Food Recipes: பனீர் டிக்கா மசாலா சாப்பிட ஆசையா..? வீட்டிலேயே எளிதாக இப்படி செய்து பாருங்க!

Paneer Tikka Masala: இந்தக் கட்டுரை வீட்டிலேயே சுவையான பனீர் டிக்கா மசாலா செய்வது எப்படி என்பதை விளக்குகிறது. தேவையான பொருட்கள், படிப்படியான செய்முறை மற்றும் சில பயனுள்ள குறிப்புகள் இதில் அடங்கும். ஹோட்டல் தரத்தில் பனீர் டிக்கா மசாலாவை வீட்டிலேயே எளிதாகவும், மலிவாகவும் தயாரிக்கும் வழிமுறைகளை இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது. உங்கள் குடும்பத்தினருக்கு இந்த சுவையான உணவை அனுபவிக்கச் செய்யுங்கள்!

Food Recipes: பனீர் டிக்கா மசாலா சாப்பிட ஆசையா..? வீட்டிலேயே எளிதாக இப்படி செய்து பாருங்க!

பனீர் டிக்கா மசாலா

Published: 

01 May 2025 20:14 PM

பனீர் டிக்கா மசாலா (Paneer Tikka Masala) என்ற பெயரை கேட்டாலே இங்கு பலருக்கு நாக்கில் தண்ணீர் ஊறும். அந்த அளவிற்கு அதன் சுவை நம் நாக்கில் நடனமாடும். உணவு பொருளான பனீரை பொறுத்தவரை இது கோடை காலம் (Summer) மட்டுமின்றி, எந்த காலத்திலும் எடுத்துகொள்ளலாம். பனீரை பொறுத்தவரை நீங்கள் எப்போது சாப்பிட்டாலும், அது உடலில் எந்த பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. பனீர் டிக்கா மசாலா போன்ற ரெசிபிகள் பெரும்பாலும் நாம் ஹோட்டல்களிலோ அல்லது உணவகங்களிலோ தான் சுவைப்போம். இவை தரத்தில் போதுமானதாக இருந்தாலும், அதிக செலவை கொடுக்கலாம். இப்படியான சூழ்நிலையில், நீங்கள் பனீர் பிரியராக இருந்தால், வீட்டிலேயே எப்படி பனீர் டிக்கா மசாலா செய்யலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

பனீர் டிக்கா மசாலா செய்ய தேவையான பொருட்கள்:

டிக்கா செய்ய தேவையான பொருட்கள்:

பனீர் – 250 கிராம்
கொத்தமல்லி தூள் – 1 ஸ்பூன்
தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
சீரகம் தூள் – 1/1 ஸ்பூன்
மிளகு தூள் – 1/2 ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – 1 ஸ்பூன்
சாட் மசாலா – 1 ஸ்பூன்
எலுமிச்சை – 1
எண்ணெய் – தேவையான அளவு

பனீர் டிக்கா மசாலா செய்ய தேவையான பொருட்கள்:

நறுக்கிய வெங்காயம் – 2
நறுக்கிய தக்காளி – 2
கொத்தமல்லி விதைகள் – 1 மேசைக்கரண்டி
இலவங்கப்பட்டை – 1 அங்குல துண்டு
பெரிய ஏலக்காய் – 1
சிவப்பு மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
உலர்ந்த சிவப்பு மிளகாய் – 2
கரம் மசாலா – 1 ஸ்பூன்
அரைத்த கசூரி மேத்தி – 1/2 ஸ்பூன்
கிரீம் – 1/4 கப்
முந்திரி – 10

பனீர் டிக்கா மசாலா செய்வது எப்படி..?

  1. பனீர் டிக்கா மசாலா செய்ய முதலில் வாங்கிய பனீரை உங்களுக்கு தேவையான அளவில் சதுர வடிவில் வெட்டி எடுத்து கொள்ளுங்கள்.
  2. அடுத்ததாக ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் தயிர், மிளகாய் தூள், உப்பு, சாட் மசாலா, கொத்தமல்லி தூள், உப்பு, மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
  3. இப்போது அந்த கலவையில் வெட்டி வைத்துள்ள பனீரை போட்டு சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இப்போது ஒரு கடாயை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி கேஸில் சூடாக்கவும். இதற்குப் பிறகு, மரினேட் செய்யப்பட்ட பனீரை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுக்கவும்.
  4. பனீரை பொன்னிறமாக மாறும் வரை திருப்பிப் போட்டு வறுக்கவும். இப்போது வறுத்த பனீரை ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும்.
  5. இப்போது மீண்டும் அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்து சூடாகும் வரை காத்திருக்கவும். எண்ணெய் சூடானதும் கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், இலவங்கப்பட்டை, ஏலக்காய் சேர்த்து லேசாக பிரட்டவும்.
  6. இதற்கு பிறகு வெங்காயம், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து மென்மையாகி வரும் வரை வதக்கவும். வதங்கியதும் மிளகாய தூள் மற்றும் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
  7. அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து குழம்பு பேஸ்ட் தயாரிக்கவும். இப்போது மீண்டும் வாணலியில் எண்ணெயை சூடாக்கி, குழம்பு மற்றும் அரை கப் தண்ணீரைச் சேர்த்து, மிதமான தீயில் சமைக்கவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கசூரி மேத்தியைச் சேர்க்கவும்.
  8. இதற்குப் பிறகு வறுத்த பனீர் டிக்காவைச் சேர்த்து, குழம்பு கெட்டியாகும் வரை குறைந்த தீயில் சமைக்கவும். குழம்பு கெட்டியானதும், அதனுடன் கிரீம் சேர்த்து மற்றொரு நிமிடம் வதக்கி, கேஸை அணைக்கவும்.
  9. அவ்வளவுதான், பனீர் டிக்கா மசாலா ரெசிபி ரெடி. கடைசியாக உங்களுக்கு தேவையென்றால் கொத்தமல்லி தூவலாம்.