தமிழ்நாடு 3 நாள் சுற்றுலாத் திட்டம்: இப்போதே முன்பதிவு செய்யுங்கள்!

Summer Tour Packages: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கோடைக்காலத்தை முன்னிட்டு உதகை, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட பல இடங்களுக்கு 3 நாள் சுற்றுலாத் திட்டங்களை அறிவித்துள்ளது. சொகுசு பேருந்துகள், தங்குமிடம், உணவு வசதிகள் அடங்கும். வெள்ளிக்கிழமை தொடங்கி திங்கட்கிழமை முடியும்.

தமிழ்நாடு 3 நாள் சுற்றுலாத் திட்டம்:  இப்போதே முன்பதிவு செய்யுங்கள்!

தமிழ்நாடு 3 நாள் சுற்றுலாத் திட்டம்

Published: 

06 May 2025 08:45 AM

தமிழ்நாடு மே 06: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (Tamil Nadu Tourism Development Corporation) கோடைக்காலத்தை (Summer Season) முன்னிட்டு உதகை, கொடைக்கானல், ஏற்காடு, ஒகேனக்கல், மைசூரு, பெங்களூரு, குற்றாலம் மற்றும் மூணார் உள்ளிட்ட இடங்களுக்கு 3 நாள் சுற்றுலா திட்டங்களை அறிவித்து, முன்பதிவைத் தொடங்கியுள்ளது. பயணத்தில் தங்கும் வசதி மற்றும் 6 வேளை உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், வால்வோ மற்றும் சொகுசு பேருந்துகள் மூலம் பயணம் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு சுற்றுலா பயணமும் வெள்ளிக்கிழமை தொடங்கி திங்கட்கிழமை நிறைவடைகிறது. முக்கிய சுற்றுலா தலங்கள், நீர்வீழ்ச்சிகள், பூங்காக்கள், படகு சவாரி உள்ளிட்டவை பயணத்திலடங்கும். கட்டணத்தில் சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதிய அறிவிப்பு

கோடைக்காலத்தை முன்னிட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பல பிரபலமான சுற்றுலா தலங்களுக்கு மூன்று நாள் சுற்றுலா திட்டங்களை அறிவித்து, அதன் முன்பதிவைத் தொடங்கியுள்ளது. இந்த திட்டங்களில் உதகை, கொடைக்கானல், ஏற்காடு, ஒகேனக்கல், மைசூரு, பெங்களூரு, குற்றாலம் மற்றும் மூணார் உள்ளிட்ட இடங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

சிறப்பு சலுகைகள் மற்றும் பயண வசதிகள்

ஏப்ரல் முதல் ஜூன் வரை செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த சுற்றுலாப் பயணங்களுக்கு கட்டணத்தில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணங்களுக்கு தங்கும் வசதி மற்றும் 6 வேளை உணவு கழகத்தால் வழங்கப்படுகிறது. பயணிகளின் எண்ணிக்கையை பொருத்து, வால்வோ சொகுசுப் பேருந்துகள், உயர் தர பேருந்துகள், சிற்றுந்து பேருந்துகள் போன்றவையால் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா தலங்கள் மற்றும் பயண விவரம்

உதகை: வெள்ளிக்கிழமை இரவு 7.30க்கு புறப்படும் பேருந்து திங்கள்கிழமை காலை 6.30க்கு திரும்பும். தொட்டபெட்டா, தாவரவியல் பூங்கா, படகு சவாரி உள்ளிட்ட இடங்கள் இடம்பெயர்கின்றன.

கொடைக்கானல்: வெள்ளி 7.30க்கு புறப்பட்டு திங்கள் காலை 6க்கு திரும்பும். தூண் பாறை, பசுமை சமவெளி, நட்சத்திர ஏரி, வெள்ளி நீர்வீழ்ச்சி ஆகிய இடங்கள் கவர்ச்சி மையங்கள்.

ஏற்காடு – ஒகேனக்கல்: வெள்ளி 10.30க்கு புறப்படும் பயணம் திங்கள் காலை 6க்கு முடிவடைகிறது. ஜென்ஸ் சீட், பகோடா பாயிண்ட், ரோஸ் கார்டன், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்கள் செல்லப்படும்.

மைசூரு – பெங்களூரு: வெள்ளி 9.30க்கு புறப்பட்டு திங்கள் காலை 6க்கு திரும்பும். சாமுண்டீஸ்வரி கோயில், மைசூர் அரண்மனை, லால்பாக் பூங்கா உள்ளிட்ட முக்கிய இடங்கள் அடங்கும்.

குற்றாலம்: வெள்ளி மாலை 4.30க்கு புறப்பட்டு திங்கள் காலை 6க்கு திரும்பும். குற்றாலம் நீர்வீழ்ச்சி, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை ஆகியவை சுற்றுலா பகுதிகள்.

மூணார்: வெள்ளி மாலை 4.30க்கு புறப்பட்டு திங்கள் காலை 7க்கு திரும்பும். மறையூர், இரவிக்குளம் வனவிலங்கு சரணாலயம், பிளாஸம் பார்க் ஆகியவை இடங்களாகும்.

கட்டண விவரம் (நபர் ஒருவருக்கான கட்டணம் ரூபாயில்)

இடம்                                         தனியறை       இருவர் பகிரும் அறை       சிறியவர்கள்
உதகை                                  ₹8,500                   ₹7,300                                         ₹6,900
கொடைக்கானல்              ₹8,500                    ₹7,300                                         ₹6,900
ஏற்காடு-ஒகேனக்கல்     ₹8,000                   ₹7,000                                          ₹6,800
மைசூரு-பெங்களூரு      ₹8,200                   ₹7,000                                          ₹6,700
குற்றாலம்                             ₹8,000                   ₹7,000                                           ₹6,500
மூணார்                                  ₹8,300                   ₹7,000                                          ₹6,800

முன்பதிவு மற்றும் தொடர்பு விவரங்கள்

இந்த சுற்றுலா திட்டங்களுக்கு முன்பதிவை www.ttdconline.com இணையதளம் மூலம் அல்லது சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்தில் நேரில் செய்துகொள்ளலாம். கூடுதல் தகவலுக்கு கட்டணமில்லா தொலைபேசி 1800 425 1111, 044-25333333, 044-25333444, அல்லது கைபேசி/வாட்ஸ்அப் 7550063121 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.