Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சீலம்பூர் கொலை: “லேடி டான்” என்ற பெண் குற்றவாளிக்கு தொடர்பா..?

Seelampur Teen: டெல்லியில் 24 மணி நேரத்தில் மூன்று கொலைகள் நடந்துள்ளன, சீலம்பூரில் 17 வயது இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் "லேடி டான்" என அழைக்கப்படும் பெண் குற்றவாளி தொடர்புடையவர் என கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது.

சீலம்பூர் கொலை: “லேடி டான்” என்ற பெண் குற்றவாளிக்கு தொடர்பா..?
சீலம்பூர் கொலை Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 19 Apr 2025 11:35 AM

டெல்லி ஏப்ரல் 19: டெல்லியின் சீலம்பூரில் இளைஞர் (Youth in Seelampur, Delhi) ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் “லேடி டான்” (Lady Don) என அழைக்கப்படும் பெண் குற்றவாளிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி, ஆம் ஆத்மி மற்றும் பாரதிய ஜனதா கட்சி (Aam Aadmi Party and Bharatiya Janata Party) இடையே குற்றச்சாட்டு மோதலாக வளர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்காக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் இந்த வழக்கில் சிலரை கைது செய்து, மேலும் சிலரை தேடி வருகின்றனர். இதேபோல், டெல்லியில் 24 மணி நேரத்தில் மூன்று கொலைகள் நடந்துள்ளன. மூன்றும் தனித்தனி வழக்காக விசாரணை நடைபெற்று வருகிறது.

கொலை சம்பவத்தின் பின்னணி

சீலம்பூரில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, கொலைக்கு காரணமானவர்கள் விரைவில் கைது செய்யப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

“லேடி டான்” தொடர்பு

இந்த கொலை வழக்கில் “லேடி டான்” என்று அழைக்கப்படும் பெண் குற்றவாளிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். “லேடி டான்” ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது.

அரசியல் மோதல்

இந்த கொலை வழக்கில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக இடையே அரசியல் மோதல் வெடித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி, பாஜகவை குற்றம் சாட்டி வருகிறது. பதிலுக்கு பாஜக, ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.

“>

 

காவல்துறை விசாரணை

காவல்துறை இந்த கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரை சிலரை கைது செய்துள்ளதாகவும், மேலும் பலரை தேடி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த கொலைக்கான உண்மையான காரணம் மற்றும் குற்றவாளிகள் யார் என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை.

தலைநகரில் நடந்த முன்று கொலைகள்

டெல்லியில் 24 மணி நேரத்திற்குள் மூன்று படுகொலை சம்பவங்கள் நடைபெற்று மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் சம்பவம் மத்திய டெல்லியின் நபி கரீம் பகுதியில் நடந்தது. மோட்டார் சைக்கிளில் சென்ற மகேந்திரா என்பவர், மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி, லக்கி மற்றும் சாகர் ஆகிய இருவரால் கூரிய ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டார்.

இரண்டாவது சம்பவம் பஞ்சாபி பஸ்தியில் நடந்தது. அங்கு ஆஷிஷ் ஆனந்த் என்ற இளைஞர், தனது வீட்டின் முன்பு மது அருந்திய குழுவை தட்டிக்கேட்டதற்காக கத்திக்குத்தால் கொலை செய்யப்பட்டார். இவரது தாய், இது முன்விரோதத்தின் விளைவு எனக் கூறியுள்ளார்.

மூன்றாவது சம்பவம் சீலம்பூர் பகுதியில் நிகழ்ந்தது, அங்கு 17 வயதான குணால் என்பவர் மர்ம கும்பலால் கத்திக்குத்து செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூன்றும் தனித்தனி வழக்காக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுந்தர் பிச்சையின் பாதுகாப்புக்கு மட்டும் இத்தனை கோடியா?
சுந்தர் பிச்சையின் பாதுகாப்புக்கு மட்டும் இத்தனை கோடியா?...
என்னால் கார்த்தி மாதிரி நடிக்க முடியாது - நடிகர் சூர்யா ஓபன் டாக்
என்னால் கார்த்தி மாதிரி நடிக்க முடியாது - நடிகர் சூர்யா ஓபன் டாக்...
முருகன் அருளால் சுஜாதா வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவம்!
முருகன் அருளால் சுஜாதா வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவம்!...
உடல் எடை குறைப்பு மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைக்க இயற்கையான தீர்வு!
உடல் எடை குறைப்பு மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைக்க இயற்கையான தீர்வு!...
இந்திய ரயில்வேயா? இந்தி ரயில்வேயா? – எம்.பி. வெங்கடேசன் கேள்வி
இந்திய ரயில்வேயா? இந்தி ரயில்வேயா? – எம்.பி. வெங்கடேசன் கேள்வி...
ரெட்ரோ படத்தின் வசூலை முந்தியதா நானியின் ஹிட் 3?
ரெட்ரோ படத்தின் வசூலை முந்தியதா நானியின் ஹிட் 3?...
வெற்றிநடைப் போடும் டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ் எப்போது?
வெற்றிநடைப் போடும் டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ் எப்போது?...
சிறந்த கிரெடிட் கார்டுகளை தேர்ந்தெடுப்பது எப்படி?
சிறந்த கிரெடிட் கார்டுகளை தேர்ந்தெடுப்பது எப்படி?...
பல்கலை. தலைமைக் கழகங்களாக மாறாது என்பது என்ன நிச்சயம்? தமிழிசை
பல்கலை. தலைமைக் கழகங்களாக மாறாது என்பது என்ன நிச்சயம்? தமிழிசை...
வாழ்க்கையில் இந்த 5 பேரை எப்போதும் நம்பாதீர்கள்!
வாழ்க்கையில் இந்த 5 பேரை எப்போதும் நம்பாதீர்கள்!...
நடிகர் விஜய் உடனான கூட்டணி முறிந்ததற்கு காரணம் என்ன?
நடிகர் விஜய் உடனான கூட்டணி முறிந்ததற்கு காரணம் என்ன?...