கிரிக்கெட் விளையாடிய கல்லூரி மாணவர்.. திடீரென சுருண்டு விழுந்து பலி.. நடந்தது என்ன?
கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஹைதராபாத்தில் உள்ள கல்லூரியின் கிரிக்கெட் மைதானத்தில் நடந்துள்ளது. உயிரிழந்தது வினய் குமார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இது சம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தெலங்கானா, ஏப்ரல் 05: தெலங்கானாவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமான வீடியோ வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த கல்லூரி மாணவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அண்மைக் காலங்களில் திடீர் மாரடைப்பால் பலரும் உயிரிழந்து வருகின்றனர். சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர்.
கிரிக்கெட் விளையாடிய கல்லூரி மாணவர்
கொரோனா காலத்திற்கு பிறகு மாரடைப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு மோசமான வாழ்க்கை முறை, துரித உணவு பழக்கவழக்கங்கள், உடல் பருமன் போன்ற பிரச்னைகளால் மரடைப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், தற்போது ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது, தெலங்கானாவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மெட்சல் நகரில் உள்ள சி.எம்.ஆர் பொறியியல் கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கல்லூரியில் தான் மாணவர் உயிரிழந்துள்ளார். அவர் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த வினய் குமார். இவருக்கு வயது 21.
திடீரென சுருண்டு விழுந்து பலி
4 April 25 : BTech student dies of heart attack
BTech student Vinay died of a #heartattack2025 while playing cricket in Medchal. Vinay, who was studying at CMR College, was rushed to the hospital, where doctors declared him dead.#ChipShotWorking pic.twitter.com/15gneVyc4s
— Anand Panna (@AnandPanna1) April 4, 2025
இவர் சி.எம்.ஆர் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று கல்லூரி வளாகத்தில் கிரிக்கெட் போடி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு மாணவர் வினய் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, போட்டியின் நடுவில் பீல்டிங் செய்து கொண்டிருந்த வினய் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்த கல்லூரி மாணவர்களும், கல்லூரி ஊழியர்களும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது சம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதில் பீல்டிங் செய்து கொண்டிருந்த கல்லூரி மாணவர், திடீரென கீழே விழுந்துள்ளது போன்று வீடியோவில் உள்ளது. உடனே அங்கிருந்த மாணவர்கள் அவரை மீட்பதுபோன்று வீடியோவில் உள்ளது.