Bhargavastra: எதிரி நாட்டு ட்ரோன்களுக்கு இனி பயம் வேண்டாம்.. புதிதாக களமிறங்கும் ’பார்கவாஸ்த்ரா’.. சோதனையில் அசத்தல் வெற்றி!
India's New Drone Defense: இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனையை அடுத்து, ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ள 'பார்கவாஸ்திரா' எனும் புதிய மைக்ரோ ராக்கெட் அமைப்பை இந்திய ராணுவம் உருவாக்கியுள்ளது. மே 13, 2025 அன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. சோலார் டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் லிமிடெட் (SDAL) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இது, குறைந்த செலவில் ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும். மகாபாரதத்தின் பார்கவஸ்திரத்திலிருந்து இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

பார்கவாஸ்த்ரா
கோபால்பூர், மே 14: இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. இந்த சண்டையின்போது பாகிஸ்தான் இராணுவம் அனுப்பிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இந்தியா இராணுவம் (Indian Army) அழித்து வெற்றிகண்டது. இந்தநிலையில். எதிர்காலங்களில் ட்ரோன்களின் அச்சுறுத்தலை தடுக்க இந்தியா இராணுவம் தற்போது குறைந்த விலையில் ஒரு புதிய தீர்வை கண்டுள்ளது. இதற்கு இந்திய இராணுவம் ’பார்கவாஸ்த்ரா’ (Bhargavastra) என்று பெயரிட்டுள்ளது. இந்த பார்கவாஸ்த்ரா நேற்று அதாவது 2025 மே 13ம் தேதி சோதிக்கப்பட்டு வெற்றியும் கண்டுள்ளது. இந்த அமைப்பானது மைக்ரோ ராக்கெட்டுகள் மூலம் ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய முயற்சி:
’பார்கவாஸ்த்ரா’ ராக்கெட்டிற்கான 3 சோதனைகள் கோபால்பூரில் 2025 மே 13ம் தேதியான நேற்று மூத்த இந்திய ராணுவ அதிகாரிகள் முன்னில்லை நடத்தப்பட்டன. இந்த சோதனையில் தலா ஒரு ராக்கெட்டை ஏவி 2 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து 2 வினாடிகள் இடைவெளிக்கும் 2 ராக்கெட்டுகளை சால்வோ முறையில் ஏவி சோதனை செய்யப்பட்டது. இந்த 4 ராக்கெட்டுகளும் எதிர்பார்த்தப்படி சிறப்பாக செய்ல்பட்டு அசத்தியது. இதன்மூலம், எதிர்காலத்தில் பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதல்களை தடுக்க இது பெரிய உதவியாக இருக்கும் என்று இந்திய இராணுவம் நம்புகிறது.
பார்கவாஸ்த்ரா சோதனை:
#WATCH | A new low-cost Counter Drone System in Hard Kill mode ‘Bhargavastra’, has been designed and developed by Solar Defence and Aerospace Limited (SDAL), signifying a substantial leap in countering the escalating threat of drone swarms. The micro rockets used in this… pic.twitter.com/qM4FWtEF43
— ANI (@ANI) May 14, 2025
தயாரித்தது யார்..?
பார்கவாஸ்த்ரா என்று பெயரிடப்பட்ட இந்த ராக்கெட்டுகளை சோலார் டிபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் லிம்டேட் SDAL வடிவமைத்து உருவாக்கியுள்ளது. இதன் முதல் முயற்சியே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சோலார் டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேன் லிமிடெட் தெரிவிக்கையில், “ பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ள புதிய தொழில்நுட்பம் என்ற அடிப்படையில் பார்கவாஸ்த்ரா ஒரு முக்கிய படியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றதன் மூல இந்த ராக்கெட் எதிர்காலத்தில் இந்திய இராணுவத்திற்கு ட்ரோன் எதிர்ப்பு திறன்களை வலுப்படுத்தவும், நவீன அச்சுறுத்தல்களை எதிர்த்து போராட இராணுவத்திற்கு புதிய பலத்தை அளிக்கும்.” என்று தெரிவித்தது.
பார்கவாஸ்த்ரா பெயர் காரணம் என்ன..?
பார்கவாஸ்த்ரா என்ற பெயருக்கு பின்னால் ஒரு கதையும் உள்ளது. மகாபாரத போரின்போது சில அழிவுகரமான அம்புகள் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த அழிவுகரமான அம்புகளில் பார்கவஸ்திரம் ஒன்று. இதை மகரிஷி பார்கவ பரசுராமர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதிலிருந்து உத்வேகமாக எடுத்துகொண்டு இந்தியா ஒரு அதிநவீன மைக்ரோ-ஏவுகணைக்கு இந்த பெயரை வைத்துள்ளனர். இந்த புதிய ‘பார்கவாஸ்திரம்’ நவீன போரில் நாட்டின் பாதுகாப்பை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல தயாராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.