Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மருத்துவமனை ஐசியுவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. ஹரியானாவில் அதிர்ச்சி சம்பவம்!

ஹரியானா மாநிலம், குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட விமானப் பணிப்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் அளித்துள்ளார். இவ்வழக்கில் மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவமனை ஐசியுவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. ஹரியானாவில் அதிர்ச்சி சம்பவம்!
ஹரியானா மருத்துவமனை சம்பவம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 16 Apr 2025 16:16 PM

குருகிராம், ஏப்ரல் 16: ஹரியானா (Haryana) மாநிலம் குருகிராமில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் நோயாளி  பாலியல் வன்கொடுமை (Physical Assault) செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்த்தியுள்ளது. பொதுமக்களால் கோயில்களாக பார்க்கப்படும் மற்றொரு இடம் என்றால் அது மருத்துவமனை தான். அங்கு உயிரை காக்கும் மருத்துவர்களை வாழும் கடவுளாக நினைப்பவர்கள் ஏராளமானோர். இப்படியான நிலையில் சமீப காலமாக மருத்துவமனையில் எதிர்பாராத அசம்பாவித சம்பவங்களும் நடைபெறுகிறது. மருத்துவர்கள் மீது தாக்குதல், பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை உள்ளிட்ட சம்பவங்கள் கவலையளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. அந்த வகையில் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்றுள்ள சம்பவம் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள குருகிராமில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் 2025, ஏப்ரல் 5 ஆம் தேதி பயிற்சி விமானப் பணிப்பெண் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நீச்சல் குளத்தில் ஏற்பட்ட மயக்க நிலை காரணமாக முதலில் சிறிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண் பின்னர் மேல் சிகிச்சைக்காக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் ஒரு வாரத்திற்கும் மேலாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

அரை மயக்க நிலையில் நடந்த சம்பவம்

இப்படியான நிலையில் 2025, ஏப்ரல் 6 ஆம் தேதி தான் அரை மயக்க நிலையில் இருந்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக அப்பெண் தனது கணவர் மூலம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஏப்ரல் 13 ஆம் தேதி அப்பெண் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், ஏப்ரல் 14 ஆம் தேதி இந்த புகாரானது அளிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த நேரத்தில் தான் மயக்கத்தில் இருந்ததால் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தடுக்க முடியவில்லை என்றும் அப்பெண் தெரிவித்துள்ளார்.மேலும் ஐசியு அறையில் இரண்டு நிர்வாக செவிலியர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்ததாகவும் அவர்கள் என் மீதான அத்துமீறலை கண்டிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சதர்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட இந்த புகார் குறித்து விசாரணையானது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் இவ்வழக்கில் என்ன நடந்தது என்பதும், குற்றவாளிகள் யார் என்பது வெளிச்சத்திற்கு வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

விமான பணிப்பெண் அளித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த மருத்துவமனை நிர்வாகம், “சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளால் நடத்தப்படும் இந்த புகாரின் விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பதாக ஒரு அறிக்கையை 2025, ஏப்ரல் 15 ஆம் தேதி வெளியிட்டது. மேலும் மருத்துவமனை சிசிடிவி காட்சிகள் மற்றும் அந்த பெண்ணின் மருத்துவ சிகிச்சை தொடர்பான கோப்புகள் காவல்துறையினருடன் பகிரப்பட்டுள்ளதாக மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதுவரை இவ்வழக்கில் எந்த குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இதுதொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

சூர்யா மற்றும் தனுஷ் காம்போ... பிரபல இயக்குநர் சொன்ன தகவல்
சூர்யா மற்றும் தனுஷ் காம்போ... பிரபல இயக்குநர் சொன்ன தகவல்...
பள்ளி மாணவர்களுக்கு கோடை சுற்றுலா: தமிழக கல்வித்துறை ஏற்பாடு..!
பள்ளி மாணவர்களுக்கு கோடை சுற்றுலா: தமிழக கல்வித்துறை ஏற்பாடு..!...
மீண்டும் பரவும் கொரோனா தொற்று.. தமிழ்நாட்டில் நிலை என்ன?
மீண்டும் பரவும் கொரோனா தொற்று.. தமிழ்நாட்டில் நிலை என்ன?...
கௌரவத்திற்காக களமிறங்கும் ராஜஸ்தான்.. பிளே ஆஃப் பயத்தில் பஞ்சாப்!
கௌரவத்திற்காக களமிறங்கும் ராஜஸ்தான்.. பிளே ஆஃப் பயத்தில் பஞ்சாப்!...
உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. வெளுக்கப்போகும் மழை!
உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. வெளுக்கப்போகும் மழை!...
காலியிடம் இனி வீணாகாது.. பயணிகள் நலனுக்காக ரெயில்வே புதிய நடைமுறை
காலியிடம் இனி வீணாகாது.. பயணிகள் நலனுக்காக ரெயில்வே புதிய நடைமுறை...
காலையிலேயே பரபரப்பு.. அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்
காலையிலேயே பரபரப்பு.. அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்...
48 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மதுரையில் பொதுக்குழு கூட்டம்..!
48 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மதுரையில் பொதுக்குழு கூட்டம்..!...
தொழில்நுட்ப கோளாறு.. பிஎஸ்எல்வி சி61 ராக்கெட் திட்டம் தோல்வி!
தொழில்நுட்ப கோளாறு.. பிஎஸ்எல்வி சி61 ராக்கெட் திட்டம் தோல்வி!...
கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி வேன்.. 5 பேர் பரிதாபமாக பலி!
கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி வேன்.. 5 பேர் பரிதாபமாக பலி!...
FD திட்டங்களுக்கு 9% வரை வட்டி வழங்கும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள்
FD திட்டங்களுக்கு 9% வரை வட்டி வழங்கும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள்...