மூட நம்பிக்கையின் உச்சம்.. மாதவிடாய் வந்த பெண் எடுத்த விபரீத முடிவு.. அட கொடுமையே!
உத்தர பிரதேச மாநிலத்தில் மாதவிடாய் வந்ததால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நவராத்திரி அன்று மாதவிடாய் வந்ததால் பூஜை, விரதம் எதுவும் செய்ய முடியாததால் மனமுடைந்த அந்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மூட நம்பிக்கையின் உச்சமாக பார்க்கப்படுகிறது.

உத்தர பிரதேசம், ஏப்ரல் 05: உத்தர பிரதேசத்தில் மாதவிடாய் வந்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவராத்திரி கொண்டாடும் நேரத்தில் மாதவிடாய் வந்ததால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது. மூட நம்பிக்கை இன்றளவு சமூகத்தை சீர்கெடுத்து வருகிறது. கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் அதீத மூடநம்பிக்கையால் மோசமான நிகழ்வுக்கு வழிவகுக்கிறது. அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் நவராத்திரி கொண்டாடட்டத்தில் மாதவிடாய் வந்ததால் 36 வயதான பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மூட நம்பிக்கையின் உச்சம்
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியைச் சேர்ந்தவர் பிரியான்ஷா சோனி (36). இவரது கணவர் முகேஷ். இந்த தம்பதிக்கு மூன்று மற்றும் 2 வயதில் மகள்கள் உள்ளனர். வட மாநிலங்களில் நவராத்திரி கொண்டாட்டங்கள் 10 நாட்கள் நடைபெறும்.
இந்த கொண்டாட்டம் வட மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த நவராத்திரி பூஜைக்காக சோனி தயாராகி கொண்டிருந்தார். நவராத்திரி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு தனது கணவர் முகேஷ் சோனியிடம் பூஜைக்குத் தேவையான பொருட்களைப் வாங்கி வர வேண்டும் என கூறியிருக்கிறார்.
பூக்கள், பழங்கள், இனிப்புகள், விளக்குகள் மற்றும் தானியங்கள் என அனைத்தையும் முகேஷ் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். நவராத்திரியின் முதல் நாளான 2025 மார்ச் 30 அன்று சோனிக்கு மாதவிடாய் வந்துள்ளது.
மாதவிடாய் வந்த பெண் எடுத்த விபரீத முடிவு
மாதவிடாய் தூய்மையற்றதாகக் கருதி மாதவிடாய் காலத்தில் பெண்கள் வழிபாடு செய்ய மாட்டார்கள். இது காலகாலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், சோனிக்கு நவராத்திரி முந்தைய நாள் மாதவிடாய் வந்துள்ளது. இதனால் மனமுடைந்த சோனி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருககிறார்.
விஷம் குடித்ததால் மயக்கம் அடைந்த சோனியை, குடும்பத்தினர் ஜான்சி மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு கொண்டு வரப்பட்டார். இருப்பினும், அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததால், அவரது குடும்பத்தினர் அவரை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கணவர் முகேஷின் கூற்றுப்படி, சோனி நவராத்திரிக்காக ஒரு வருடம் காத்திருந்தார். எனவே, நவராத்திரி கொண்டாடும்போது அவருக்கு மாதவிடாய் வந்ததால் அவரால் விரதம் இருக்கவோ அல்லது தெய்வத்தை வணங்கவோ முடியவில்லை. எல்லாம் எப்படி நடக்கும். யார் பிரார்த்தனை செய்வார்கள் என்பது குறித்து அவர் மன அழுத்தத்தில் இருந்தார்.
நான் அவளை ஆறுதல்படுத்தவும், மாதவிடாய் என்பது ஒரு இயற்கையான செயல்முறை மற்றும் மாதாந்திர நிகழ்வு என்று விளக்கவும் முயற்சித்தேன். ஆனால் அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் சார்பாக அனைத்து சடங்குகளையும் செய்ய நான் முன்வந்தேன். ஆனால் அவள் மனமுடைந்து இருந்தால். நான் வெளியே சென்று வருவதற்குள் அவர் விஷம் குடித்திருக்கிறார்” என்று கூறினார்.
(எந்தவொரு பிரச்னைக்கு தற்கொலை என்பது தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)