பயங்கரவாதிகள் 10 பேரை சுட்டுக் கொன்ற ராணுவம்.. மியான்மர் எல்லையில் நடந்த சம்பவம்!

Manipur Encounter : மியான்மர் எல்லையில் உள்ள மணிப்பூர் சண்டேல் பகுதியில் இந்திய ராணுவம் 10 பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து, நடந்த தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இன்னும் அப்பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயங்கரவாதிகள் 10 பேரை சுட்டுக் கொன்ற ராணுவம்.. மியான்மர் எல்லையில் நடந்த சம்பவம்!

ராணுவம்

Updated On: 

15 May 2025 07:27 AM

மணிப்பூர், மே 15 : மணிப்பூர் மாநிலம் சண்டேல் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இன்னும் அப்பகுதியில் சோதனை நடந்து வருகிறது. மியான்மர் எல்லையில் உள்ள மணிப்பூர் சண்டேல் பகுதியில் பயங்கரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக அசாம் ராணுவத்திற்கு தகவல் வந்தது. தகவலை அடுத்து, ராணுவம் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டது. சந்தேல் மாவட்டத்தின் கெங்ஜாய் தெஹ்ஸில் உள்ள நியூ சாம்தால் கிராமத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது, ராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், 10 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இதனால், அப்பகுதியில் பதற்றம் சூழல் நிலவுகிறது. மேலும்,  பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தேடுல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயங்கரவாதிகள் 10 பேரை சுட்டுக் கொன்ற ராணுவம்

இதுகுறித்து இந்திய ராணுவத்தின் கிழக்கு கமேண்ட் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “இந்தோ மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள சாண்டல் மாவட்டம் கெங்ஜாய் தெஹ்சில் நியூ சாம்தால் கிராமத்திற்கு அருகில் ஆயுதங்களுடன் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தது. இந்த தகவலை அடுத்து, அசாம் ரைபிள்ஸ் பிரிவு 2025 மே 14 அன்று தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது.

இந்த நடவடிக்கையின் போது, ​​ பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதற்கு பயங்கரவாதிகளுக்கு பதிலடி தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயங்கரமான ஆயுதங்கள், வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

மியான்மர் எல்லையில் நடந்த சம்பவம்

மணிப்பூர் முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியா ராணுவம் ஈடுபட்டு வருகிறது. அண்மையில் கூட, 2025 மே 10ஆம் தேதி மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் இணைந்து நடந்த தேடுதல் வேட்டையில், 13 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளனர். இதற்கிடையில், காஷ்மீர் எல்லையில் இந்தியா ராணுவம் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.  பஹல்காம் தாக்குதலுக்கு இன்னும் தீவிரம் அடைந்துள்ளது.  இதனால், எல்லையில் பரபரப்பான சூழலே நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.