Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மீண்டும் பரவும் கொரோனா தொற்று.. தமிழ்நாட்டில் நிலை என்ன? சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு!

Covid Surge in Singapore Hongkong : தமிழகத்தில் பெரிய அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை மக்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறது.

மீண்டும் பரவும் கொரோனா தொற்று.. தமிழ்நாட்டில் நிலை என்ன? சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு!
கொரோனா வைரஸ்Image Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 18 May 2025 08:28 AM

சென்னை, மே 18 : சிங்கப்பூர், ஹாங்காங்கில் கொரோனா (Covid Virus) தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் நிலை குறித்து தமிழக சுகாதாரத்துறை (Tamil Nadu Health department) முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. மேலும், கொரோனா பாதிப்பும் குறித்தும் மக்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறது.  2019ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திலும் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா தொற்றை தொடர்ந்து, உயிரிழப்புகளும், பொருளாதா இழப்புகளும் ஏற்பட்டது. கொரோனா தொற்றால் உலக நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தன. 2019ஆம் ஆண்டு முதல் ஓராண்டுக்கு மேல் இந்த கொரோனா தொற்று அலை இருந்தது. பின்னர், கொரோனா தடுப்பூசிகள் மற்றும் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மீண்டும் பரவும் கொரோனா தொற்று

இதனால், சில ஆண்டுகளாகவே கொரோனா அலையில் இருந்து மக்கள் இயல்பை நிலைக்கு திரும்பியுள்ளனர்.  ஆனால், அவ்வப்போது கொரோனா தொற்று அறிகுறிகள் மக்களிடையே ஏற்பட்டது.  அண்மையில் கூட சீனாவில் எம்எம்பிவி என்ற கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பரவி வருகிறது. சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் கொரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும், உயிரிழப்புகளும் ஏற்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்திருந்தது. 2025 மே மாதத்தில் இருந்தே சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தினமும் 133 பேர் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 14,200 ஆக உயர்ந்துள்ளது என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஹாங்காங்கை பொறுத்தவரை 28 சதவீதம் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

தமிழ்நாட்டின் நிலை என்ன?

தினசரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் 30 சதவீதம் அதிகரித்துள்ளது என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் கொரோன பரவல் அதிகரிக்குமா என்ற அச்சம் பொதுமக்களிடைய இருந்து வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூர், தாய்லாந்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்தாலும் தமிழகத்தில் தொற்று கட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் நாளொன்றுக்கு 8 முதல் 10 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். வீரியம் இல்லாத கொரோனா என்பதால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழகத்தில் பெரிய அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை, யாரும் பீதியடைய வேண்டாம்” என்று தெரிவித்துள்ளது.

ஹாங்காங், சிங்கப்பூரில் தற்போது கொரோனா தொற்று அதிகரிப்பதற்கு முக்கியமாக காரணமாக இருப்பது நோய் எதிர்ப்பு சக்தி. மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்ற காரணங்களால் கொரோனா பாதிப்பு ஏற்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

'சூர்யா45' படத்தில் நடிக்க இதுவே காரணம்- ஸ்வாசிகா
'சூர்யா45' படத்தில் நடிக்க இதுவே காரணம்- ஸ்வாசிகா...
சர்க்கரை அளவை குறைத்தால்தான் ஆரோக்கியமான வாழ்க்கை – CBSE அறிவுரை!
சர்க்கரை அளவை குறைத்தால்தான் ஆரோக்கியமான வாழ்க்கை – CBSE அறிவுரை!...
புதன் பெயர்ச்சி 2025: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்!
புதன் பெயர்ச்சி 2025: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்!...
சார்மினாரில் பயங்கர தீ விபத்து... உடல் கருகி 17 பேர் உயிரிழப்பு
சார்மினாரில் பயங்கர தீ விபத்து... உடல் கருகி 17 பேர் உயிரிழப்பு...
பிளே ஆஃப் கனவில் GT.. தடுத்து நிறுத்துமா DC..? மழைக்கு வாய்ப்பா?
பிளே ஆஃப் கனவில் GT.. தடுத்து நிறுத்துமா DC..? மழைக்கு வாய்ப்பா?...
'ஏஸ்' பட விழாவில் இயக்குநரை புகழ்ந்து பேசிய விஜய் சேதுபதி!
'ஏஸ்' பட விழாவில் இயக்குநரை புகழ்ந்து பேசிய விஜய் சேதுபதி!...
தொடர்கிறது போர் நிறுத்தம்... உறுதி செய்த இந்திய ராணுவம்!
தொடர்கிறது போர் நிறுத்தம்... உறுதி செய்த இந்திய ராணுவம்!...
ஈரோட்டில் இரட்டை கொலை: 3 பேர் கைது – போலீசார் தீவிர விசாரணை
ஈரோட்டில் இரட்டை கொலை: 3 பேர் கைது – போலீசார் தீவிர விசாரணை...
நடுவானில் பைலட் இல்லாமல் பறந்த விமானம்.. கதிகலங்கிய 200 பயணிகள்!
நடுவானில் பைலட் இல்லாமல் பறந்த விமானம்.. கதிகலங்கிய 200 பயணிகள்!...
தமிழக கடற்கரைக்கு அருகில் மேலடுக்கு சுழற்சி.. எங்கெல்லாம் மழை..?
தமிழக கடற்கரைக்கு அருகில் மேலடுக்கு சுழற்சி.. எங்கெல்லாம் மழை..?...
தாலி கட்டிய மறுநொடியே பிரிந்த மணமகன் உயிர்... அதிர்ச்சி சம்பவம்!
தாலி கட்டிய மறுநொடியே பிரிந்த மணமகன் உயிர்... அதிர்ச்சி சம்பவம்!...