Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்தி திணிப்பு? 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம்.. மீண்டும் கிளம்பிய சர்ச்சை!

Hindi Mandatory In Maharashtra: மகாராஷ்டிராவில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையின்படி, மூன்றாவது மொழியாக மாணவர்கள் இனி இந்தி மொழி கற்க வேண்டும். இதன் மூலம், மகாராஷ்டிராவில் இந்தி திணிக்கப்படுவதாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டி வருகின்றனர்.

இந்தி திணிப்பு? 1 முதல் 5ம் வகுப்பு  மாணவர்களுக்கு  கட்டாயம்..  மீண்டும் கிளம்பிய சர்ச்சை!
மகாராஷ்டிராவில் இந்தி கட்டாயம்Image Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 18 Apr 2025 11:44 AM

மகாராஷ்டிரா, ஏப்ரல் 18: மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்றாவது மொழியாக இந்தி  (Hindi Complusory) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மராத்தி, ஆங்கிலம் என இருமொழி கற்பிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய கல்விக் கொள்கை (national education policy) அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் மொழி பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக, மத்தியில் ஆளும் பாஜக அரசு, மும்மொழிக் கொள்கையை  கொண்டு தீவிரமாக முயற்சித்து வருகிறது. ஆனால், இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இந்தி கட்டாயம்

இதனால், மத்திய அரசுக்கும் தமிழக அரசு மோதல் போக்கு நிலவுகிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்தில் வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது. இருப்பினும், தமிழக அரசு தன்னுடைய நிலைபாட்டில் உறுதியாக உள்ளது.

அதாவது, தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் பின்பற்றப்படும் என்றும் மும்மொழிக் கொள்கை மூலம் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகிறது. ஆனால், மத்திய அரசோ, இந்தியை ஒருபோதும் திணிக்கவில்லை என்று மூன்றாவது மொழியாக எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம் என கூறி வருகிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  மூன்றாவது மொழி எந்த மொழி கட்டாயப்படுத்தப்படவில்லை என மத்திய அரசு கூறி நிலையில், தற்போது மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்பட்டது. இது அம்மாநிலத்தை கடும் எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது.

மகாராஷ்டிரா அரசு எடுத்த அதிரடி முடிவு

தற்போது, ​​1 முதல் 4 ஆம் வகுப்பு வரை மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே கட்டாய மொழிகளாகக் கற்பிக்கப்படும் நிலையில், 2025-26 கல்வியாண்டிலிருந்து இருந்து 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்கள் இந்தி மொழி கட்டாயமாக்கப்படுகிறது.

2028-29ஆம் ஆண்டிற்குள் அனைத்து வகுப்புகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. புதிய கல்விக் கொள்கையின் மூலம் மாணவர்கள் மராத்தி, ஆங்கிலம், இந்தி கற்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதற்காக 2025 ஆம் ஆண்டுக்குள் 80 சதவீதம் ஆசிரியர்களுக்கு புதிய கற்பித்தல் முறைகள் மற்றும் டிஜிட்டல் கருவிகளில் பயிற்சி அளிக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

மகாராஷ்ரா அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன்படி, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நாங்கள் இந்துக்கள், ஆனால் இந்தி அல்ல! மகாராஷ்டிராவை இந்தி என்று சித்தரிக்க முயற்சித்தால், மகாராஷ்டிராவில் ஒரு போராட்டம் நிச்சயம் இருக்கும்.

இதையெல்லாம் பார்த்தால், அரசாங்கம் வேண்டுமென்றே இந்தப் போராட்டத்தை உருவாக்க முயற்சிக்கிறது. வரவிருக்கும் தேர்தல்களில் மராத்தி மற்றும் மராத்தி அல்லாதவர்களிடையே ஒரு போராட்டத்தை உருவாக்கி அதைப் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியா இது? உங்கள் மும்மொழி வியூகம் எதுவாக இருந்தாலும், அதை அரசு விவகாரங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்துங்கள். கல்விக்குக் கொண்டு வராதீர்கள்” என்று கூறியுள்ளார்.

தாலியை கழற்றி வைத்துவிட்டு நீட் தேர்வா? மா.சுப்பிரமணியன் கண்டனம்!
தாலியை கழற்றி வைத்துவிட்டு நீட் தேர்வா? மா.சுப்பிரமணியன் கண்டனம்!...
மாங்கல்ய பலம் அருளும் மீனாட்சி திருக்கல்யாணத்தின் வரலாறு!
மாங்கல்ய பலம் அருளும் மீனாட்சி திருக்கல்யாணத்தின் வரலாறு!...
தந்தூரி ரொட்டிக்கு வந்த போட்டியில் இரண்டு சிறுவர்கள் பரிதாப பலி!
தந்தூரி ரொட்டிக்கு வந்த போட்டியில் இரண்டு சிறுவர்கள் பரிதாப பலி!...
நாகார்ஜுனாவின் 100-வது படத்தை இயக்கும் பிரபல கோலிவுட் இயக்குநர்..
நாகார்ஜுனாவின் 100-வது படத்தை இயக்கும் பிரபல கோலிவுட் இயக்குநர்.....
தொடர்ச்சியாக 6 சிக்ஸர்கள்! பல்வேறு சாதனையை குவித்த ரியான் பராக்!
தொடர்ச்சியாக 6 சிக்ஸர்கள்! பல்வேறு சாதனையை குவித்த ரியான் பராக்!...
18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்தை இயக்கும் சுந்தர் சி
18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்தை இயக்கும் சுந்தர் சி...
கோயில் திருவிழாவில் தகராறு - 17 வயது சிறுவன் குத்தி கொலை!
கோயில் திருவிழாவில் தகராறு - 17 வயது சிறுவன் குத்தி கொலை!...
பஹல்காம் தாக்குதல் கண்டித்து தமிழ்நாட்டில் பாஜக இன்று போராட்டம்!
பஹல்காம் தாக்குதல் கண்டித்து தமிழ்நாட்டில் பாஜக இன்று போராட்டம்!...
வேனும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி!
வேனும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி!...
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை வெகுவாகப் பாராட்டிய அமைச்சர்...
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை வெகுவாகப் பாராட்டிய அமைச்சர்......
மதுரை ஆதினத்தை கொலை செய்ய முயற்சியா? காவல்துறையினர் விளக்கம்!
மதுரை ஆதினத்தை கொலை செய்ய முயற்சியா? காவல்துறையினர் விளக்கம்!...