SuperMoon: இன்னைக்கு நைட் ரெடியா இருங்க.. வானில் தெரியும் அதிசயம்!

October Harvest Moon: அக்டோபர் 6 மற்றும் 7 ஆம் தேதி இரவுகளில் வானில் தோன்றும் சூப்பர் மூன் நிகழ்வு ஒரு அரிய வானியல் அதிசயமாகும். இது வழக்கத்தை விட 14% பெரியதாகவும், 30% பிரகாசமாகவும் தோன்றும். சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரும் "பெரிஜி" நிலையில் இது ஏற்படுகிறது.

SuperMoon: இன்னைக்கு நைட் ரெடியா இருங்க.. வானில் தெரியும் அதிசயம்!

சூப்பர் மூன்

Updated On: 

06 Oct 2025 09:23 AM

 IST

இந்தியா, அக்டோபர் 6: கடந்த 2025 செப்டம்பர் மாதம் இந்தியா முழுவதும் காணப்பட்ட முழு சந்திர கிரகணத்தின் போது நிலா இரத்தச் சிவப்பு நிறமாக மாறி அனைவரையும் சிலிர்ப்படைய செய்ததது. இந்நிலையில் உலகெங்கிலும் உள்ள வானியல் பார்வையாளர்களை ஆச்சரியமூட்டும் வகையில் மற்றொரு சம்பவம் அக்டோபர் 6ஆம் தேதியான இன்று நிகழவுள்ளது. அதுதான் ஒரு சூப்பர் மூன். புரட்டாசி மாத பௌர்ணமி இன்று கடைபிடிக்கப்படும் நிலையில் இன்று வானில் தெரிவது வெறும் முழு நிலவு அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணம் இது வழக்கத்தை விட 14 சதவிகிதம் பெரியதாகவும், சுமார் 30 சதவிகிதம் பிரகாசமாகவும், இரவு வானில் தொங்கும் ஒரு பெரிய பந்தைப் போல ஒளிரும் எனவும் கூறப்பட்டுள்ளது. உலக நேர கணக்கீட்டின்படி அக்டோபர் 6ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி இரவு வரை வானில் சூப்பர் மூன் தோன்றும் என கூறப்படுகிறது.

சூப்பர் மூன் பற்றிய பதிவு

இதையும் படிங்க: கொஞ்சம் சிரிங்க பாஸ்! புன்னகை முகத்துடன் காட்சியளிக்கப்போகும் நிலா.. எப்போது தெரியுமா..?

காரணம் என்ன தெரியுமா?

வானியல் ஆய்வாளர்கள் இந்த சூப்பர் மூன் தோன்ற காரணம் பற்றி விளக்கியுள்ளனர். அதாவது சந்திரன் முழுமையாக நிலவாக இருக்கும்போதும், அதன் சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும். அப்போது இந்த சூப்பர் மூன் ஏற்படுகிறது, இந்த நிலையை வானியலாளர்கள் பெரிஜி என்று அழைக்கிறார்கள். இந்த நெருக்கத்தின் காரணமாக, சந்திரன் தொலைவில் இருக்கும்போது, ​​அதாவது அபோஜி எனப்படும் ஒரு புள்ளியில் இருப்பதை விட, குறிப்பிடத்தக்க அளவில் பெரியதாகவும் பிரகாசமாகவும் தெரிகிறது என கூறியுள்ளனர்.

முன்னதாக கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி வானில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அதாவது பூமியின் நிழல் பிளவு 95 சதவிகிதம் ஒளிரும் நிலவின் தீவிர இடது பக்கத்தில் விழுந்தது. இது அறுவடை சூப்பர் மூன் என அழைக்கப்படுகிறது. அதனை தவற விட்டவர்கள் அக்டோபர் 6 ஆம் தேதி பௌர்ணமி நாளில் வெளிப்படும் சூப்பர் மூனை காணலாம் என கூறப்பட்டுள்ளது.’

இதையும் படிங்க: ஓடும் ரயிலில் புகைப்படிக்கும் இளம் பெண்; வைரல் வீடியோ

சூப்பர்மூனைப் பார்ப்பதற்கு எந்த சிறப்பு உபகரணங்களும் தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் வானம் இருட்டியவுடன் வெளியே சென்று வெற்றுக் கண்ணால் காணலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது. சிறந்த அனுபவம் கிடைக்க வேண்டும் என்றால், விளக்கு வெளிச்சங்களிலிருந்து விலகி இருட்டான ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கவும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூரியன் மறைவுக்குப் பின் சந்திரன் அடிவானத்தில் உதயமாகும்போது ​​”சந்திர மாயை” எனப்படும் ஒளியியல் மாயையால் அது இன்னும் பெரியதாகத் தோன்றக்கூடும்  என வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.