் வயதான பிறகு ஏற்படும் முடி நரைத்தல் பிரச்னைைகளை சரி செய்ய முடியாது என மருத்துவர்கள் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் முடி உதிர்தல், முடி போன்ற பிரச்னைகளை சரியான கவனம் மற்றும் பராமரிப்புடன் சரி செய்யலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த கட்டுரையில் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்து பார்க்கலாம்.

முடி ஆரோக்கியத்தை பராமரிக்க மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்

  • வயது வித்தியாசமின்றி, முடி வளர்ச்சிக்கு சத்தான உணவு மிக முக்கியமானது. புரதம், வைட்டமின்கள் குறிப்பாக பயோட்டின், வைட்டமின்கள் ஏ, சி, டி மற்றும் ஈ, மற்றும் துத்தநாகம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் நிறைந்த உணவை உட்கொள்வது முடி ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். உங்கள் உணவில் கீரைகள், பழங்கள், பாதாம், வால்நட் போன்ற நட்ஸ், பருப்பு வகைகள், முட்டை மற்றும் மீன் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • போதுமான தண்ணீர் குடிப்பது அவசியம். உடலில் நீர் சத்துடன் இருப்பது உங்கள் முடி வேர்களை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். மேலும் முடி உடைவதைத் தடுக்கும்.
  • ரசாயனங்கள் குறைவாக உள்ள மற்றும் முடிக்கு தீங்கு விளைவிக்காத ஷாம்புக்களை பயன்படுத்த வேண்டும்.
  •  உங்கள் தலைமுடி ஈரமாக இருக்கும்போது வலுக்கட்டாயமாக சீவுவதைத் தவிர்க்கவும். அகன்ற பற்கள் கொண்ட சீப்பைப் பயன்படுத்தி உங்கள் தலைமுடியின் சிக்குகளை அகற்றவும்.
  • ஹேர் ட்ரையர்கள், ஸ்டிரைட்னர்கள் போன்றவற்றின் பயன்பாட்டைக் குறைக்கவும்.
  •  எண்ணெய் மசாஜ் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், முடி வேர்களுக்கு ஊட்டமளிக்கவும் உதவும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்யலாம்.
  • அதிகப்படியான மன அழுத்தம் முடி உதிர்தலுக்கு ஒரு முக்கிய காரணமாகும். யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சி மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சி செய்யுங்கள்.
  • புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்கவும்.  இவை முடி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
  • முடி உதிர்தல் அதிகமாக இருந்தால், தோல் மருத்துவரை அணுகுவது நல்லது. ஹார்மோன் மாற்றங்கள், ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் பிற நோய்கள் முடி உதிர்தலை ஏற்படுத்தும். முடி உதிர்வதற்கான காரணத்தை கண்டறிந்து சரி செய்வது முக்கியம்.

இந்த விஷயங்களில் கவனம் செலுத்தினால், ஐம்பது வயதிற்குப் பிறகும் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முடியை வளர்க்கலாம்.  இதற்கு பொறுமையான மற்றும் நிலையான கவனிப்பு மிகவும் அவசியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

புதியதாக வாகனம் வாங்குபவர்கள் RTO செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..
எதிர் காலத்தை கணிக்கும் சீன கோயில்…அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா!
ஜனவரி 12ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் PSLV C62.. சிறப்புகள் என்ன?
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!