ஆபத்தில் உதவாத பாகிஸ்தான்.. நடுவானில் தத்தளித்த இண்டிகோ விமானம்.. அடுத்து என்ன?
Delhi Srinagar Indigo Flight : டெல்லி - ஸ்ரீநகர் இண்டிகோ விமானம் நடுவானில் தத்தளித்தபோது, நிலைமையை சமாளிக்க பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த விமானி கேட்டிக்கிறார். ஆனால், இதற்கு லாகூர் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் நிராகரித்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, இண்டிகோ விமானம் வழக்கமான பாதையிலேயே தரையிறங்கியது.

டெல்லி, மே 23 : டெல்லியில் பெய்த கனமழையால், நடுவானில் இண்டிகோ விமானம் சிக்கியது. இதனால், விமானி அவசர கால பயன்பாட்டுக்கு பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த லாகூர் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு கேட்டார். இதற்கு பாகிஸ்தான் அனுமதி வழங்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. அவசர நிலையிலும் உதவாத பாகிஸ்தானின் செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். 2025 மே 21ஆம் தேதி டெல்லியில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், டெல்லியில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. இதனால், டெல்லியல் விமான சேவை பாதிக்கப்பட்டது. அதன்படி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் உட்பட 220க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இண்டிகோ விமானம் திடீரென நடுவானில் சிக்கிக் கொண்டது.
விமானியின் கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான்
டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு இண்டிகோ விமானம் 6E 2142 விமானம் சென்றுக் கொண்டிருந்தது. விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தரசரஸில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென வானிலை காரணமாக குலுங்கியது. இதனால் பயணிகள் அலறினர். சில மணி நேரமாக விமான நடுவானில் சிக்கிக் தவித்தது. இதனால், விமானத்தின் முன்பகுதி கூட சேதம் அடைந்தது.
இதனால், அவசர நிலையில் சிக்கி தவித்தபோது, நிலைமையை சமாளிக்க பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தி இண்டிகோ கேட்டுக் கொண்டது. லாகூர் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்டு வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி கோரினார்.
ஆனால், அதற்கு பாகிஸ்தான் மறுத்திருக்கிறது. இதனால், இண்டிகோ விமானம் தனது வழக்கமான பாதையிலேயே பயணித்து பத்திரமாக தரையிறங்கியது. பயணிகளும் பாதுகாப்பா இறக்கப்பட்டனர். பாகிஸ்தான் அவசர நிலைக்கு கூட உதவாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாகிஸ்தானின் செயலை பலரும் கண்டித்துள்ளனர்.
என்ன காரணம்?
#BREAKING: India’s Directorate General of Civil Aviation (DGCA) says, Indigo crew contacted Lahore ATC to enter into their airspace to avoid hailstorm and severe turbulence near Pathankot in Punjab. But Lahore ATC refused permission. (Pakistan goes against all humanitarian norms) pic.twitter.com/Ihmx0msFlh
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) May 23, 2025
2025 ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூரை இந்தியா கையில் எடுத்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் பொதுமக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதனால், இருநாடுளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவியது. இதனால், விமான போக்குவரத்து மூன்று நாட்களுக்கு நிறுத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் போர் முடிவுக்கு வந்தது. அதன்பின்பு, பாகிஸ்தான் தனது வான்வெளியை பயன்படுத்த இந்தியாவுக்கு தடை விதித்தது.
இந்தியாவும் தனது வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தானுக்கு தடை விதித்தது தொடர்ந்தது. போர் நிறுத்தம் இருந்தாலும், இருநாடுகளுக்கு இடையே சிந்து நதிநிர் ஒப்பந்தம், வான்வெளி பயன்படுத்துவது போன்ற தடை நீக்கப்படவில்லை. இதனால் தான், பாகிஸ்தான் தனது வான்வெளியை பயன்படுத்த இண்டிகோ விமானத்திற்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.