EX ராணுவ வீரருக்கு நேர்ந்த கொடூரம்.. துண்டு துண்டாக வெட்டிக் கொலை.. பகீர் பின்னணி!

Uttar Pradesh Crime News : உத்தர பிரதேசத்தில் முன்னாள் ராணுவ வீரர் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் மீறிய உறவுக்காக மனைவி, தனது கணவரை வெட்டிக் கொலை செய்துள்ளதாக போலீசார் கூறி உள்ளனர்.

EX  ராணுவ வீரருக்கு நேர்ந்த கொடூரம்.. துண்டு துண்டாக வெட்டிக் கொலை.. பகீர் பின்னணி!

மாதிரிப்படம்

Updated On: 

14 May 2025 08:10 AM

உத்தர பிரதேசம், மே 14 : உத்தர பிரதேச மாநிலத்தில் முன்னாள் ராணுவ வீரர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் துண்டாக துண்டாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார். உத்தர பிரசேத மாநிலம் பல்லியா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பகதூர்பூரைச் சேர்ந்தவர் தேவந்திரகுமார் (62). இவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஆவார். இவரது மனைவி மாயாதேவி. இத்ந தம்பதிக்கு அம்ப்லி கவுதம் என்ற மகள் இருக்கிறார். இந்த நிலையில், தனது கணவர் தேவேந்திரகுமார் காணாமல் போனதாக 2025 மே 10ஆம் தேதி மனைவி மாயாதேவி கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவரை அங்குமிங்கும் தேடினர்.

EX ராணுவ வீரருக்கு நேர்ந்த கொடூரம்

அப்போது, சிக்கந்தர்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கரீத் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு வயலில், பாலிதீனில் சுற்றப்பட்ட துண்டிக்கப்பட்ட கைகள் மற்றும் கால்களை போலீசார் கண்டெடுத்தனர். இதனை கைப்பற்றிய போலீசார் இந்த உடல் பாகங்கள் தேவந்திரகுமாருடைது என போலீசார் சந்தேகித்தனர்.

இதனை அடுத்து, இதுகுறித்து விசாரித்தனர். அப்போது, தேவேந்திர குமாரின் மகள் ன அம்பலி கவுதம் தனது தாய் மீது சந்தேகம் இருப்பதாக கூறினார். இதனை அடுத்து, மாயாதேவியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதாவது, தனது கணவர் தேவேந்திர குமாரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதனை அடுத்து, மாயாதேவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். போலீசாரின் கூற்றுப்படி, மாயா தேவி திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்துள்ளார். இதனை கணவர் தேவேந்திர குமார் கண்டித்துள்ளார். இதனால், இவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

தனது திருமணம் மீறிய உறவுக்கு தொந்தரவாக இருப்பதால் தேவேந்திர குமாரை கொலை செய்ய மாயாதேவி திட்டமிட்டு இருக்கிறார். இதனால், தனது காதலரான லாரி ஓட்டுநர் அனில் யாதவ் மற்றும் அவரது நண்பர்கள் மிதிலேஷ் படேல் மற்றும் சதீஷ் யாதவ் ஆகியோரின் உதவிடன் தேவேந்திர குமாரை கொலை செய்ய திட்டமிட்டார்.

துண்டு துண்டாக வெட்டிக் கொலை

அதன்படியே, இவர்கள் அனைவரும் பகதூர்பூர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குள் தேவேந்திர குமாரைக் கொன்று, பின்னர் உடலை ஆறு பகுதிகளாக வெட்டி உள்ளனர். கை, கால்கள், தலையை துண்டித்துள்ளனர். அடையாளம் காணப்படுவதை தவிர்க்க ஒரு பிளாஸ்டிக் கவரின் உடல் பாகங்களை போட்டு பல்வேறு இடங்களில் வீசியுள்ளனதாக கூறியுள்ளனர்.

மாயாதேவின் தகவலின்பேரில், கரீத் தரௌலி கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து போலீசார் உடலை மீட்டனர். மேலும், அனில் யாதவ் மற்றும் சதீஷ் யாதவ் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களை பிடிக்க முயன்ற தப்ப ஓட முயன்றால், இருவரின் கால்களிலும் சுட்டனர்.

இதனை அடுத்து, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கைதான அனைவரிமும் விசாரித்து வருகின்றனர். திருமணம் மீறிய உறவுக்காக கணவரை மனைவி துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.