24 மணி நேரம்.. தூதரக அதிகாரி வெளியேறனும்.. இந்தியா, பாகிஸ்தான் அதிரடி உத்தரவு!
India Pakistan Conflict : இந்திய பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தணிந்து இருந்தால், இருநாடுகளுக்கு இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்திற்கு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்ட சில மணி நேரத்திலேயே, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி வெளியேற பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் பிரச்னை
டெல்லி, மே 14 : டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் தூதரக ஆலோசனை பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், தற்போது தூதர அதிகாரியை வெளியேற காலகெடு நிர்ணயித்துள்ளது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் இந்தியா தூதரக அதிகாரி வெளியேற உத்தரவிட்டு இருக்கிறது. இந்திய பாகிஸ்தான் இடையேயான போர் (India Pakistan conflict) பதற்றம், தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 2025 ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபேரேஷன் சிந்தூரை கையில் எடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம், காஷ்மீர் ஆக்கிரமிப்பு மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய தாக்குதல் நடத்தி அழித்தது.
தூதரக அதிகாரி வெளியேறணும்
இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதலை நடத்தியது. எல்லை பகுதிகளிலும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களை நோக்கி ட்ரோன் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஆனால், அதனை இந்தியா வெற்றிக்கரமாக நடுவானிலையே முறியடித்துது. இதனை அடுத்து, இந்திய ராணுவம், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது.
இப்படியே, இருநாடுகளும் தொடர் தாக்குதலும், பதிலடியிலும் ஈடுபட்டது. மூன்று நாட்கள் இருநாடுகளுக்கு இடையே அறிவிக்கப்படாத போர் பதற்றம் நிலவி வந்தது. போரை தணிக்க உலக நாடுகள் சமரசம் மேற்கொண்டனர். குறிப்பாக, இந்த விஷயத்தில் தலையீட்டு இருநாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தியது.
இதனை அடுத்து, இருநாடுகளும் தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்டன. இருப்பினும், இது தற்காலிகமானது தான் என்றும் பயங்கரவாத நடவடிக்கை தொடர்ந்தால், நாங்கள் தாக்குதல் நடத்துவோம் என பிரதமர் மோடி கூறியிருக்கிறது. இந்த போர் பதற்றத்தில் இடையே, பாகிஸ்தான் மீது அதிரடி நடவடிக்கை இந்தியா மேற்கொண்டது.
இந்தியா, பாகிஸ்தான் அதிரடி உத்தரவு
சிந்து நதிநீர் ஒப்பந்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என உத்தரவிட்டது. தற்போது பதற்றம் தணிந்த சூழலிலும், மத்திய அரசு ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் தூதரக அதிகாரி, அவரது பணிக்கு தகாத செயல்களில் ஈடுபட்டதால், அவர் 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பழிக்கு பழிவாங்கும் விதமாக, இந்தியா தூதரக அதிகாரியை பாகிஸ்தானில் இருந்து 24 மணி நேரத்திற்குள் வெளியே பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதுரக அதிகாரி பயணிக்கு மீறிய செயல் ஈடுபட்டதால் அவருக்கு இங்கு இருக்க அனுமதி இல்லை. அவர் 24 மணி நேரத்திற்குள் வெளியேறவும் பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. போர் பதற்றம் தணிந்தால், இருநாடுகளுக்கு இடையே மோதல் தொடர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.