Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காலையிலேயே பரபரப்பு.. அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்.. என்ன நடந்தது?

Arunachal Pradesh Earthquake : அருணாச்சல பிரதேசத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2025 மே 18ஆம் தேதியான இன்று அதிகாலை 5.06 மணிக்கு திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் 3.8 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தனது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தி உள்ளது.

காலையிலேயே பரபரப்பு.. அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்.. என்ன நடந்தது?
அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்Image Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 18 May 2025 10:38 AM

அருணாச்சல பிரசேதம், மே 18 : அருணாச்சல பிரதேசத்தில் திடீரென நிலநடுக்கம் (Arunachal Pradesh Earthquake) ஏற்பட்டது பரபரப்பை கிளப்பி உள்ளது. 2025 மே 18ஆம் தேதியான இன்று அதிகாலை 5.06 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் 3.8 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கம், நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது.  இதனால், ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் ஆண்டுதோறும்  ஏற்பட்டு வருகிறது. அதோடு,  சேதமும் அதிகளிவில் ஏற்பட்டு வருகிறது.  அண்மையில் கூட,  மியான்மர் மற்றும் தாய்லாந்தில் பூகம்பம் ஏற்பட்டது. இதில், இருநாடுகளிலும் பெரிய பெரிய கட்டிடங்கள், பாலங்கள் இடிந்து விழுந்தன.

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்

சுமார் 7.7 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது உலக நாடுகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, அவ்வப்போது பல்வேறு நாடுகளில் சிறிய அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், 2025 மே 18ஆம் தேதியான இன்று காலையிலேயே அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதாவது, அருணாச்சல பிரதேச மாநிலம் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் 3.8 ரிகடர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.  இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் லேசாக குலுக்கியதாக கூறப்படுகிறது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டது குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை. இருப்பினும், அங்கு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

என்ன நடந்தது?

முன்னதாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, துருக்கில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. குளுவிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ தொலைவில் 5.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் யாருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. பிப்ரவரி 2023ல், துருக்கி மற்றும் சிரியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த பேரழிவு தாக்கத்தால் துருக்கியில் 59,000 பேரும் சிரியாவில் 8,000 பேரும் உயிரிழந்தனர். இது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 எப்போது தொடங்குகிறது? வைரலாகும் அப்டேட்
மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 எப்போது தொடங்குகிறது? வைரலாகும் அப்டேட்...
ஜி.வி.பிரகாஷிற்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா
ஜி.வி.பிரகாஷிற்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா...
கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!
கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!...
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.....
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!...
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்...
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்......
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்
தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்...
Air India விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - கடைசி வீடியோ வைரல்
Air India விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - கடைசி வீடியோ வைரல்...