Duologue NXT: பிரபல நடிகை ரோனா-லீ ஷிமோனுடன் பரூன் தாஸ் உரையாடல் – எப்போ தெரியுமா?

Duologue NXT: டிவி 9 நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பரூன் தாஸ் தொகுத்து வழங்கும் Duologue NXT என்ற நிகழ்ச்சியில் பிரபல நடிகை ரோனா-லீ ஷிமோன் கலந்துகொள்ளவிருக்கிறார். அவர் தனது வெற்றிக்கதையை பரூன் தாஸுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.

Duologue NXT: பிரபல நடிகை ரோனா-லீ ஷிமோனுடன் பரூன் தாஸ் உரையாடல் - எப்போ தெரியுமா?

பரூன் தாஸ் - ரோனா-லீ ஷிமோன்

Updated On: 

22 Sep 2025 19:50 PM

 IST

நொய்டா, செப்டம்பர் 2025: டியோலாக் வித் பருண் தாஸ் (Duologue with Barun Das) என்ற பிரபலமான தொடரின் புதிய பரிணாமம் டூயலாக் நெக்ஸ் (Duologue NXT) என்ற பெயரில் தொRona-Lee Shimonடங்கியுள்ளது. அதன் முதன் எபிசோடிலியே மின்னல் போல தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த தொடக்க நிகழ்ச்சியில், டிவி9 நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பரூன் தாஸ் தொக்குத்து வழக்கும் இந்த நிகழ்ச்சிக்கு, உலகளவில் புகழ்பெற்ற நடிகை ரோனா-லீ ஷிமோன் பங்கேற்றார். ‘Fauda’ என்ற ஹிட் தொடரில் ‘நூரின்’ கதாபாத்திரம் மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்றவர் ரோனா-லீ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உரையாடலில், வாழ்க்கையின் தடைகளை எப்படி வாய்ப்புகளாக மாற்றலாம், தோல்விகள் எப்படி வெற்றிக்கு வழிவகுக்கின்றன என்பதையும் நடிகை ஷிமோன் பகிர்ந்து கொண்டார். “ஒரு தோல்வி நாளையே வெற்றிக்கான படியாக மாறலாம். ஆர்வமும் முயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்” என்று அவர் கூறினார்.

பரூன் தாஸின் டியோலாக்ஸ் நிகழ்ச்சி

 

பரூன் தாஸ் தனது உரையாடலில், வாழ்க்கையில் சரியான முடிவு என்று எதுவும் இல்லை. நீங்கள் எடுக்கும் முடிவையே சரியாக்க வேண்டும். தோல்வி ஒரு விருப்பமே அல்ல. கற்றுக் கொண்டு முன்னேறினால் எதுவும் வீணாகாது” என்றார்.

ரோனா-லீ தனது அனுபவங்களை பகிர்ந்தபோது, “உங்களுக்கு வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் அதற்காக தூக்கமின்றி உழைக்கவும், உங்களை மட்டுமே நம்பி , முடியாது என்ற பதிலை ஏற்காமல் முன்னேறவும் வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

இந்த தொடக்க எபிசோடு, பெண்கள் தங்களின் வாழ்க்கையை  துவங்கி, பிறருக்கும் உத்வேகம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. ரோனா-லீ ஷிமோனின் உற்சாகமான கதையையும், பரூன் தாஸ் நடத்திய விறுவிறுப்பான உரையாடலையும் கொண்டு ‘Duologue NXT’ தொடரின் முதல் பகுதி பாராட்டையும் நேர்மறையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

இந்த சிறப்பு நிகழ்ச்சியை செப்டம்பர் 22, 2025 இரவு 10.30 மணிக்கு News9-ல் காணலாம். மேலும், Duologue YouTube சேனல் (@Duologuewithbarundas) மற்றும் நியூஸ்9 பிளஸ் (News9 Plus) ஆப்பிலும் ஸ்ட்ரீம் செய்யலாம்.