சமீபத்திய உலகச் செய்திகள் World News in Tamil, உலக தமிழ் செய்திகள், US, UK, Israel News and updates in Tamil
இலங்கை டூ திருச்சி வந்த விமானம்.. சுங்கத்துறை சோதனையில் சிக்கிய ரூ.36.89 லட்சம் தங்கம்.. சுங்கத்துறை தீவிர விசாரணை!
திருச்சி மாவட்டத்தில் புதுக்கோட்டை செல்லும் சாலையில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல, உள்நாட்டிலும் விமான சேவை இருந்து வருகிறது. பயணிகள் அதிக அளவு பயன்படுத்தி வரும் இந்த விமான நிலையத்தில் துணை ராணுவ படையினர், மாநில போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் மற்றும் பயணிகள் ஆகியவை உரிய சோதனைக்கு பின்னரே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதே போல, வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் பயணம் மேற்கொண்டு வரும் பயணிகள் சோதனைக்கு பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்படுபவர். அவ்வளவு அளவிலான சோதனை கட்டுப்பாடுகள் இருந்து வருகிறது.
இலங்கையில் இருந்து தீருச்சி வந்த விமானம்
இவ்வளவு சோதனைகளையும் மீறி சில பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம், அரிய வகை உயிரினங்கள், இ சிகரெட் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் துணை ராணுவ படையினர் சோதனையில் பறிமுதல் செய்வதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், இலங்கை நாட்டின் தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சிக்கு பயணிகள் விமானம் ஒன்று வந்தது. இதில், ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.
மேலும் படிக்க: “எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா” குறுகலான பாதையில் சிக்கிய கார்… காரணம்.. “That கூகுள் மேப்”
ரூ. 36.89 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்
அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கி வெளியே செல்ல முற்பட்டபோது சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், இரண்டு ஆண் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். இதில், அந்த நபர்கள் தங்களது உடம்பில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 36 லட்சத்து 89 ஆயிரம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரு பயணிகள் மீது வழக்குப்பதிவு- விசாரணை
இதைத் தொடர்ந்து, இலங்கையில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த இரு ஆண் பயணிகள் மீதும் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், வேறு ஏதேனும் பொருட்களை கடத்தி வந்தனரா. இதே போல, இதற்கு முன்பு ஏதேனும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்திவரப்பட்டதா. வேறு யாருக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பன உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
பழுதான துப்பாக்கியால் தப்பிய உயிர்கள்.. அமெரிக்காவில் இந்து கோவில் மீது தாக்குதல் சதித்திட்டம்.. 19 வயது இளைஞர் கைது!
அமெரிக்காவின் (America) இல்லினாய்ஸ் மாநிலத்தில் உள்ள இந்து கோவிலைத் தாக்க சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 19 வயது இளைஞரை காவல்துறை கைது செய்துள்ளது. பாலடைன் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸான்ட்ரோஸ் பாபோராகிஸ் அக்டோபர் 11 அன்று காவலில் எடுக்கப்பட்டார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் வெள்ளையின மேலாதிக்க சித்தாந்தம் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கு எதிரான வன்முறை குறித்த குறிப்புகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் முக்கிய இந்துப் பண்டிகையான நவராத்திரி தொடங்கவிருக்கும் நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பது கவலையளிக்கிறது.  அந்த இளைஞரின் துப்பாக்கி சரிவர வேலை செய்யாமல் பழுதானதால் இந்த சதித்திட்டம் அரங்கேராமல் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே போலீசாரும் தீவிரமாக செயல்பட்டு அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.
இது எப்படி வெளிச்சத்திற்கு வந்தது?
பாபோராக்கிஸ் ஒரு பெரும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலுக்குத் திட்டமிட்டு வருவதாக மற்றொரு நபர் காவல்துறைக்குத் தகவல் அளித்ததை அடுத்து விசாரணை தொடங்கியது. அந்தத் தகவல் அளித்தவர், சந்தேக நபர் தனக்கு அந்தப் பெரும் துப்பாக்கிச் சூட்டுத் திட்டத்தை விவரிக்கும் ஒரு ஆவணத்தையும், அதனுடன் ஒரு துப்பாக்கி, தோட்டாக்கூடுகள், உடல் கவசம் மற்றும் பிற தந்திரோபாய உபகரணங்களின் படங்களையும் அனுப்பியதாகக் காவல்துறையிடம் கூறினார். விசாரணையின் ஒரு பகுதியாக, அக்டோபர் 11, ஞாயிற்றுக்கிழமை அன்று பாபோராக்கிஸ் இந்தத் தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளது என்று காவல்துறை தீர்மானித்தது. அரோரா பகுதியில் உள்ள ஒரு இந்து கோவிலை அவர் குறிவைத்திருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். இருப்பினும், அவர் குறிவைத்த குறிப்பிட்ட கோவில் குறித்த விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது.
பதிவு
India's Chicago Consulate appreciates timely police action in arrest of 19-year-old over alleged Hindu Temple shooting plot
Read @ANI Story | https://t.co/LZ86AKKZPL
#India #Chicago #HinduTemple https://t.co/KwqZnaumZD
— ANI Digital (@ani_digital) October 15, 2026
ஞாயிற்றுக்கிழமை ஒரு “சிறப்பு நாள்” என்று பாபோராக்கிஸ் தனது சக ஊழியர்களிடம் கூறியதாக காவல்துறை தெரிவித்தது. மேலும், அன்று அவர் ஒரு சக ஊழியரை அழைத்து, தனது துப்பாக்கி பழுதடைந்துவிட்டதாகக் கூறிவிட்டு அவசரமாக அங்கிருந்து சென்றுவிட்டார்.
Also Read: ரியாத் விமான நிலையம் மீது ஹவுதி தாக்குதல்.. இந்தியர் ஒருவர் உயிரிழப்பு
வீட்டில் ஆயுதங்கள் பறிமுதல்
பாலடைன் போலீசார் சந்தேக நபரின் இல்லத்தில் சோதனை நடத்தி, ஒரு துப்பாக்கி, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள், நூற்றுக்கணக்கான கூடுதல் தோட்டாக்கள், உடல் கவசத்துடன் கூடிய ஒரு மேலங்கி போன்றவற்றைக் கைப்பற்றினர். அந்த மேலங்கியில் வெள்ளையின மேலாதிக்க பயங்கரவாதத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கரும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பபோராகிஸ் மீது, பயங்கரவாத அச்சுறுத்தல்கள் விடுத்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளும், 16 அங்குலத்திற்கும் குறைவான குழல் கொண்ட துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக ஒரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு எஃப்.பி.ஐ-யுடன் இணைந்து விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அடுத்த நீதிமன்ற விசாரணை அக்டோபர் 30-ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ரியாத் விமான நிலையம் மீது ஹவுதி தாக்குதல்.. இந்தியர் ஒருவர் உயிரிழப்பு.. 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..
அக்டோபர் 14, 2026: சவுதி அரேபியாவின் ரியாத் கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது அக்டோபர் 10ஆம் தேதி நடத்தப்பட்ட ஹவுதி தாக்குதலில் காயமடைந்த இந்தியர்களில் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த மற்ற 11 பேரில் மூவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், எட்டு பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் நான்கு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரியாத் விமான நிலைய தாக்குதல் - வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்:
#WATCH | Delhi: MEA Spokesperson Randhir Jaiswal says, "... There has been a string of attacks in Saudi Arabia, including yesterday’s attack on Aramco headquarters. We condemn all such attacks on civilian infrastructure and call for them to cease immediately. They are totally unacceptable. We stand in solidarity with the people and government of Saudi Arabia in defence of their sovereignty and hope for a return to peace and normalcy in the region. Our embassy in Saudi Arabia is in regular touch with the Indian community and has issued advisories for their welfare. Flight schedules have been disrupted following attacks on airports, impacting Indian carriers, particularly flights to and from Riyadh, Dammam, Medina and Jeddah. The embassy is providing updated information to travellers and those stranded. The attack on 10 October injured 12 people, one of whom unfortunately passed away. His last rites were performed in Riyadh, as wished by his family, with assistance from the embassy. Of the 11 remaining injured, three have been discharged, while eight remain hospitalised, including four in the ICU. Embassy officials are regularly visiting them and staying in touch with their families. We remain committed to doing our best for the welfare and well-being of our nationals abroad."
— ANI (@ANI) October 14, 2026
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், உயிரிழந்த இந்தியரின் இறுதிச்சடங்கு அவரது குடும்பத்தினரின் விருப்பப்படி ரியாத்திலேயே நடைபெற்றதாகத் தெரிவித்தார். இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் இறுதிச்சடங்கு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களைத் தூதரக அதிகாரிகள் தொடர்ந்து நேரில் சந்தித்து வருவதாகவும், அவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
சவுதியில் பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
சவுதி அரேபியாவில் பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அப்பகுதியில் உள்ள அராம்கோ தலைமையகத்தின் மீதான தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: சவூதி அரேபியாவில் விமான நிலையம் மீது தாக்குதல்.. 12 பேர் உயிரிழப்பு
இத்தகைய தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்திய இந்தியா, சவுதி அரேபிய மக்களுக்கும் அரசுக்கும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. மேலும், அப்பகுதியில் அமைதியும் இயல்பு நிலையும் திரும்பும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை – தூதரகம் தீவிர கண்காணிப்பு
சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியத் தூதரகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமான நிலையங்கள் மீதான தாக்குதல்களால் ரியாத், தம்மாம், மதீனா, ஜெட்டா உள்ளிட்ட நகரங்களுக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: சவுதியில் இலங்கைத் தமிழருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து – வெளியான தகவல்
சவுதியில் இலங்கைத் தமிழருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து – வெளியான தகவல்
சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்துக்காக சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞர் சிவராசா அனோஜனின் தண்டனையை, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சவுதியில் புலம்பெயர் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த அனோஜன், இஸ்லாம் மற்றும் இறைத்தூதர் முகமது நபியை அவமதிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
சவுதியில் இலங்கைத் தமிழருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து
கடந்த அக்டோபர் 13, 2026 அன்று சவுதி உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்ததாக, இலங்கை வெளியுறவுத்துறை அக்டோபர் 14, 2026 இன்று வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தகவல் இலங்கையை சேர்ந்தவர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : தமிழ் வம்சாவளியை சேர்ந்தவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு – யார் இந்த நவநீதம் பிள்ளை?
கடந்த 2026 ஜூன் மாத இறுதியில் இலங்கையில் நடைபெற்ற இந்து யாத்திரையின்போது ஒருவர் நாயை உதைப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவியது. அப்போது ஒரு பயனர் இந்து கடவுள்கள் குறித்து இழிவாக பதிவிட்டதாக கூறப்படுகிறது. அதற்குப் பதிலளித்த அனோஜன், இறை தூதர் நபிகள் நாயகம் குறித்து தமிழில் அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிறிது நேரத்திலேயே அனோஜன் அந்தக் கருத்தை நீக்கிவிட்டு, மன்னிப்புக் கோரி வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். ஆனால், அதற்குள் அவர் கமெண்ட் செய்த பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட்டுடன் அவர் பணியாற்றும் நிறுவனத்தின் ஓனருக்கு புகார் அளித்திருக்கிறார். இதனையடுத்து அவர் சவுதி அரேபியா காவல்துறையினரிடம் தெரிவிக்க, கடந்த 2026 ஜூலை மாதம் சிவராசா அனோஜன் கைது செய்யப்பட்டார். அவரது போனும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் கடந்த 2026 ஜூலை 15 அன்று, அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றம் அனோஜனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 30 லட்சம் சவுதி ரியால் அபராதமும் விதித்தது. ஆனால், செப்டம்பர் 17 அன்று சவுதி மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்தத் தண்டனையை ரத்து செய்தது. அதற்குப் பதிலாக, ஷரியா சட்டத்தின் கீழ் மத நம்பிக்கைகளுக்கு எதிராக பேசிய குற்றத்துக்காக அனோஜனுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.
மரண தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை அதிபர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் தலைமையில் இலங்கை அரசு சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியது. செப்டம்பர் 21 அன்று அனோஜனின் குடும்பத்தினர் அதிபர் அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர். பொதுமன்னிப்பு பெறுவதற்கு அரசு எந்த முயற்சியையும் விட்டுவைக்காது என அப்போது அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. எம்.பி.க்களின் கடிதம்
இதற்கிடையே, அனோஜனுக்குக் கருணை காட்டுமாறு கோரி, இலங்கையைச் சேர்ந்த ஆறு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்க ள் செப்டம்பர் 24, 2026 அன்று சவுதி வெளியுறவு அமைச்சருக்குக் கடிதம் எழுதினர்.மேலும் மதம் கடந்து தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : தேடிவந்த காதல்.. ‘நோ’ சொல்ல மனசில்லை.. 21 பெண்களை மணந்த யாசகரின் விசித்திர கதை!!
மேல்முறையீடுக்காக இலங்கையிலிருந்து சிறப்புச் சட்டக் குழு ஒன்று ரியாத் சென்றது. கடந்த 0அக்டோபர் 11, 2026 அன்று சவுதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இலங்கைத் தூதரும் சட்டக் குழுவுடன் இணைந்து சவுதி அதிகாரிகளுடன் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்ட இரண்டே நாள்களில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் பீடி இலைகள்… தூத்துக்குடியில் கியூ பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தம்.. பரபரப்பு பின்னணி
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காவல் உட்கோட்டம், திருச்செந்தூர் வட்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வீரபாண்டியபட்டினம் கடற்கரை பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், கியூ பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராமர், கீதன் மற்றும் காவலர்கள் இசக்கி முத்து, பாலமுருகன் இருதய ராஜகுமார், பழனி மற்றும் பேச்சி முத்து ஆகியோர் வீரபாண்டியபட்டினம் கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை ( அக்டோபர் 13- ஆம் தேதி) அதிகாலை சுமார் 2: 40 மணி அளவில் வீரபாண்டியபட்டினத்தில் ஒரு சரக்கு வாகனம் வந்து கொண்டிருந்தது.
40 மூட்டைகளில் 35 கிலோ பீடி இலைகள்
அந்த வாகனத்தை சந்தேகத்தின் பேரில், கியூ பிரிவு போலீசார் மரித்து சோதனை மேற்கொண்டனர். இதில், ஏராளமான மூட்டைகள் இருந்தது. அதனை போலீசார் சோதனை செய்த போது பீடி இலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 40 மூட்டைகளில் 35 கிலோ எடைக்கு பீடி இலைகள் இருந்தன. இதனை, போலீசார் பறிமுதல் செய்தனர். முன்னதாக, போலீசார் வாகனத்தை நிறுத்த முற்பட்டபோது, அந்த வாகனத்தில் இருந்த மர்ம நபர்கள் வாகனத்தை நடு ரோட்டில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
மேலும் படிக்க: சென்னையில் “சோழ தேசம் 2026” கண்காட்சி.. ஆயிரம் ஆண்டு கால சோழர் வரலாறு.. பிரம்மிக்க வைக்கும் பல்வேறு அம்சங்கள்.. முழு விவரம்!
இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்
அவர்களை, போலீசார் விரட்டி பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதை தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் அதனை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக, கியூ பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், முதல் கட்ட விசாரணையில் தமிழக பகுதியில் இருந்து பீடி இலைகளை இலங்கைக்கு கப்பல் மூலமாக கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.
ரூ. 60 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள்.. கியூ பிரிவு போலீஸ் விசாரணை
இந்த பீடி இலைகளின் மதிப்பு ரூ. 60 லட்சம் ஆகும். இதனை கடத்த முயன்ற நபர்கள் தப்பி ஓடிய நிலையில், அவர்களை தீவிரமாக தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, கியூ பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 35 கிலோ பீடி இலைகள் மற்றும் அதனை கடத்தி வந்த சரக்கு வாகனம் ஆகியவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்க க்யூ பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவுக்கு எதிராக எங்கள் கடல் பரப்பை பயன்படுத்த அனுமதியில்லை: இலங்கை அதிபர் உறுதி
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கையின் நிலப்பரப்பையோ, வான்பரப்பையோ பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். மேலும் எங்கள் அண்டை நாடான இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு விரோதச் செயலுக்கும் எங்கள் கடல் பரப்பையோ நில பரப்பையோ ஒருபோதும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று ெதரிவித்தார்.
'இந்தியாவுக்கு எதிராக எங்கள் கடல் பரப்பை பயன்படுத்த அனுமதியில்லை'
மேற்கு ஆசியாவை உலுக்கி வரும் அமெரிக்கா – ஈரான் மோதல் நீடித்து வரும் சூழலில், இலங்கை அணிசேரா வெளியுறவுக் கொள்கையையே தொடர்ந்து பின்பற்றும் என்றும் அந்நாட்டு அதிபர் திசாநாயக்க மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும், கடந்த 3 ஆண்டுகளில் தனது அரசு வெளியுறவுத் துறையில் எட்டிய சாதனைகளையும் அவர் நினைவுகூர்ந்தார். இது தொடர்பாக பேசிய அவர், நாங்கள் ராணுவ வலிமை கொண்ட நாடு அல்ல. எனவே எந்தவொரு ராணுவ மோதலிலும் நாங்கள் ஒரு நிலைப்பாடு எஎடுக்கமாட்டோம்.
இதையும் படிக்க : போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல ப்ளான்.. நாகை துறைமுகத்தில் சிக்கிய பெண்.. குடியுரிமை அதிகாரிகள் அதிரடி!
மேலும், போரில் தங்கள் பக்கம் நிற்குமாறு அமெரிக்கா, ஈரான் ஆகிய இரு நாடுகளும் விடுத்த கோரிக்கைகளையும் இலங்கை நிராகரித்துள்ளது. அமெரிக்க விமானங்கள் இலங்கையில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. போர்க்கப்பல்களை அனுப்ப ஈரான் விடுத்த கோரிக்கையும் ஏற்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மனிதாபிமான ரீதியில் உதவி கோரப்பட்டால், அதை வழங்கத் தயங்க மாட்டோம் என்றும் திசாநாயக்க குறிப்பிட்டார். கடந்த2026 மார்ச் மாதம், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்ட ஈரானியக் கப்பலின் மாலுமிகளுக்கு இலங்கை மருத்துவமனைச் சிகிச்சை அளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த செப்டம்பர், 2026 மாதம் 3 நாள் பயணமாக இலங்கை சென்று, கொழும்பில் திசாநாயக்கவைச் சந்தித்துப் பேசியிருந்தார். அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அப்போது, நாட்டின் பாதுகாப்பு, அமைதி, வளம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான செயல்பாடுகளுக்கு இலங்கையின் பகுதிகளை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அந்தச் சந்திப்பின்போதும் திசாநாயக்க உறுதியளித்திருந்தார்.
இதையும் படிக்க : பிரான்சிஸ் ஹால்சனுக்கு 2026 இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு – யார் இவர்?
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளை இலங்கை அதிபரிடம் தெரிவித்த ராஜ்நாத் சிங், அதிபராக இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ததற்காகவும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். நெருங்கிய அண்டை நாடுகளாக இணைந்து செயல்படுவது, இருநாட்டு மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காகக் கடல்சார் கூட்டாண்மையைத் தொடர்வது, பிராந்தியப் பாதுகாப்புக்கு ஆதரவளிப்பது ஆகியவற்றில் இரு நாடுகளும் தங்கள் உறுதிப்பாட்டை அப்போது மீண்டும் வெளிப்படுத்தின.
கூண்டுக்குள் குதித்த நபர்.. கண் இமைக்கும் நேரத்தில் பிரிந்த உயிர்.. இங்கிலாந்து மிருகக்காட்சி சாலையில் அதிர்ச்சி!
இங்கிலாந்து நாட்டில் யார்ஷயர் மிருகக்காட்சி சாலை அமைந்துள்ளது. இங்கு, சிங்கம், புலி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் அடைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மிருகக்காட்சி சாலையை சுற்றி பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்களில் ஒரு நபர் திடீரென புலி அடைக்கப்பட்டு இருந்த இடத்துக்குள் திடீரென குதித்தார். அப்போது, அவரைப் பார்த்த அந்த புலி ஆக்ரோசத்துடன் சீறி பாய்ந்து வந்து கடித்துக் கொன்றது. இந்த காட்சிகள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், சம்பந்தப்பட்ட புலியை கருணை கொலை செய்ய முடியாது என்று மிருக காட்சி சாலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகவலைதளங்களில் வைரலாக பரவும் காட்சிகள்
சமூக ஊடகங்களில் பரவி வரும் காட்சிகளின் அடர் நிற நீண்ட கை சட்டை அணிந்திருந்த நபர் புலி அடைக்கப்பட்டு இருந்த இடத்துக்குள் குதித்தார். அப்போது, புல்வெளியில் அமர்ந்து உறுமிக் கொண்டு இருந்த புலி அவரின் மீது ஆக்ரோசத்துடன் பாய்ந்து தன் விரலை நீட்டுவது பதிவாகி உள்ளது. அப்போது, அந்த நபர் தப்பிக்கும் முயன்றும் முடியவில்லை. தொடர்ந்து, அந்த புலி அவருக்கு எந்த வாய்ப்பும் அளிக்காமல் தன் பாதங்களால் அவரை தாக்கியது.
மேலும் படிக்க: பிளேக் ஆய்வகத்தில் பணியாற்றிய ஆராய்ச்சியாளர் பலி.. டெஸ்ட் டியூப் வெடித்தது தான் காரணமா?
ஒருவரை கடித்து கொன்ற புலி
ஒரு கட்டத்தில் அந்த புலி அந்த நபரின் மீது ஏறி தோள்பட்டையை கடித்தது. இதன் பின்னர், அந்த புலி அந்த நபரை தாக்கியதில் அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது என காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அறிந்த அவசர மருத்துவ சேவைகள் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த நபர் குறித்த அடையாளம் உடனடியாக வெளியிடப்படவில்லை.
#Inglaterra 🚨🐅 ¡INGRESÓ AL ESPACIO DE UN TIGRE Y MURIÓ!
La Policía de South Yorkshire confirmó el fallecimiento de un hombre tras un ataque en el Yorkshire Wildlife Park. El felino no resultó herido. https://t.co/dMZ0VQTL1e
— EL INCORRECTO (@elincorrectosoy) October 11, 2026
மிருகக் காட்சி சாலை நிர்வாகம் விளக்கம்
மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து புலியாக இருப்பிடத்திலேயே இருந்ததாகவும், பொது மக்களுக்கு பரவலான ஆபத்து எதுவும் இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த மிருகக்காட்சி சாலை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த புலியை கருணை கொலை செய்ய வேண்டும் என்று சிலர் வலியுறுத்தினர். ஆனால், அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படாது என்று மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் விமான நிலையம் மீது தாக்குதல்.. 12 பேர் உயிரிழப்பு
தாக்குதலில் காயமடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. GACA வெளியிட்ட விவரங்களின்படி, உயிரிழந்தவர்களில் நான்கு பேர் சவூதி குடிமக்கள் ஆவர். மற்ற எட்டு பேர் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் இருவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், மேலும் அமெரிக்கா, எகிப்து, ஜோர்டான், சிரியா, பாலஸ்தீனம் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர் ஆவர். இந்தத் தாக்குதலால் விமான நிலையச் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், சேதத்தின் அளவு மதிப்பிடப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிகாரிகள் தங்கள் இரங்கலைத் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வாழ்த்தினர். காயமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.
விமானச் செயல்பாடுகள் பாதிப்பு
தாக்குதலைத் தொடர்ந்து, கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பயணிகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்வதற்காக ஏராளமான ஆம்புலன்ஸ்கள் விமான நிலையத்திற்கு வந்தன. விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்பு, பயணிகள் தத்தமது விமான நிறுவனங்களிடம் விமானப் பயண அட்டவணையைச் சரிபார்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இது விமானச் செயல்பாடுகளைக் கடுமையாகப் பாதித்தது. விமானப் பயணங்களைக் கண்காணிக்கும் தளமான Flightradar24-இன் படி, ரியாத்திற்குச் செல்லும் விமானங்கள் மற்ற பகுதிகளுக்குத் திருப்பி விடப்பட்டன. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.05 மணிக்குக் கடைசி விமானம் தரையிறங்கிய பிறகும், இந்த விமானத் திருப்பம் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் தொடர்ந்தது.
24 மணி நேரத்தில் 225 விமானங்கள் ரத்து
விமானங்கள் தடைபட்டதால் பயணிகள் கடுமையான இடையூறுகளைச் சந்தித்தனர். கடந்த 24 மணி நேரத்தில் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 225 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தூதரகங்களும் தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம், விமான நிலையம் மீதான தாக்குதல் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறியது. அமெரிக்கக் குடிமக்கள் விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளைத் தவிர்க்குமாறு அது அறிவுறுத்தியது.
பிரிட்டிஷ் தூதரகமும் இந்தச் சம்பவத்தை ஒரு தீவிரமான நிகழ்வாக விவரித்ததுடன், பிரிட்டிஷ் குடிமக்கள் விமான நிலையப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்தது. கடந்த வாரத்தில் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
தமிழ் வம்சாவளியை சேர்ந்தவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு – யார் இந்த நவநீதம் பிள்ளை?
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சட்ட நிபுணர் நவநீதம் ‘பிள்ளைக்கு 2026 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சட்டம், மனித உரிமைகள் மற்றும் உலக அமைதியை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் வம்சாவளியை சேர்ந்தவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
புகழ்பெற்ற சட்ட நிபுணரும், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருமான நவநீதம் பிள்ளைக்கு 2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச சட்டக் கோட்பாடுகளை நிலைநாட்டவும், போர்க்குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், விளிம்புநிலை சமூகங்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கவும் அவர் பல ஆண்டுகளாக மேற்கொண்ட தளராத போராட்டத்தை அங்கீகரிக்கும் வகையில் நோபல் குழு இந்த உயரிய விருதை அறிவித்தது.
இதையும் படிக்க : Noble Prize 2026: 2026 வேதியியலுக்கான நோபல் பரிசு ஹென்றி ககன், கென்சோ சோவாய்க்கு அறிவிப்பு..
உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் 2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, சிறந்த சட்ட நிபுணரும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருமான நவநீதம் பிள்ளைக்கு வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தை வலுப்படுத்துதல், உலக அமைதியை நிலைநாட்டுதல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் நார்வேஜிய நோபல் குழு இவ்விருதை அறிவித்தது.
போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுத்த அவரது துணிச்சலையும், உலகம் முழுவதும் உள்ள விளிம்புநிலை குழுக்களுக்கு நீதியை பெற்றுத் தர அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் அக்குழு பாராட்டியது. சர்வதேச சட்ட அமைப்பை வலுப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்கு, அமைதியை நிலைநாட்டுவதற்கான ஒரு வலுவான அடித்தளமாக அமைந்திருப்பதாகவும் அது குறிப்பிட்டது.
யார் இந்த நவநீதம் பிள்ளை?
நவநீதம் பிள்ளை 1941 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் தமிழ் வம்சாவளி குடும்பம் ஒன்றில் பிறந்தார். நிறவெறி ஆட்சிக் காலத்தில் பல்வேறு வகையான பாகுபாடுகளை எதிர்கொண்ட பிறகு, அவர் ஒரு வழக்கறிஞராக உயர்ந்தார். தென் ஆப்பிரிக்காவின் நதால் மாகாணத்தில் சொந்தமாக சட்ட அலுவலகத்தைத் தொடங்கிய முதல் வெள்ளையர் அல்லாத பெண்மணி என்ற சாதனையை அவர் படைத்தார். நெல்சன் மண்டேலா போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காகவும், நிறவெறிக்கு எதிரான செயல்பாட்டாளர்களுக்காகவும் அவர் நீதிமன்றத்தில் வாதாடினார்.
ருவாண்டா இனப்படுகொலை தொடர்பான வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தில் நீதிபதியாகவும் தலைவராகவும் அவர் பணியாற்றினார். போர்க்கால பாலியல் வன்முறையை இனப்படுகொலையின் ஒரு செயலாக அங்கீகரித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் அவர் முக்கிய பங்காற்றினார். மேலும், ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் அவர் பணியாற்றினார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரிவின் தலைவராக, உலகம் முழுவதும் குடிமை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அவர் குரல் கொடுத்தார்.
இதையும் படிக்க : 4 ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷ்யா உக்ரைன் போர்.. சமரச முயற்சியில் களமிறங்கும் இந்தியா
தேடிவந்த காதல்.. ‘நோ’ சொல்ல மனசில்லை.. 21 பெண்களை மணந்த யாசகரின் விசித்திர கதை!!
அக்டோபர், 09: இன்றைய காலகட்டத்தில் ஒரு திருமணத்தைச் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதற்கே பலரும் பல்வேறு சவால்களைச் சந்தித்து வரும் நிலையில், பங்களாதேஷில் யாசகம் எடுத்து வாழ்க்கை நடத்தி வரும் நபர் ஒருவர் 21 பெண்களைத் திருமணம் செய்து கொண்ட விசித்திரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெண்களாகவே தன்னைத் தேடிவந்து காதலைத் தெரிவித்துத் திருமணம் செய்யக் கோரியதால், அவர்களின் மனம் புண்படக் கூடாது என்ற எண்ணத்தில் தான் திருமணத்திற்குச் சம்மதித்ததாக அந்த நபர் கூறியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் இந்த விசித்திர விவகாரம் தற்போது காட்டுத் தீ போல் பரவி வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க : போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல ப்ளான்.. நாகை துறைமுகத்தில் சிக்கிய பெண்.. குடியுரிமை அதிகாரிகள் அதிரடி!
21 திருமணங்களின் விசித்திர பின்னணி:
பங்களாதேஷைச் சேர்ந்த மோரு மியா என்ற 35 வயது நபருக்கே இந்த விசித்திர அனுபவம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் இவருக்கு அவரது குடும்பத்தினர் முறைப்படி முதல் திருமணத்தைச் செய்து வைத்துள்ளனர். முதல் மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், அடுத்தடுத்துப் பல பெண்கள் மோரு மியாவைத் தேடிவந்து தங்கள் விருப்பத்தையும் காதலையும் தெரிவித்துள்ளனர். தான் பெண்களைத் தேடிச் செல்லவில்லை என்றும், தன்னை நாடிவந்த பெண்களின் மனம் கஷ்டப்படக் கூடாது என்பதற்காகவே அவர்கள் அனைவரையும் அடுத்தடுத்துத் திருமணம் செய்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனைவிகளின் பெயர்கள் கூட நினைவில் இல்லை:
21 பெண்களைத் திருமணம் செய்து கொண்டபோதிலும், மோரு மியாவுக்கு தனது மனைவிகள் அனைவரின் பெயர்களையும் கூட நினைவில் வைத்திருக்க முடியவில்லை என்பது மற்றொரு சுவாரசியமான உண்மையாகும். ஊடகவியலாளர்கள் அவரிடம் மனைவிகளின் பெயர்களைக் கேட்டபோது, ஷீலா, நர்கிஸ், செலினா, ஆலியா, தாரா, ஜோத்ஸ்னா, ராபியா, பாரூல் போன்ற வெறும் 8 மனைவிகளின் பெயர்களை மட்டுமே அவரால் கூற முடிந்தது. தம்மைக் காதலித்த பெண்களில் பலரும் தன்னை விட வயதில் மூத்தவர்கள் என்றும், சமுதாயம் அவர்களைக் கைவிட்டு விடக் கூடாது என்ற நன்னோக்கிலும், அவர்களின் மனம் உடைந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே அவர்களை ஏற்றுக்கொண்டதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதையும் படிக்க: சவுதியில் இலங்கைத் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை: தாய் கண்ணீர் கோரிக்கை – என்ன நடந்தது?
தினமும் ஒரு மனைவியுடன் யாசகம்:
தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி? தஞ்சை- கோவையில் சிக்கிய 7 பேருக்கு தீவிரவாத தொடர்பு.. என்ஐஏ அதிர்ச்சி தகவல்!
டெல்லி, கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மக்சூத் அலி என்பவருக்கு தொடர்பு இருப்பதும், அவர் கோயம்புத்தூரில் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. அதன் அடிப்படையில், தமிழக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் உதவியுடன், உத்தர பிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கடந்த செப்டம்பர் 16- ஆம் தேதி கோவையில் அவரை கைது செய்து உத்தரப்பிரதேசத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவரிடம் நடத்திய விசாரணையில், கோவையில் வேலை செய்வது போல பாகிஸ்தானை சேர்ந்த ஷாசாத் பட்டி பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததும், தமிழகத்தை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.
தஞ்சாவூர்- கோவையில் கைதான 7 பேர்
அதன் அடிப்படையில், தஞ்சாவூர் மற்றும் கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஜாகிர் உசேன், யாசர் அப்துல், ஷேக் பரீத், உமர் முக்தர், அப்துல், சம்சுதீன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இவர்களுடன் தொடர்பில் இருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழகத்தில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில். செல்போன்கள். பென் டிரைவ்கள், ஹிஸ்ப்- உத்- தங்ரிர் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்புடைய 20- க்கும் மேற்பட்ட புத்தகங்கள், மடிக்கணினிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
மேலும் படிக்க: ரூ.4,730 கோடி மணல் குவாரி முறைகேடு.. தோண்டி துருவிய ED.. சீனில் இறங்கிய DVAC.. பீதியில் திமுக புள்ளிகள்!
ஷாசாத் பட்டி தீவிரவாத அமைப்புடன் தொடர்பு
இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 7 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தனித்தனியாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி. அதில், கைதானவர்களுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஷாசாத் பட்டி என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த ஷாசாத் பட்டி என்பவர் தொடக்கத்தில் ரௌடியாக செயல்பட்டு, பின்னர் சர்வதேச போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதுடன், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆதரவுடன் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், ஒரு பயங்கரவாத அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு நாச வேலைகளை செய்து வருகிறார் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் நாச வேலைகள் நடத்த திட்டம்
இதில், தொடர்புடைய தமிழக இளைஞர்கள் மூலமாக நாச வேலைகளுக்கு திட்டமிட்டதும், பணம், போதை பொருள், ஆயுதங்கள் கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது மட்டும் இன்றி இந்தியாவில் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல் நடத்துவதற்கான முயற்சிகளிலும், பாதுகாப்பு தொடர்பான இடங்களை கண்காணிக்க சூரிய சக்தியில் இயங்கும் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி அதனை பாகிஸ்தானில் இருந்து கண்காணித்து வந்ததும் தெரிய வந்துள்ளதாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதியில் இலங்கைத் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை: தாய் கண்ணீர் கோரிக்கை – என்ன நடந்தது?
சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்துக்காக, சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கை தமிழ் இளைஞர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், இலங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதற்கிடையில் தனது மகன் செய்த தவறை மன்னித்து அவரை விடுவிக்க வேண்டும் என சிவராசாவின் தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளா்.
சவுதியில் இலங்கைத் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை
இலங்கையைச் சேர்ந்த 24 வயதான சிவராசா அனோஜன், சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஒரு கருத்து, இஸ்லாம் மதத்தையும் நபிகள் நாயகத்தையும் அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் கூறி, அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்து யாத்திரையின்போது ஒருவர் நாயை உதைப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவியது. அப்போது ஒரு பயனர் இந்து கடவுள்கள் குறித்து இழிவாக பதிவிட்டதாக கூறப்படுகிறது. அதற்குப் பதிலளித்த அனோஜன், நபிகள் நாயகம் குறித்து தமிழில் அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க : போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல ப்ளான்.. நாகை துறைமுகத்தில் சிக்கிய பெண்.. குடியுரிமை அதிகாரிகள் அதிரடி!
இந்த நிலையில் சிறிது நேரத்திலேயே அனோஜன் அந்தக் கருத்தை நீக்கிவிட்டு, மன்னிப்புக் கோரி வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். ஆனால், அதற்குள் அவர் கமெண்ட் செய்த பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட்டுடன் அவர் பணியாற்றும் நிறுவனத்தின் ஓனருக்கு புகார் அளித்திருக்கிறார். இதனையடுத்து அவர் சவுதி அரேபியா காவல்துறையினரிடம் தெரிவிக்க, கடந்த 2026 ஜூலை மாதம் சிவராசா அனோஜன் கைது செய்யப்பட்டார். அவரது போனும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கை விசாரித்த சவுதி அரேபியா நீதிமன்றம், முதலில் அனோஜனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 30 லட்சமும் அபராதமும் விதித்தது. இதனை எதிர்த்து, செப்டம்பர் 17, 2026 சவுதி அரேபியா அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை சைபர் குற்றச் சட்டத்தின் கீழ் விசாரிக்க கூடாது என்றும், ஷரியா சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் என அரசுத் தரப்பு தனது வாதத்தை முன் வைத்தது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அனோஜனின் தண்டனை மரண தண்டனையாக மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், இது குறித்து சவுதி அரேபியா அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையும் படிக்க : பிளேக் ஆய்வகத்தில் பணியாற்றிய ஆராய்ச்சியாளர் பலி.. டெஸ்ட் டியூப் வெடித்தது தான் காரணமா?
இந்த நிலையில் சிவராசா அனோஜனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லாததால் அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இது தொடர்பாக பிபிசிக்கு அவரது தாய் அளித்த அளித்த பேட்டியில், தனது மகன் செய்த தவறை மன்னித்து, அவரைத் தங்களிடம் திருப்பி அனுப்ப வேண்டும் என்று சவுதி அதிகாரிகளிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார்.
Noble Prize 2026: 2026 வேதியியலுக்கான நோபல் பரிசு ஹென்றி ககன், கென்சோ சோவாய்க்கு அறிவிப்பு..
அக்டோபர் 7, 2026: 2026ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் ஹென்றி ககன் மற்றும் கென்சோ சோவாய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சமச்சீரற்ற கரிமத் தொகுப்பில் (Asymmetric Organic Synthesis) நேரியல் அல்லாத விளைவுகள் (Non-linear Effects) மற்றும் தன்னூக்க வினையூக்கம் (Autocatalysis) தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் பரிசு வழங்கும் அமைப்பு புதன்கிழமை அறிவித்தது.
நோபல் பரிசு அறிவிப்பு வாரத்தில் வேதியியலுக்கான நோபல் பரிசு வழக்கமாக மூன்றாவது பரிசாக அறிவிக்கப்படும். இதற்கு முன்னதாக திங்கள்கிழமை மருத்துவத்திற்கான நோபல் பரிசும், செவ்வாய்க்கிழமை இயற்பியலுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டன.
வேதியலுக்கான நோபல் பரிசு:
இந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு அடிப்படை வேதியியல் சார்ந்த முக்கிய கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்படுவதாக வேதியியலுக்கான நோபல் குழுவின் தலைவர் ஹெய்னர் லிங்கே தெரிவித்தார். பல மூலக்கூறுகள் இரண்டு வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன என்றும், அவை ஒன்றுக்கொன்று கண்ணாடியில் தெரியும் பிம்பங்களைப் போன்றதாக இருந்தாலும் ஒரே மாதிரியானவை அல்ல என்றும் அவர் விளக்கினார். இத்தகைய மூலக்கூறுகள் ‘சிரல்’ (Chiral) மூலக்கூறுகள் என அழைக்கப்படுகின்றன. கிரேக்க மொழியில் ‘கை’ என்ற பொருளைக் கொண்ட சொல்லிலிருந்து ‘சிரல்’ என்ற பெயர் உருவானதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஆல்ஃபிரட் நோபலின் உயிலின்படி அறிவியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் நோபல் பரிசுகள் 1901ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. உலகப் போர்களின் காலகட்டங்களில் சில இடைவெளிகள் ஏற்பட்டிருந்தாலும், தொடர்ந்து இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தொழில்முறையில் வேதியியலாளரான ஆல்ஃபிரட் நோபல், குறிப்பாக டைனமைட் உள்ளிட்ட கண்டுபிடிப்புகள் மூலம் பெரும் செல்வத்தை ஈட்டினார். பின்னர் ஸ்வீடன் மத்திய வங்கியின் நிதியுதவியுடன் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும் படிக்க:  2026 மருத்துவத்திற்கான நோபல் பரிசு: ஆப்டோஜெனெடிக்ஸ் ஆராய்ச்சிக்காக 3 விஞ்ஞானிகளுக்கு கவுரவம்
கடந்த ஆண்டு 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல்:
கடந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு சுசுமு கிடகவா, ரிச்சர்ட் ராப்சன் மற்றும் ஓமர் யாகி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. உலோகம்-கரிம கட்டமைப்புகள் (Metal-Organic Frameworks) எனப்படும் மூலக்கூறு கட்டமைப்புகளை உருவாக்கியதற்காக அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. காலநிலை மாற்றம் மற்றும் நன்னீர் பற்றாக்குறை போன்ற சவால்களை எதிர்கொள்ள இந்தக் கட்டமைப்புகள் உதவக்கூடியவை.
2026ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்ற ஹென்றி ககன் மற்றும் கென்சோ சோவாய் ஆகியோர் டிசம்பர் 10ஆம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் ஸ்வீடன் மன்னர் கார்ல் 16ஆம் குஸ்டாஃப் அவர்களிடம் இருந்து பதக்கங்களைப் பெற உள்ளனர். ஆல்ஃபிரட் நோபல் மறைந்த தினமான டிசம்பர் 10ஆம் தேதி இந்த விருது வழங்கும் விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பிரான்சிஸ் ஹால்சனுக்கு 2026 இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு – யார் இவர்?
4 ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷ்யா உக்ரைன் போர்.. சமரச முயற்சியில் களமிறங்கும் இந்தியா
அக்டோபர் 7, 2026: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், மூன்று அம்சங்களைக் கொண்ட போர் நிறுத்தத் திட்டத்தை இந்தியா முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள இந்தப் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான பேச்சுவார்த்தையில் இந்தியா அதிக பங்கு வகிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் போர் நிறுத்தத் திட்டத்தில் எரிசக்தி கட்டமைப்புகள், கருங்கடல் வழியாக வர்த்தகக் கப்பல் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புகள் தொடர்பான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த மாதம் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உக்ரைன் சென்றிருந்தபோது, இந்தியா இந்தத் திட்டத்தை உக்ரைனிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா கூறுகையில், இந்தியாவிடம் இருந்து இதுபோன்ற ஒரு திட்டம் கிடைத்துள்ளதாகவும், ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவர முன்வைக்கப்பட்டுள்ள நான்கு சர்வதேச முயற்சிகளில் இந்தியாவின் திட்டம் விரிவானதாக இருப்பதாகவும் தெரிவித்தார். துருக்கி, எகிப்து மற்றும் அமெரிக்காவிடமிருந்தும் உக்ரைனுக்கு போர் நிறுத்தம் தொடர்பான முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
இந்தியாவின் 3 அம்ச திட்டம் என்ன?
இந்தியாவின் திட்டத்தின்படி, எரிசக்தி நிலையங்கள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்துவது, கருங்கடல் துறைமுகங்கள் வழியாக தானியங்கள் மற்றும் எரிசக்தி வளங்களின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வது, கருங்கடல் வழியாக செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.
மேலும் படிக்க: பிரான்சிஸ் ஹால்சனுக்கு 2026 இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு – யார் இவர்?
எகிப்து மற்றும் துருக்கி முன்வைத்துள்ள திட்டங்கள் பெரும்பாலும் கருங்கடல் வழியாக தானியங்கள் தடையின்றி கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்வதிலும், வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துவதிலும் கவனம் செலுத்துகின்றன. அதேநேரத்தில், அமெரிக்காவின் திட்டம் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக இந்தியா நடுநிலை நிலைப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. அதேநேரத்தில், போரை நிறுத்த வேண்டும் என்றும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறுகையில், இந்தியா வெறும் கருத்துகளைத் தெரிவிப்பதைத் தாண்டி, மோதல்களைக் குறைப்பதற்காக மாஸ்கோ மற்றும் கீவ் ஆகிய இரு தரப்புடனும் நடைமுறை சார்ந்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க: போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல ப்ளான்.. நாகை துறைமுகத்தில் சிக்கிய பெண்.. குடியுரிமை அதிகாரிகள் அதிரடி!
கருங்கடல் வழியாக நடைபெறும் வர்த்தகக் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பது முதல் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்துவது வரை பல்வேறு முன்மொழிவுகள் குறித்து இரு தரப்பினருடனும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கல்யாண வரன் தேடும் சிங்கப்பூர் அரசு: இளசுகளுக்காக களமிறக்கப்பட்ட புதிய டேட்டிங் செயலி
சிங்கப்பூரில் வரலாற்றுச் சாதனையாகப் பிறப்பு விகிதம் குறைந்ததைத் தொடர்ந்து, இளம் அரசு ஊழியர்களுக்குப் பொருத்தமான வாழ்க்கைத்துணையைக் கண்டறிய 'ஃபர்ஸ்ட் டேட்' என்ற சிறப்புச் செயலியை அரசு சோதனையோட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்களின் விருப்பங்கள் மற்றும் வாழ்க்கை முறையை ஆய்வு செய்து மாதத்திற்கு ஒரு வரனை மட்டுமே பரிந்துரைக்கும் இந்தச் செயலி, இருவரின் ஒப்புதலுக்குப் பிறகே தொடர்பு விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறது. 1984-ஆம் ஆண்டிலிருந்தே திருமண வழிகாட்டுதல்களை வழங்கி வரும் சிங்கப்பூர், தற்போது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இளம் தலைமுறையினரை இணைக்கும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
சிங்கப்பூர் அரசு உருவாக்கிய புதிய செயலி
சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையாகக் சரிந்து வருகிறது. இந்தச் சவாலான நிலையை எதிர்கொள்ளும் முயற்சியாக, நாட்டின் இளம் அரசு ஊழியர்களுக்குப் பொருத்தமான வாழ்க்கைத்துணையைத் தேடிக் கொடுப்பதற்காக 'ஃபர்ஸ்ட் டேட்' (FirstDate) என்ற புதிய செயலியை அந்நாட்டு அரசு சோதனையோட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
சரிவடையும் மக்கள்தொகையும் திருமண வயதும்
கடந்த 2025-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, சிங்கப்பூரில் ஒரு பெண்ணிற்கான சராசரி பிறப்பு விகிதம் 0.87 ஆகக் குறைந்துள்ளது. அதேவேளையில், இளைஞர்கள் திருமணம் செய்துகொள்ளும் சராசரி வயதும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த மக்கள் தொகையியல் மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, இளைஞர்கள் தங்களுக்கு ஏற்ற துணையைத் தேர்ந்தெடுப்பதற்குத் தொழில்நுட்ப வழியில் அரசாங்கமே முன்னின்று உதவி செய்ய முடிவு செய்துள்ளது.
Also Read: டெங்கு கொசுக்கள் வீடுகளில் முட்டையிடுவதை தடுப்பது எப்படி?
தனித்துவமான அம்சம்
சாதாரண டேட்டிங் செயலிகள் போல முடிவில்லாமல் சுயவிவரங்களைச் (Profiles) சுழற்றிக் கொண்டே இருக்கும் முறை இதில் இல்லை. பயனர்கள் தங்களின் விருப்பங்கள், வாழ்க்கை முறை மற்றும் தார்மீக மதிப்புகள் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். அதன் அடிப்படையில், மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே பொருத்தமான ஒருவரின் சுயவிவரம் பரிந்துரைக்கப்படும். மேலும், கணிதக் கோட்பாடுகளின் அடிப்படையிலான அல்காரிதம் (Algorithm) மூலம் இருவருக்கு இடையிலான பொருத்தத்தின் அளவு கணக்கிட்டுக் காட்டப்படுகிறது.
பாதுகாப்பும் எதிர்காலத் திட்டமும்
இரண்டு நபர்களுக்குப் பொருத்தம் உறுதியானதும், இருவரின் ஒப்புதலுக்குப் பிறகே தொடர்புகொள்ளும் விவரங்கள் பகிரப்படும். இதில் பயனர்களின் விவரங்கள் மிகவும் பாதுகாப்பாகப் பராமரிக்கப்படுவதோடு, ஒரே அலுவலகப் பிரிவில் பணிபுரிபவர்கள் இணைக்கப்பட மாட்டார்கள். 1984-ஆம் ஆண்டிலேயே அரசாங்க அமைப்புகள் மூலம் திருமண வழிகாட்டுதல்களை வழங்கிய பாரம்பரியம் கொண்ட சிங்கப்பூர், தற்போது நவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.
போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல ப்ளான்.. நாகை துறைமுகத்தில் சிக்கிய பெண்.. குடியுரிமை அதிகாரிகள் அதிரடி!
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த கப்பலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இரு நாடுகளுக்கு இடையேயான கடல் வழி பயணத்தில் சிவகங்கை என்ற கப்பல் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதனால், இந்த கப்பலில் அதிக அளவிலான பயணிகள் பயணம் செய்வது வழக்கம் ஆகும். அதன்படி, சம்பவத்தன்று காலை நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு சிவகங்கை கப்பல் புறப்பட தயாரானது. இதில், இலங்கை செல்லும் பயணிகளின் ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை துறைமுக குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், குடும்பத்தினரோடு வந்திருந்த ஒரு பெண்ணின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்ததில், அவை போலியானது என்பது தெரிய வந்தது.
போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற பெண்
தொடர்ந்து, அந்த பெண்ணிடம் குடியுரிமை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த பெண் இலங்கையை சேர்ந்த ஹக்கீதா அபுஷாலி ( 34 வயது) என்பதும், இவர் சவுதி அரேபியாவின் வேலை பார்த்த போது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரும் அவருடன் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, அவர்கள் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அதன்படி, கடந்த 2011- ஆம் ஆண்டு சுரேஷ் தனது சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு திரும்பினார். அப்போது, ஹக்கீதா அபுஷாலியும் கடந்த 2015- ஆம் ஆண்டு ஏப்ரல் 15- ஆம் தேதி கேரள மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக கன்னியாகுமரிக்கு வந்தனர்.
மேலும் படிக்க: “இது உங்க அப்பன் வீட்டு பஸ்சா” ஒகேப்பா செல்லக்குட்டி வீடியோ எடு.. சென்னை பேருந்தில் நள்ளிரவில் இளம்பெண் அட்ராசிட்டி!
போலி ஆவணங்கள் தயாரித்து பாஸ்போர்ட் பெற்ற பெண்
அங்கு, சுரேஷ் மற்றும் ஹக்கீதா அபுஷாலி இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில், அவர்கள் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டு, அதற்காக இந்தியாவில் போலியான ஆவணங்களை தயார் செய்து பாஸ்போர்ட் பெற்றுள்ளனர். இந்த பாஸ்போர்ட் மூலமாக தான் அந்த பெண் இலங்கைக்கு கப்பலில் செல்ல முயன்றனர். அப்போதுதான், குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்ததில் ஹக்கீதா சிக்கி உள்ளார்.
நாகை டவுன் போலீசார் தீவிர விசாரணை
இதை தொடர்ந்து, ஹக்கீதா அபுஷாலியை நாகப்பட்டினம் டவுன் காவல் நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் ஒப்படைத்தனர். அத்துடன் குடியுரிமை பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திவ்யா அளித்த புகாரின் அடிப்படையில் நாகப்பட்டினம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி ஆவணங்கள் மூலமாக இலங்கை செல்ல முயன்ற ஹக்கீதாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரான்சிஸ் ஹால்சனுக்கு 2026 இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு – யார் இவர்?
2026 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு பிரான்சிஸ் ஹால்சனுக்கு வழங்கப்படும் என ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி அக்டோபர் 6, 2026 இன்று அறிவித்தது. ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்துக்கு அவர் ஆற்றிய தீர்க்கமான பங்களிப்புக்காகவும், விண்வெளியிலிருந்து வரும் உயர் ஆற்றல் நியூட்ரினோக்களைக் கண்டுபிடித்ததற்காகவும் இந்தப் பரிசு அளிக்கப்படுகிறது. இந்த 2026 ஆம் ஆண்டு இயற்பியல் நோபல் பரிசை அவர் தனி ஒருவராகப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நோபல் பரிசு வென்றவர்கள் வரும் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் கௌரவிக்கப்படவுள்ளனர். நோபல் பரிசு வென்றவர்களுக்கு அதற்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும். இந்த 2026 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.11.5 கோடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : திருச்சி டூ யாழ்ப்பாணம் விமான சேவை.. 45 நிமிட பயணம்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா!
யார் இந்த பிரான்சிஸ் ஹால்சன்?
கடந்த  1944 மார்ச் 23 அன்று பிறந்த ஹால்சன், பெல்ஜியத்தில் பிறந்த பிரான்சிஸ் ஹால்சனd, கே.யூ. லூவன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார். கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் விஸ்கான்சின் மேடிசன் பல்கலைக்கழக இயற்பியல் துறையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும், விண்வெளியிலிருந்து வரும் உயர் ஆற்றல் நியூட்ரினோக்களைக் கண்டுபிடித்ததற்காகவும் அவருக்கு இந்தப் பரிசு அளிக்கப்படுகிறது.
பிரபஞ்சத்தில் அதிகம் காணப்படும் நியூட்ரினோக்கள் எந்தப் பொருளுடனும் எளிதில் வினைபுரிவதில்லை. ஒவ்வொரு நொடியும் கோடிக்கணக்கான நியூட்ரினோக்கள் நம் உடலையும் பூமியையும் ஊடுருவிச் செல்கின்றன, ஆனாலும் நம்மால் உணர முடிவதில்லை. இதனால்தான் இவை 'பேய்த் துகள்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றைக் கண்டறிவது இயற்பியலின் மிகக் கடினமான சவால் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தென் துருவத்தில் உள்ள பனிக்கட்டியைப் பயன்படுத்தி நியூட்ரினோக்களைப் பின்தொடர முடியும் என்பதை ஹால்சன் கண்டுபடித்தார்.
அவரது தொலைநோக்குப் பார்வையின் காரணமாக ஐஸ்கியூப் ஆய்வகம் உருவாக அடிப்படையாக அமைந்தன. அதாவது பனிகட்டியையே ஒரு பிரம்மாண்ட துகள் கண்டறியும் கருவியாக மாற்றினார். தென் துருவத்துக்கு அருகே சுமார் 1.5 கிலோமீட்டர் ஆழப் பனிக்கட்டிக்குக் கீழே இந்த ஆய்வகம் இயங்குகிறது. தொடக்கத்தில், அண்டார்டிகாவின் நடுவே இவ்வளவு பெரிய நியூட்ரினோ கண்டறியும் கருவியை அமைப்பது வெறும் ஒரு சுவாரசியமான யோசனையாக மட்டுமே பார்க்கப்பட்டது என ஹால்சனே குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : ராமேஸ்வரத்தில் பரபரப்பு.. இலங்கைக்கு ரூ.75 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் கடத்த முயற்சி.. ஒருவர் அதிரடி கைது!
Noble Prize 2026: 2026 மருத்துவத்திற்கான நோபல் பரிசு: ஆப்டோஜெனெடிக்ஸ் ஆராய்ச்சிக்காக 3 விஞ்ஞானிகளுக்கு கவுரவம்
அக்டோபர் 5, 2026: 2026ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மூன்று விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்ல் டைசெரோத், பீட்டர் ஹெகெமேன் மற்றும் ஜார்ஜ் நாகல் ஆகியோரின் முக்கியமான ஆராய்ச்சிப் பங்களிப்புகளுக்காக இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. மூளையில் உள்ள நரம்பு செல்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு உதவும் ‘ஆப்டோஜெனெடிக்ஸ்’ (Optogenetics) தொழில்நுட்பத்தை உருவாக்கி மேம்படுத்தியதில் அவர்கள் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் நோபல் குழு இந்த விருதை அறிவித்துள்ளது.
மூளையின் செயல்பாட்டை புரிந்துகொள்ளும் புதிய தொழில்நுட்பம்
மூளை எவ்வாறு செயல்படுகிறது? நினைவுகள் எவ்வாறு உருவாகின்றன? மனிதர்களின் நடத்தை மற்றும் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலம் எவ்வாறு செயல்படுகிறது? என்பது போன்ற சிக்கலான கேள்விகளுக்கான விடைகளை கண்டறியும் ஆராய்ச்சிகளில் ஆப்டோஜெனெடிக்ஸ் முக்கியமான கருவியாக மாறியுள்ளது.
ஒளியைப் பயன்படுத்தி உயிருடன் இருக்கும் மூளையில் குறிப்பிட்ட நரம்பு செல்களைத் துல்லியமாக ‘ஆன்’ அல்லது ‘ஆஃப்’ செய்யும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் செயல்படுகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட நரம்பு செல்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்தி, அவை மூளையின் செயல்பாடுகளிலும் நடத்தையிலும் ஏற்படுத்தும் தாக்கத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய முடிகிறது.
மேலும் படிக்க: உயரிய கவுரவம்.. இஸ்ரேலில் கவுரவிக்கப்படும் கேப்டன் ஸ்மித் மச்சார்.. அழைப்பு விடுத்த நெதன்யாகு
மூன்று விஞ்ஞானிகளின் பங்களிப்பு
பீட்டர் ஹெகெமேன் மற்றும் ஜார்ஜ் நாகல் ஆகியோர் ஒளிக்கு பதிலளிக்கும் புரதங்கள் தொடர்பாக மேற்கொண்ட ஆராய்ச்சிகள், ஆப்டோஜெனெடிக்ஸ் தொழில்நுட்பத்திற்கான அடித்தளத்தை அமைத்தன. இந்தப் புரதங்கள் மூலம் ஒளியின் உதவியுடன் செல்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகின.
இதனைத் தொடர்ந்து கார்ல் டைசெரோத், இந்த அணுகுமுறையை நரம்பு செல்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும் ஆய்வு செய்யவும் பயன்படும் சக்திவாய்ந்த ஆராய்ச்சிக் கருவியாக மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.
நரம்பியல் ஆராய்ச்சியில் புதிய பாதை
தற்போது உலகம் முழுவதும் உள்ள பல்வேறு ஆராய்ச்சி ஆய்வகங்களில் ஆப்டோஜெனெடிக்ஸ் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மூளையின் செயல்பாடு, நினைவாற்றல், நரம்பியல் தொடர்பான நோய்கள் மற்றும் மனிதர்களின் மனநிலை மற்றும் நடத்தை ஆகியவற்றை ஆழமாக ஆய்வு செய்வதற்கு இந்தத் தொழில்நுட்பம் புதிய வழிகளைத் திறந்துள்ளது.
மேலும் படிக்க: பிளேக் ஆய்வகத்தில் பணியாற்றிய ஆராய்ச்சியாளர் பலி.. டெஸ்ட் டியூப் வெடித்தது தான் காரணமா?
பிளேக் ஆய்வகத்தில் பணியாற்றிய ஆராய்ச்சியாளர் பலி.. டெஸ்ட் டியூப் வெடித்தது தான் காரணமா?
மாஸ்கோ, அக்டோபர் 05 : ரஷ்யாவில் (Russia) பிளேக் நோய் (Plague Disease) தொடர்பான ஆய்வகத்தில் பணியாற்றி வந்த 28 வயது இளம் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த சுமார் 200 பேரை ரஷ்யா மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளது. அந்த ஆய்வகத்தில் வைக்கப்பட்டு இருந்த டெஸ்ட் டியூப் எதிர்பாராத விதமாக உடைந்துவிட்டதாக ரஷ்ய ஊடகங்கள் கூறும் நிலையில், இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆய்வகத்தில் பணியாற்றி வந்த இளம் பெண் திடீர் பலி
ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள இர்குட்ஸ்க் பகுதியில், பிளேக் உள்ளிட்ட ஆபத்தான நோய்கள் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வகம் ஒன்று உள்ளது. இந்த ஆய்வகத்தில் டாரியா ஷிபிலோவா எந்த பெண் ஒருவர் பணியாற்றி வந்தார். இவர், கடந்த மாதம் கடுமையான நிமோனியா பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைய தொடங்கிய நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் அக்டோபர் 05, 2026 அன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க : நடுவானில் கடத்தப்பட்ட இஸ்ரேல் விமானம்.. சண்டையிட்டு பயணிகளை காப்பாற்றிய இந்திய விமானி!
ஆய்வகத்தில் வெடித்த டெஸ்ட் டியூப்
இந்த மரணத்திற்கு பின்னால் அதிர்ச்சி அளிக்கக்கூடிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது டாரியா பணியாற்றி வந்த இர்குடாஸ்க் ஆய்வகத்தில் செப்டம்பர் 25, 2026 அன்று உயிருள்ள பிளேக் பாக்டீரியா மாதிரியை கையாளும்போது அது வைக்கப்பட்டு இருந்த டெஸ்ட் டியூப் உடைந்ததாக ரஷ்யா ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இதன் காரணமாக பிளேக் நோய் தொற்று காரணமாக டாரியா பலியாகியிருக்கலாம் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதையும் படிங்க : நேபாளத்தில் மீண்டும் ஒரு பேரழிவு: நொடிகளில் சரிந்த மலைகள் – வைரலாகும் வீடியோ
உயரிய கவுரவம்.. இஸ்ரேலில் கவுரவிக்கப்படும் கேப்டன் ஸ்மித் மச்சார்.. அழைப்பு விடுத்த நெதன்யாகு
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, துணிச்சல்மிக்க ஃப்ளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் தொலைபேசியில் பேசினார். அந்த உரையாடலின் போது, ​​இத்தகைய கடினமான சூழ்நிலைகளில் அவர் காட்டிய தைரியத்தையும் நிதானத்தையும் கண்டு நெதன்யாகு தனது வியப்பை வெளிப்படுத்தினார். "நீங்கள் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளீர்கள்" என்று அவர் கூறினார். மச்சார் உலகிற்கே ஒரு "நாயகன்" என்று அவர் குறிப்பிட்டார். மேலும், இஸ்ரேலின் சுதந்திர தினத்தன்று தீப்பந்தத்தை ஏற்ற பிரதமர் நரேந்திர மோடியையும் மச்சாரையும் அவர் அழைத்தார்.
நெதன்யாகு அவரை ஒரு நாயகன் என்று அழைத்தார்
இஸ்ரேல் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தை மோதச் செய்ய தனது துணை விமானி மேற்கொண்டதாகக் கூறப்படும் முயற்சியை முறியடித்ததற்காக, மச்சார் உலகிற்கே ஒரு "நாயகன்" என்று நெதன்யாகு பாராட்டினார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த விமானியுடன் நெதன்யாகு பேசினார். இஸ்ரேலியப் பிரதமர் அலுவலகம் X-இல் பதிவிட்டதாவது, "நீங்கள் இஸ்ரேல், இந்தியா மற்றும் ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரு நாயகன். இஸ்ரேலின் சுதந்திர தினத்தன்று தீப்பந்தத்தை ஏற்ற பிரதமர் நரேந்திர மோடியையும் உங்களையும் அழைக்கிறேன்." அந்தப் பதிவில் மேலும் கூறப்பட்டிருந்தது
பதிவு
Prime Minister Benjamin Netanyahu in a conversation with the Indian pilot from the flight from Dubai, Captain Smit Machchhar:
"You are a hero for Israel, India, and the entire world. I invite Prime Minister @NarendraModi and you to light a flame on Israeli Independence Day."… pic.twitter.com/e9nSJQ6TRj
— Prime Minister of Israel (@IsraeliPM) October 3, 2026
உங்களை மிக விரைவில் இஸ்ரேலில் சந்திப்போம்
இஸ்ரேலின் சுதந்திர தினத்தன்று தீப்பந்தத்தை ஏற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடியையும் மச்சார் அவர்களையும் அவர் அழைத்தார். 38 வயதான மச்சாரிடம் பேசிய நெதன்யாகு, "நமது சுதந்திர தினத்தன்று நாம் வழங்கக்கூடிய மிகப்பெரிய கௌரவம் இதுதான். வழக்கமாக, இது இஸ்ரேலிய குடிமக்களுக்கானது, ஆனால் இந்த முறை, அனைத்து இஸ்ரேலியர்களும் உங்களை வரவேற்பார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் இப்போதும் அவ்வாறு செய்கிறார்கள், மீண்டும் செய்வார்கள். எனவே, மிக விரைவில் உங்களை இஸ்ரேலில் சந்திப்போம் என நம்புகிறோம்," என்று கூறினார்.
நேரில் சந்தித்த துபாய் இளவரசர்
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும், துபாயின் பட்டத்து இளவரசருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், ஃப்ளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் நலம் விசாரிப்பதற்காக சனிக்கிழமை அபுதாபியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது, ​​விமானத்தில் இருந்த நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானியின் துணிச்சல், வீரம் மற்றும் பொறுப்புணர்வை அவர் வெளிப்படையாகப் பாராட்டினார். கேப்டன் ஸ்மித் மச்சார் மிக உயர்ந்த அளவிலான துணிச்சலை வெளிப்படுத்தியதாக ஷேக் ஹம்தான் வர்ணித்ததோடு, ஐக்கிய அரபு அமீரகத் தலைமையின் சார்பாக அந்த இந்திய விமானிக்குத் தனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்தார்.
என்ன நடந்தது?
திருச்சி டூ யாழ்ப்பாணம் விமான சேவை.. 45 நிமிட பயணம்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா!
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை நாட்டின் தலைநகர் கொழும்புவுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இதே போல, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை, யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கப்பட்டது. இதற்கு, மக்கள் மத்தியில் போதிய வரவேற்பும் இருந்து வந்தது. ஆனால், காலப்போக்கில் தொழில்நுட்ப காரணங்களுக்காக அந்த விமான சேவையானது திடீரென ரத்து செய்யப்பட்டது. இது, இலங்கை செல்லும் பயணிகள் மத்தியில் சற்று வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதாவது, இண்டிகோ நிறுவனம் சார்பில் நேற்று வியாழக்கிழமை முதல் யாழ்ப்பாணத்திற்கு விமானம் சென்று வர தொடங்கி உள்ளது.
திருச்சி- யாழ்ப்பாணம் விமான கட்டணம்- பயண நேரம்
இதில், திருச்சி டூ யாழ்ப்பாணத்துக்கு ஒரு வழி பயண கட்டணமாக ரூ.6,120 முதல் ரூ. 7,120 வரை தொடங்குகிறது. இரு வழி பயண கட்டணமாக ரூ. 17,160 முதல் ரூ. 17,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணங்கள் பயணம் செய்யும் தேதி, முன்பதிவு செய்யும் நேரம் மற்றும் இருக்கைகளின் தேவையை பொருத்து மாறுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், திருச்சி விமான நிலையத்தில் இருந்து சுமார் 45 முதல் 50 நிமிடங்களில் யாழ்ப்பாணத்தை சென்றடைய முடியும். இந்த விமான சேவையானது வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: விஜய் Chief Minister- ஆக இருக்க வேண்டுமே தவிற Cheap Minister- ஆக இருக்க கூடாது.. மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!
திருச்சி - யாழ்ப்பாணம் விமானம் புறப்படும் நேரம்
இந்த விமானமானது திருச்சி விமான நிலையத்தில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு 1.50 மணிக்கு யாழ்ப்பாணம் சென்றடையும். யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து மதியம் 2:35 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 3:25 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும். பல ஆண்டு இடைவேளைக்கு பிறகு நேற்று வியாழக்கிழமை தொடங்கிய விமான சேவையில் முதல் முதலாக யாழ்ப்பாணத்தில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த இண்டிகோ விமானத்தில் 45 பயணிகள் பயணம் செய்தனர்.
விமான சேவை தொடர வேண்டும் என பயணிகள் கருத்து
இதே போல, திருச்சி விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சென்ற இண்டிகோ விமானத்தில் 44 பயணிகள் பயணம் செய்திருந்தனர். இந்த விமான சேவை தொடக்கமானது பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சேவை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் விமான பயணிகள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி- யாழ்ப்பாணம் இடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டதன் காரணமாக பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் பரபரப்பு.. இலங்கைக்கு ரூ.75 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் கடத்த முயற்சி.. ஒருவர் அதிரடி கைது!
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடலோர காவல் நிலைய போலீசார் நேற்று வியாழக்கிழமை இரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாத்தகோண்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு கடற்கரை பகுதியில் ரோந்து பணி சென்ற போது, கடற்கரை நோக்கி சரக்கு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தை, போலீசார் நிறுத்த முயன்ற போது, அந்த வாகனத்தின் ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடினார். உஷாரான போலீசார் அவரை பின்தொடர்ந்து விரட்டி சென்று பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் பெயர் தவ நாகேஸ்வரன் என்பதும் பனைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் வலி நிவாரண மாத்திரைகளை பெட்டிகளில் அடைத்து இலங்கைக்கு கடத்துவதற்காக சோகையன்தோப்பு கடற்கரைக்கு கொண்டு செல்ல முற்பட்டது தெரியவந்தது.
10 பெட்டிகளில் 7.50 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்
இதை தொடர்ந்து, சரக்கு வாகனத்தில் இருந்த அட்டைப் பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்து சோதனை செய்ததில், அதில், 10 அட்டைப்பெட்டிகள் இருந்தது. ஒரு அட்டை பெட்டிக்கு 75 ஆயிரம் வலி நிவாரண மாத்திரைகள் வீதம் சுமார் 10 லட்சத்து 50 ஆயிரம் வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, வலி நிவாரண மாத்திரைகளையும், கைது செய்யப்பட்ட நபரையும் மேல் நடவடிக்கைக்காக மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக மண்டபம் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் அமைச்சர் செம்மலை பரபரப்பு விளக்கம்!
ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பு
இந்த சம்பவம் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் தீவிர விசாரணையின் அடிப்படையில் மேலும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக சுமார் 7.50 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக, ராமேஸ்வரம் பகுதி கடல் பரப்பில் இருந்து இலங்கை நாடு மிக அருகாமையில் அமைந்துள்ளது.
இலங்கைக்கு அடிக்கடி நடக்கும்  கடத்தல் சம்பவம்
இதன் காரணமாக, பீடி இலைகள், தங்கம், வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் போதை பொருட்கள் உள்ளிட்டவை கடத்தி செல்லப்படுவது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதனை தடுப்பதற்காக கடலோர காவல் படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கடலோர காவல் படை போலீசார் மேற்கொண்ட தீவிர ரோந்து பணியில் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹீரோவான இந்தியர்.. பாராட்டிய பிரதமர் மோடி.. இஸ்ரேலிய விமானக் கடத்தலின் உண்மைக் கதை என்ன?
துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில், சக விமானியால் கத்தியால் குத்தப்பட்ட விமானி, இந்தியக் குடிமகனான ஸ்மித் மச்சார் ஆவார். அவரது வீரச்செயல் 174 பேரின் உயிரைக் காப்பாற்றியது. இதற்கிடையில், வியாழக்கிழமை காலை, பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் ஒரு காணொளியைப் பகிர்ந்து, கேப்டன் ஸ்மித் மச்சாரை ஒரு நாயகன் என்று குறிப்பிட்டார்
இது குறித்து பிரதமர் குறிப்பிட்ட பதிவில், "கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு மாவீரர். மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொண்டபோதும், படுகாயம் அடைந்தபோதும், மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவர் அபாரமான தைரியத்தையும் அசைக்க முடியாத உறுதியையும் வெளிப்படுத்தினார். அவரது வீரம் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதுடன், ஒரு பெரும் துயரச் சம்பவத்தையும் தடுத்தது. கேப்டன் மச்சாரை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. அவர் விரைவில் குணமடையவும், புத்துணர்ச்சி பெறவும், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்." என்றார்
பிரதமர் பதிவு
Captain Smit Machchhar is a HERO.
In the face of the gravest danger and despite being seriously injured, he showed immense courage and an unwavering resolve to protect the lives of others.
His valour helped save hundreds of lives and avert a great tragedy.
India is proud of…
— Narendra Modi (@narendramodi) October 1, 2026
யார் இந்த கேப்டன்?
இந்திய கேப்டனாக ஸ்மித் மச்சார் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் 2022-ல் ஃப்ளைதுபாயில் நேரடியாக கேப்டனாக சேர்ந்தார். அதற்கு முன்பு, அவர் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் விமானியாக இருந்தார், அந்நிறுவனத்துடன் அவர் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பணியாற்றியுள்ளார். அவர் சீனியர் கமாண்டராகவும், பின்னர் லைன் டிரெய்னிங் கேப்டனாகவும் பணியாற்றியுள்ளார். அவரது லிங்க்ட்இன் சுயவிவரத்தின்படி, அவருக்கு 13 ஆண்டுகளுக்கும் மேலான வர்த்தக விமான அனுபவம் உள்ளது. மேலும், அவர் போயிங் 737 விமானத்தில் சுமார் 9,750 மணிநேரம் பறந்துள்ளார், இதில் 6,400 மணிநேரத்திற்கும் மேலாக தலைமை விமானியாகப் பறந்த அனுபவமும் அடங்கும்.
என்ன நடந்தது?
துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில் ஒரு எதிர்பாராத விபத்து தவிர்க்கப்பட்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விமானியான கேப்டன் ஸ்மித் மச்சார், விமானம் காற்றில் பறந்துகொண்டிருந்தபோது, ​​உடன் விமானி கண்மூடித்தனமாக கத்தியால் தாக்கியதில் படுகாயமடைந்தார். அவர் அசாதாரணமான தைரியத்தைக் காட்டினார். இரத்தம் வழிந்தபோதிலும், அவர் விமானியின் அறைக்கதவைத் திறந்து, ஒரு பெரிய விமான விபத்தைத் தடுத்து, 174-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றினார். போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் காற்றில் பறந்துகொண்டிருந்தபோது, ​​ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் என்று நம்பப்படும் உடன் விமானி, திடீரென கேப்டன் ஸ்மித் மச்சாரை கத்தியால் தாக்கினார்.
விமானத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகளைச் செயலிழக்கச் செய்து, விமானத்தைக் கீழே வீழ்த்த அவர் கடுமையாக முயன்றார். இந்த மோதலில், விமானம் வெறும் 30 வினாடிகளில் கிட்டத்தட்ட 14,000 அடிக்குக் கீழே சரிந்தது. கீழே விழுந்துகொண்டிருந்தபோதே, கேப்டன் ஸ்மித் சாமர்த்தியமாக விமானியின் அறைக்கதவைத் திறந்து அலறினார். விமானம் கடுமையாக அதிரத் தொடங்கியதும், அலறல் சத்தங்கள் கேட்டதும், பீதியடைந்த பயணிகளும் விமானப் பணியாளர்களும் உடனடியாக விமானியின் அறைக்குள் விரைந்தனர். விமானம் வெறும் 30 வினாடிகளில் கிட்டத்தட்ட 14,000 அடிக்கு வேகமாக இறங்கியது. அதன்பிறகு, விமானம் மீண்டும் கட்டுப்பாட்டைப் பெற்றது, ஆனால் மற்றொரு அவசர சமிக்ஞையை அனுப்பியது. இறுதியாக, விமானி தனது பயணப் பாதையை மாற்றி, சவூதி அரேபியாவில் உள்ள தபூக் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.
7500.. 7700 சிக்னல்கள் ஏன் முக்கியமானவை?
விமானம், வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கு 7500 மற்றும் 7700 ஆகிய குறியீடுகளை அனுப்பியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. விமானத் துறையில், 7700 குறியீடு பொதுவாக ஒரு தீவிரமான அவசரநிலையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. விமானத்தில் ஒரு தீவிரமான சிக்கல் ஏற்படும்போது இந்தக் குறியீடு அனுப்பப்படுகிறது. அதே நேரத்தில், 7500 குறியீடு மிகவும் முக்கியமானதாகும். விமானம் கடத்தப்பட்டுவிட்டது அல்லது கடத்தல் முயற்சி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதைக் குறிக்க இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு குறியீடுகளையும் பெற்ற பிறகு, விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஆரம்பத்தில் எழுந்தது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் செய்திகளுக்கு விமானிகள் பதிலளிக்கத் தவறியதால், விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அதிகரித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு விமானத்துடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. விமானம் கைமுறையாகக் கட்டுப்படுத்தப்பட்டு, பின்னர் சவூதி அரேபியாவை நோக்கித் திருப்பி விடப்பட்டது. பென் குரியன் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. சவூதி அரேபியாவில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதால், நிலைமை இறுதியாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
விமானத்தில் 174 பேர் இருந்தனர்
இஸ்ரேலிய ஊடக அறிக்கைகளின்படி, ஃப்ளை துபாய் விமானத்தில் 24 குழந்தைகள் உட்பட 174 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். இந்தச் சம்பவம் குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. விமானத்தின் காக்பிட்டில் உண்மையில் என்ன நடந்தது? விமானி உண்மையிலேயே விமானத்தை மோதச் செய்ய முயன்றாரா? அவர் ஏன் 7500 என்ற சிக்னலை அனுப்பினார்? விசாரணையின் போது மேலும் பல விவரங்கள் வெளிவர உள்ளன. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் பயங்கரவாதத் தொடர்பு இருக்கலாம் என இஸ்ரேலிய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், இந்தத் தாக்குதலை நடத்தியது யார்? இந்தச் சம்பவத்திற்கான உண்மையான காரணம் என்ன? விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்திய கேப்டன் தைரியத்தை உலகத் தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "கடுமையாகக் காயமடைந்த போதிலும், ஸ்மித் மிகுந்த தைரியத்துடன் செயல்பட்டு ஒரு உண்மையான ஹீரோவாகத் திகழ்ந்தார். இது ஒரு நம்பமுடியாத நிகழ்வு" என்று கூறினார். "கடுமையாகக் காயமடைந்த போதிலும் தனது பயணிகளைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரின் அசாதாரணமான தைரியத்திற்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். அவர் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்," என்று இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு ட்விட்டரில் பதிவிட்டார்.
நெதன்யாகு பதிவு
Prime Minister Benjamin Netanyahu:
My salute to the Indian pilot Captain Smit Machchhar for his extraordinary bravery.
Despite being stabbed and seriously injured, he fought back, resisted, opened the cockpit door, and enabled passengers and crew to overpower the attacker —…
— Prime Minister of Israel (@IsraeliPM) September 30, 2026
நடுவானில் கடத்தப்பட்ட இஸ்ரேல் விமானம்.. சண்டையிட்டு பயணிகளை காப்பாற்றிய இந்திய விமானி!
டெல் அவிவ், செப்டம்பர் 30 : துபாயில் (Dubai) இருந்து இஸ்ரேல் (Israel) நோக்கி சென்றுக்கொண்டு இருந்த விமானம் ஒன்று நடுவானில் கடத்தப்பட்ட நிலையில், இஸ்ரேல் பயணிகளை இந்திய விமானி ஒருவர் நடுவானில் சண்டையிட்டு காப்பாற்றியுள்ளார். இத்தகைய வீரமிகு செயலை செய்த இந்திய விமானியை இஸ்ரேல் பாராட்டியுள்ளது. இந்த நிலையில், நடுவானில் விமானம் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
180 பயணிகளுடன் துபாயில் இருந்து புறப்பட்ட விமானம்
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை நோக்கி சுமார் 180 பயணிகளுடன் போயிங் 737 மேக்ஸ் 8 என்ற விமானம் ஒன்று இன்று (செப்டம்பர் 30, 2026) காலை புறப்பட்டுள்ளது. இந்த விமானம் கிளம்பிய ஒருசில நிமிடங்களில், விமானிகள் அமர்ந்திருந்த அறையில், விமானிகள் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நடுவானில் பறந்துக்கொண்டு இருந்த விமானத்தில் இருந்து இஸ்ரேல் அரசுக்கு எச்சரிக்கை சமிங்கை கொடுக்கப்பட்டது. அப்போது விமானம் சுமார் 15,000 அடியில் தாழ்வாக பறந்த நிலையில், ஸ்குவாக் 7500 அதாவது விமான கடத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இலங்கையில் இதென்ன அநியாயம்.. தமிழக மீனவர்களின் படகுகள் உடைப்பு.. கடற்படையினர் அட்டூழியம்!
அவசர ஆலோசனை மேற்கொண்ட பெஞ்சமின் நெதன்யாகு
இந்த நிலையில் தான், விமானத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழல் குறித்து அந்த நாட்டின் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்பு அமைச்சருடன் அவசர ஆலோசனையை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து ஒருசில நிமிடங்களில் இஸ்ரேலின் வான்வெளி மூடப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் விமானம் ஜோர்டன் வான்வெளிக்குள் நுழைந்து சிறிது நேரத்தில் யு டர்ன் எடுத்து சவுதி அரேபியா நோக்கிச் சென்றுள்ளது.
இதையும் படிங்க : நிலவில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம்.. 100 கி.மீ மேற்பரப்பு சிதைவு.. விஞ்ஞானிகள் சொல்வது என்ன?
நேபாளத்தில் மீண்டும் ஒரு பேரழிவு: நொடிகளில் சரிந்த மலைகள் – வைரலாகும் வீடியோ
கடந்த 2026, ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பேரழிவிலிருந்தே இன்னும் மீளாத நேபாளத்தில், மீண்டும் ஒரு இயற்கைப் பேரிடர் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து கொட்டித் தீர்க்கும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. பிரதமர் பாலேந்திர ஷா மற்றும் நாட்டின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 5 பேரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
நேபாளத்தில் மீண்டும் ஒரு பேரழிவு
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவின் தீவிரத்தைக் காட்டும் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஒரு வீடியோவில், வீடுகள் நிறைந்த ஒரு மலைச்சரிவு சில நொடிகளில் மொத்தமாக இடிந்து விழுகிறது. மற்றொரு வீடியோவில், மலையின் ஒரு பெரும் பகுதி அப்படியே பெயர்ந்து ஆற்றுக்குள் சரிகிறது. பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரின் வேகத்தில், வீடுகள் சீட்டுக்கட்டு போல சரிந்து மண்ணுக்குள் புதைவதும் அந்தக் காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க : நிலவில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம்.. 100 கி.மீ மேற்பரப்பு சிதைவு.. விஞ்ஞானிகள் சொல்வது என்ன?
நேபளத்தின் கண்டகி மற்றும் லும்பினி மாகாணங்களில் உள்ள மனாங், மியாக்டி, பாக்லுங், பர்பத், பால்பா ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.  பர்பத் மாவட்டத்தின் ஜல்ஜலா கிராமப்புற நகராட்சியில் உள்ள ஃபர்சே பகுதியில், ஒரு குடியிருப்பையே ஆறு முழுவதுமாக அடித்து சென்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. காளி கண்டகி, நாராயணி, தினாவ் ஆகிய ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி நீர் பாய்ந்து கொண்டிருப்பதாக நேபாள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.
அருவி போல சரிந்து விழும் மலை
🇳🇵 A massive landslide hit Chame in Manang, Nepal, sending an entire mountainside into the Marsyangdi River
The collapse adds to a wider crisis after intense weekend rainfall caused flooding that killed at least 24 people and left 14 missing across several districts.
It comes… pic.twitter.com/x4JOGj2VUP
— Visegrád 24 (@visegrad24) September 28, 2026
சியாங்ஜா மற்றும் குல்மி மாவட்டங்களை இணைக்கும் முக்கியமான கான்கிரீட் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கண்டகி மாகாண காவல்துறையின் முதற்கட்டக் கணக்கின்படி, அந்த மாகாணத்தில் மட்டும் 179 வீடுகள் முழுமையாகவும், 28 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. மேலும் 295 வீடுகள் அதிக ஆபத்தான நிலையில் உள்ளன.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசித்த சுமார் 2,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மின் கோபுரங்கள் சரிந்ததால், தேசிய மின் தொகுப்பில் 1,013 மெகாவாட் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாக  தலைமை அதிகாரி கிருஷ்ண பிரசாத் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது.. சரிவடையும் பிறப்பு விகிதம்.. இரட்டை சவாலில் தவிக்கும் அரசு!
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் படையினர் தீவிரமாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தொடர்ந்து பெய்யும் மழையும், நிலச்சரிவால் மூடப்பட்ட சாலைகளும் மீட்புப் பணிகளைக் கடுமையாக பாதித்துள்ளது. இதனால் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.
ஈரானுடன் போர் அச்சுறுத்தல்.. ட்ரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. ஈரான் ரிப்ளை என்ன?
அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்பு ஈரான் மீண்டும் தாக்கப்படலாம் என்றும் டிரம்ப் கூறினார். இருப்பினும், அந்தத் தாக்குதல் எப்போது நிகழும் என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிஜிஏ டூர் பிரசிடென்ட்ஸ் கோப்பை போட்டியின் போது, ​​டிரம்ப் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், போர் முடிவடைந்தவுடன் உலக எண்ணெய் விலைகள் கணிசமாகக் குறையும் என்று கூறினார். அவரது கூற்றுப்படி, போர் தொடங்குவதற்கு முந்தைய நிலையை விலைகள் அடையக்கூடும்.
ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுப்பதே அமெரிக்காவின் முதன்மை நோக்கம் என்று டிரம்ப் கூறினார். அணு ஆயுதங்களைத் தடுப்பதே இந்த முழுப் பிரச்சினையின் மிக முக்கியமான பகுதி என அவர் விவரித்தார். இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்பு ஈரான் மீது மற்றொரு இராணுவத் தாக்குதல் நடத்தப்படுமா என்று கேட்கப்பட்டபோது, ​​அது சாத்தியம் என்று டிரம்ப் கூறினார்,
அமெரிக்கா ராணுவ ரீதியாக ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டது: டிரம்ப்
'ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்' குறித்துக் குறிப்பிடுகையில், ஈரான் மீது இராணுவ அழுத்தம் மற்றும் பொருளாதாரத் தடைகள் ஆகிய இரண்டையும் அமெரிக்கா முன்னெடுத்து வருவதாக டிரம்ப் கூறினார். இராணுவ ரீதியாக அமெரிக்கா ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டது என்றும், ஆனால் அதற்காக நடவடிக்கைகள் நின்றுவிட்டன என்று அர்த்தமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். ஈரானின் பொருளாதாரம் குறித்து டிரம்ப் ஒரு துணிச்சலான கூற்றையும் முன்வைத்தார். ஈரானின் பொருளாதாரம் முழுமையான சீரழிவில் இருப்பதாக அவர் கூறினார். அவரைப் பொறுத்தவரை, ஈரானில் பணவீக்கம் கிட்டத்தட்ட 300%-ஐ எட்டியுள்ளது என்றார்.
Also Read : நிலவில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம்.. 100 கி.மீ மேற்பரப்பு சிதைவு.. விஞ்ஞானிகள் சொல்வது என்ன?
பேரழிவுப் போருக்குத் தயார்- ஈரான்
இதற்கிடையில், ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, என்பிசி நியூஸ் நிகழ்ச்சி ஒன்றில், அமெரிக்காவுடன் மீண்டும் ஒரு போரைத் தொடங்குவதற்குத் தனது நாடு முழுமையாகத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், ஒரு மாபெரும் மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் போரான 'அழிவுநாள் போருக்கு' கூட ஈரான் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
பயங்கரவாதத்திற்கு சகிப்புத்தன்மை இல்லை… ஐ.நா பொதுச் சபையில் பாகிஸ்தானை கிழித்த ஜெய்சங்கர்
ஐ.நா. பொதுச் சபையின் 81வது உயர்மட்ட அமர்வின் பொது விவாதத்தின் போது ஆற்றிய தனது உரையில், பயங்கரவாதத்தைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் ஒரு நாடு, சபையின் முன் உண்மைகளைத் திரித்துக் கூறியுள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் குறிப்பிட்டார். பயங்கரவாதத்தை இயல்பாக்குவதற்கும், அதன் விளைவுகளைத் தவிர்ப்பதற்கும் "தொடர்ந்து பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள்" முன்வைக்கும் வாதங்கள் எடுபடாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக நம்மைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையை நாம் தொடர்ந்து பயன்படுத்துவோம் என்று வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான நமது "சகிப்பின்மைக் கொள்கையில்" எந்தத் தளர்வும் இருக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும், உலகம் முழுவதும் நடைபெற்று வரும் போர்கள் குறித்து, போர் இப்போதே முடிவுக்கு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்புவதாகவும் அவர் கூறினார்.
வீடியோ
LIVE: EAM S Jaishankar Addresses UN General Assembly I Pakistan I Tariff I Pakistan terror attacks #sjaishankar #india #ungeneralassembly #pakistanhttps://t.co/GfNbGST7EX
— ANI (@ANI) September 26, 2026
பயங்கரவாதத்தை இயல்பாக்கும் வாதங்கள் எடுபடாது.
பாகிஸ்தானையோ அல்லது அதன் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரையையோ நேரடியாகக் குறிப்பிடாமல், பயங்கரவாதத்தை இயல்பாக்குவதற்கும் அதன் விளைவுகளைத் தவிர்ப்பதற்கும் வாதங்கள் முன்வைக்கப்படுவதாக ஜெய்சங்கர் கூறினார். அத்தகைய வாதங்கள் எடுபடாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிராக நம்மைத் தற்காத்துக் கொள்ளும் நமது உரிமை பயன்படுத்தப்படும் என்று ஜெய்சங்கர் கூறினார். நட்பும் நல்லெண்ணமும் பயங்கரவாதத்துடன் இணைந்து இருக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மனப்பான்மையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
மேலும், இத்தகைய சிந்தனையின் அடிப்படையில் செய்யப்படும் ஒப்பந்தங்கள் இயல்பாகவே கேள்விக்குள்ளாக்கப்படும். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் மனப்பான்மையை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்," என்று அவர் கூறினார். பயங்கரவாதம் அமைதிக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளது என ஜெய்சங்கர் உலகத் தலைவர்களிடம் தெரிவித்தார். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசாங்கங்கள் பொறுப்பேற்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது.
பயங்கரவாதம், குறிப்பாக அதன் நிதி அம்சங்கள் அம்பலப்படுத்தப்பட்டு முறியடிக்கப்பட வேண்டும் என்பதால், அதற்கு எதிரான நமது "சகிப்பின்மைக் கொள்கையில்" எந்தத் தளர்வும் இருக்கக்கூடாது என்று அவர் கூறினார்.
ஷாபாஸ் ஷெரீஃப் என்ன கூறினார்?
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், இந்தியாவுடனான 2025 மோதலில் சரியான நேரத்தில் தலையிட்டதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைப் பாராட்டுவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மேடையைப் பயன்படுத்திக்கொண்டார். தனது சுமார் 23 நிமிட உரையில், தெற்காசியா மீண்டும் 2025 போன்ற ஒரு மோதலை எட்டாமல் இருப்பதை உறுதிசெய்ய, காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு நியாயமான மற்றும் நேர்மையான தீர்வு அவசியம் என்று கூறி, ஷெரீஃப் காஷ்மீர் பிரச்சினையையும் எழுப்பினார்.
ஜெய்சங்கர் பதில்
அமைதிக்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது.
சவப்பெட்டியில் முனகல் சத்தம்.. மீண்டும் உயிருடன் வந்த மூதாட்டி.. அடுத்து நடந்த டிவிஸ்ட்!
பெய்ஜிங், செப்டம்பர் 22 : சீனாவில் (China) இறந்துவிட்டதாக கருதி, சவப்பெட்டியில் வைக்கப்பட்ட மூதாட்டி, மறுநாள் உயிர் பிழைத்து கண் விழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிசய நிகழ்வை கண்டு அந்த பகுதி மக்கள் திகைத்து போயுள்ளனர். ஆனால், இந்த அதிசயம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. காரணம், அந்த மூதாட்டி, அடுத்த இரண்டு நாட்களில் உயிரிழந்தார். இந்த நிலையில், சவப்பெட்டியில் இருந்து மூதாட்டி உயிருடன் திரும்பி வந்து, மீண்டும் உயிரிழந்த வினோத சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
புற்றுநோயால் உயிருக்கு போராடிய மூதாட்டி
வட சீனாவின் ஹெபெய் மாகாணம், சாங்ஜோவ் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி.  இவர் கடந்த 10 ஆண்டுகளாக மூளைத் தமனி ரத்த உறைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதுமட்டுமன்றி, அவருக்கு புற்றுநோய் பாதிப்பும் மிக தீவிரமாக இருந்துள்ளது. இதன் காரணமாக, இனியும் அவருக்கு சிகிச்சை பலன் அளிக்காது என கூறி, மருத்துவர்கள் மூதாட்டியை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க : வெளிநாட்டில் இந்திய கலாசாரம்.. லண்டனின் தேம்ஸ் நதியில் முதல் கங்கா ஆரத்தி!
இறந்துவிட்டதாக முடிவு செய்த உறவினர்கள்
மூதாட்டி, மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் செப்டம்பர் 08, 2026 அன்று அவரது உடலில் எந்தவித அசைவுகளும் இல்லாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக, மூதாட்டி உயிரிழந்துவிட்டார் என அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், இறுதி சடங்குகளுக்கு ஏற்பாடு செய்த அவர்கள், குளிரூட்டும் பெட்டிடை வரவழைத்து அதில் மூதாட்டியின் உடலை வைத்துள்ளனர்.
சவப்பெட்டிக்குள் கேட்ட முனகல் சத்தம்
மூதாட்டியின் உடல் குளிரூட்டும் பெட்டியில் வைக்கப்பட்ட நிலையில், அவரது மருமகளுக்கு ஏதோ முனகல் சத்தம் கேட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர்கள் குளிரூட்டும் பெட்டியை திறந்து பார்த்துள்ளனர். அப்போது மூதாட்டி, உயிருடன் இருப்பதை கண்டு அவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், மூதாட்டி உயிருடன் இருப்பதை உணர்ந்த உறவினர்கள், இறுதி சடங்குகளை ரத்து செய்துள்ளனர்.
இதையும் படிங்க : இலங்கை டூ தமிழகத்துக்கு கடத்தல் முயற்சி.. திமிங்கல வாந்தியுடன் சிக்கிய இருவர்.. ரூ. 7 கோடி கடல் தங்கம் பறிமுதல்!
இலங்கையில் இதென்ன அநியாயம்.. தமிழக மீனவர்களின் படகுகள் உடைப்பு.. கடற்படையினர் அட்டூழியம்!
தமிழகத்தில் ராமநாதபுரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீன்பிடி படகுகள் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்து மீனவர்களை கைது செய்து அழைத்துச் செல்கின்றனர். சில நேரங்களில், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்களை சேதப்படுத்தி விரட்டி அடிப்பதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை நாட்டில் மயிலட்டி துறைமுகம், வவுனியா, மன்னார் மற்றும் காங்கேசன் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழக மீனவர்கள் படகுகள் பொக்லைன் மூலமாக உடைப்பு
இலங்கையில் மட்டும் தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 200- க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான இந்த படகுகள் இலங்கை அரசால் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றும் வரும் நிலையில் மயிலட்டி துறைமுகத்தில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்கு சொந்தமான பல்வேறு படகுகளை இலங்கை கடற்படையினர் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் உடைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: திருச்செந்தூரில் பயங்கரம்.. நடுரோட்டில் 2 ஆட்டோ ஓட்டுநர்கள் அரிவாள் மோதல்.. அலறியடித்து ஓடிய மக்கள்!
மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் தலைவர் தேவதாஸ் கூறியதாவது: மீனவர்களின் வாழ்வாதாரமாக மீன்பிடி படகுகள் விளங்கி வருகிறது. இதனை, அத்துமீறி பறிமுதல் செய்து வைக்கும் இலங்கை அரசு தமிழக மீனவர்களிடம் திரும்ப ஒப்படைக்காமல் அரசுடைமையாக்கி வைத்துள்ளது.
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
அத்துடன், அதனை பொக்லைன் இயந்திரம் மூலமாக உடைத்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியதாக. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, இலங்கை பிரதமரை நேரில் சந்தித்து அரசுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து படகுகளையும் உடனடியாக மீட்டு தமிழகம் கொண்டு வர வேண்டும். அதனை முறைப்படி சம்பந்தப்பட்ட மீனவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நிலவில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம்.. 100 கி.மீ மேற்பரப்பு சிதைவு.. விஞ்ஞானிகள் சொல்வது என்ன?
செப்டம்பார் 18, 2026: விஞ்ஞானிகள் சந்திரனில் ரோமானிய கொலோசியத்தைவிட பெரிய புதிய பள்ளம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 728 அடி (222 மீட்டர்) விட்டமும், 141 அடி (43 மீட்டர்) ஆழமும் கொண்ட இந்தப் பள்ளம், சமீப காலத்தில் சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய தாக்கப் பள்ளமாகும். சுமார் 132 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இதுபோன்ற மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலவில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம்:
The Moon’s got a big new crater! 🕳️
Spotted by NASA’s Lunar Reconnaissance Orbiter, the McGetchin crater formed when a rock as big as a six-story building crashed into the Moon. It’s 141 feet deep and wider than the length of two football fields.🪨💥🌕https://t.co/I2fX7bPts1 pic.twitter.com/Zft4mKUv1Z
— NASA Solar System (@NASASolarSystem) September 16, 2026
சிறுகோள் அல்லது வால்நட்சத்திரத்தின் ஒரு பகுதி சந்திரனில் மோதியதால் இந்தப் பள்ளம் உருவாகியுள்ளது. 2024 மே மாதத்தில் நாசாவின் Lunar Reconnaissance Orbiter (LRO) விண்கலம் இதன் படங்களைப் பதிவு செய்தது. எனினும், அதிக அளவிலான தரவுகளுக்கு இடையில் இந்தப் பள்ளம் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை. 2025 ஆகஸ்ட் மாதத்தில்தான் படங்கள் ஆய்வாளர்களின் கவனத்திற்கு வந்தன. பின்னர் விரிவான படங்கள் சேகரிக்கப்பட்டு, இந்த ஆண்டு தொடக்கத்தில் கண்டுபிடிப்பு உறுதி செய்யப்பட்டது.
முந்தைய சாதனையைவிட 3 மடங்கு பெரியது:
மறைந்த தாமஸ் மெக்கெட்சின் நினைவாக இந்தப் பள்ளத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. முந்தைய சாதனைப் பள்ளத்தைவிட இது மூன்று மடங்கு பெரியதாகும். இந்த தாக்கம் சந்திரனின் மேற்பரப்பில் 66 மைல்கள் (100 கி.மீ.)க்கும் அதிகமான பரப்பை சிதறடித்துள்ளது. தூசு மற்றும் பாறை மண் எதிர்பார்த்ததைவிட அதிக கோணத்தில் தூக்கி வீசப்பட்டதாக LRO கேமராக்களின் தலைமை விஞ்ஞானி மார்க் ராபின்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: நண்பரை நம்பி ரஷ்யா சென்ற விருதுநகர் இளைஞர்.. கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்ப்பு.. பெற்றோர் பரிதவிப்பு!
சந்திர மேற்பரப்பில் ஏற்படும் மாற்றம்:
மற்றொரு ஆய்வில், புதிய பள்ளத்தைச் சுற்றி சுமார் 4 மைல் (7 கி.மீ.) பரப்பளவில் குளிர்ச்சியான பகுதி கண்டறியப்பட்டுள்ளது. இது சந்திரனின் மேற்பரப்பு மண் தளர்ந்திருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். விண்கல் தாக்கங்கள் சந்திரனின் ரெகோலித் எனப்படும் மேல்மண்ணை கிளறி, கீழே இருக்கும் பொருட்களை மேலே கொண்டு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது.. சரிவடையும் பிறப்பு விகிதம்.. இரட்டை சவாலில் தவிக்கும் அரசு!
அப்பல்லோ காலடித் தடங்களும் மறையும்:
2009ஆம் ஆண்டு முதல் LRO மேற்கொண்ட ஆய்வுகளின்படி, சந்திரனின் மேல்பகுதியில் உள்ள சுமார் 2 சென்டிமீட்டர் மண், விண்கல் தாக்கங்களால் வெளியேற்றப்படும் பொருட்களால் ஒவ்வொரு 80,000 ஆண்டுகளுக்கும் மாற்றம் அடைகிறது. எனவே, அப்பல்லோ விண்வெளி வீரர்களின் காலடித் தடங்களும் நீண்ட காலத்தில் மறைந்துவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது.. சரிவடையும் பிறப்பு விகிதம்.. இரட்டை சவாலில் தவிக்கும் அரசு!
ஜப்பான், செப்டம்பர் 18: உலக அளவில் நீண்ட ஆயுளுடன் வாழும் மக்களின் நாடாகத் திகழும் ஜப்பான், மக்கள்தொகை வரலாற்றில் மற்றொரு மிக முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. அந்நாட்டில் 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதைக் கொண்ட முதியவர்களின் எண்ணிக்கை வரலாற்றிலேயே முதன்முறையாக 1 லட்சத்தைத் தாண்டி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது. ஜப்பான் நாட்டின் சுகாதார, உழைப்பு மற்றும் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. தொடர்ந்து 56-ஆவது ஆண்டாக ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: காங்கோ திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. 22 பேர் பரிதாப பலி!
முக்கியக் புள்ளிவிவரங்கள் மற்றும் பெண்களின் ஆதிக்கம்:
ஜப்பான் அரசு வெளியிட்டுள்ள அண்மைய தரவுகளின்படி, நாட்டில் தற்போது 100 வயதை எட்டிய மற்றும் அதைக் கடந்து வாழும் முதியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,07,677 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது சுமார் 7,914 பேர் அதிகமாகும். இந்தச் சாதனையில் பெண்களின் பங்களிப்பு மிக அசாத்தியமானதாக உள்ளது. மொத்தமுள்ள 1,07,677 (Centenarians) குடிமக்களில் சுமார் 88 சதவீதம் பேர் (94,298 பேர்) பெண்கள் ஆவர். ஜப்பானின் மிக மூத்த மூதாட்டியாக கியோட்டோவைச் சேர்ந்த 114 வயதுடைய ஃபுயோ கிஷிமோட்டோவும், மூத்த முதியவராக குமாமோட்டோவைச் சேர்ந்த 112 வயதுடைய ஹிகாரு கட்டோவும் திகழ்கின்றனர்.
நீண்ட ஆயுளுக்கான ரகசியம், மருத்துவ முன்னேற்றம்:
ஜப்பானியர்களின் இந்த வியக்கத்தக்க நீண்ட வாழ்நாளுக்குப் பல்வேறு காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. கடல் உணவுகள், காய்கறிகள் மற்றும் அரிசி அடங்கிய ஆரோக்கியமான பாரம்பரிய உணவுப் பழக்கம், தொடர்ந்து சுறுசுறுப்பாக இருக்கும் வாழ்க்கை முறை மற்றும் நடைப்பயிற்சி ஆகியவை இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும், ஜப்பானின் அதிநவீன மருத்துவத் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மேம்படுத்தப்பட்ட சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளே முதியவர்கள் நோய்களின்றி நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வழிவகுத்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: வெடித்து சிதறிய எரிமலை.. 50ஆயிரம் அடி உயர்ந்த சாம்பல்.. இந்தோனேஷியாவில் சம்பவம்
மறுபுறம் தொடரும் பிறப்பு விகிதச் சரிவு கவலை:
நண்பரை நம்பி ரஷ்யா சென்ற விருதுநகர் இளைஞர்.. கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்ப்பு.. பெற்றோர் பரிதவிப்பு!
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுராஜ். கூலி வேலை பார்த்து வரும் இவருக்கு லலிதா என்ற மனைவியும், விக்னேஷ் ( 32 வயது), அபினேஷ் குமார் ( 28 வயது) என்ற மகன்களும் உள்ளனர். இவர்கள் இருவரும் கல்லூரியில் பட்டப்படிப்பை படித்து முடித்துள்ளனர். இதில், இளைஞர் அபினேஷ் குமார் சமூக வலைதளங்களில் அதிக அளவு உபயோகப்படுத்தி வந்துள்ளார். இதில், ஏராளமான நண்பர்களை சேர்த்து வைத்திருந்தார். அதன்படி, பகிரகன் என்ற பெயரில் ஒருவர் சமூக வலைதளம் மூலமாக நண்பராக அறிமுகமாகி உள்ளார். இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பல மாதங்களாக நண்பர்களாக பேசி வந்துள்ளனர். இதனிடையே, அண்மையில் அறிவியலை ஒரு பாடமாக படித்திருந்தால் ரஷ்யாவின் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் ரஷ்யா சென்ற விருதுநகர் இளைஞர்
இதற்காக நான் ஏஜெண்டாக செயல்படுவதாக பகிரகன் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய அபினேஷ் குமாருக்கு மருத்துவம் படிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அபினேஷ் குமார் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்களும், இதனை நம்பி தனது மகனின் ஆசையே நிறைவேற்றுவதற்காக அபினேஷ் குமாரை ரஷ்யாவுக்கு மருத்துவம் படிப்பதற்காக விசா எடுத்து கடந்த ஏப்ரல் 13- ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் படிக்க: பூட்டிய வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்.. 1.5 கோடி நகை-பணம் சுருட்டல்.. சிவகங்கையை உலுக்கிய துணிகர கொள்ளை!
பெற்றோருடனான இளைஞரின் தொடர்பு துண்டிப்பு
அதன்படி, ரஷ்யாவுக்கு சென்ற இளைஞர் அபினேஷ் குமார் தொடர்ந்து மூன்று மாதங்கள் பெற்றோரிடம் செல்போன் வாயிலாக பேசி வந்தார். அதன் பின்னர் பெற்றோரை, அபினேஷ் குமார் தொடர்பு கொள்ளவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள் அபினேஷ் குமாரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் முடியவில்லை. இந்த நிலையில், ரஷ்ய ராணுவத்தில் தான் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டதாக அபினேஷ் குமார் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக இளைஞர் வீடியோ
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அபினேஷ் குமாரின் பெற்றோர்கள், தனது மகன் மருத்துவம் படிப்பதற்காக ரஷ்யா சென்ற நிலையில், அவரை கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்த்ததாகவும், அவரை மீட்டு தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ரஷ்யா மற்றும் ஒக்கிரன் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதில், உக்கிரன் மற்றும் ரஷ்யாவுக்கு படிக்க சென்ற வெளிநாட்டு மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதில், சில மாணவர்கள் ரஷ்ய ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் இந்திய கலாசாரம்.. லண்டனின் தேம்ஸ் நதியில் முதல் கங்கா ஆரத்தி!
லண்டன் தெருக்களில் ஒரு வரலாற்று நிகழ்வு அரங்கேறியது. முதன்முறையாக, லண்டனில் தேம்ஸ் நதிக்கரையில் கங்கா ஆரத்தி விழா நடைபெற்றது. இந்தியாவில் கங்கை நதிக்கரையில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற ஆரத்தியால் ஈர்க்கப்பட்டு, சின்மயா மிஷன் யுகே, ஆண்டுதோறும் நடைபெறும் 'டோட்டலி தேம்ஸ்' திருவிழாவுடன் இணைந்து, தனது 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில் பேசிய சின்மயா மிஷன் யுகேவின் இல்ல ஆசிரியை பிரம்மசாரிணி பிரியா சைதன்யா, தலைமுறை தலைமுறையாக மக்கள் கங்கை நதிக்கும், இயற்கைக்கும், உயிரினங்களைக் காக்கும் பஞ்சபூதங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அதன் கரைகளில் விளக்கேற்றி வருவதாகக் கூறினார். தேம்ஸ் நதியில் நடைபெற்ற கங்கா ஆரத்தியும் அதே உணர்வைக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அவர்களின் நிறுவனரான சுவாமி சின்மயானந்தர், இந்து மதத்தின் சிறந்த தத்துவ மரபுகளில் ஒன்றான வேதாந்த ஞானத்தை இமயமலையிலிருந்து மக்களின் அன்றாட வாழ்க்கைக்குக் கொண்டு வருவதற்காகத் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார் என்று அவர் கூறினார். அவரது மரபு, அறிவு மற்றும் சேவைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த 75வது ஆண்டு விழாக் கொண்டாட்டம் நடத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார். இந்தக் கொண்டாட்டம் இந்து பாரம்பரியத்தில் புனிதமானது என்றும், உயிரைக் கொடுக்கும் அன்னை கங்கைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு வெளிப்பாடு என்றும் அவர் கூறினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கிய ஒரு பெரிய முன்னேற்றம்
வழக்கமாக, கங்கா ஆரத்தி தண்ணீரில் நின்றுகொண்டே செய்யப்படும். ஆனால், தேம்ஸ் நதிக்கு அருகில் நடைபெற்ற இந்த ஆரத்தி, முற்றிலும் தரையிலேயே செய்யப்பட்டது. பாரம்பரிய உணர்வை மதிக்கும் வகையில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தில், விழா தொடர்பான எந்தப் பூஜை பொருட்களும் தேம்ஸ் நதியில் விடப்படவில்லை. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இந்த நிகழ்வின்போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
வீடியோ
VIDEO | London: Ganga Aarti held on the Thames river for the first time.
(Full video available on PTI Videos - https://t.co/d8jp61yd2p) https://t.co/kFheqe98gw pic.twitter.com/07RAcK7hyV
— Press Trust of India (@PTI_News) September 14, 2026
இலங்கை டூ தமிழகத்துக்கு கடத்தல் முயற்சி.. திமிங்கல வாந்தியுடன் சிக்கிய இருவர்.. ரூ. 7 கோடி கடல் தங்கம் பறிமுதல்!
இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு ரூ. 7 கோடி மதிப்பிலான அம்பர் கிரீசை கடத்தி வர முயன்ற இருவரை இலங்கை நாட்டு கடற்படையினர் கைது செய்தனர். இலங்கை, மன்னார் பகுதியில் அந்த நாட்டின் மத்திய கடற்படை கட்டளையகத்தின் எஸ்.எல்.என்.எஸ் கஜபா கப்பலை சேர்ந்த வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் அங்கு நின்று கொண்டிருந்த சுமார் 26 வயது மற்றும் 36 வயது மதிக்கத்தக்க 2 பேரிடம் கடற்படையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த கடற்படையினர், அவர்களிடம் இருந்த உடைமைகளை சோதனை செய்தனர். இதில், கடற் படையினருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 67 கிலோ திமிங்கலத்தின் எச்சம் இருந்தது தெரியவந்தது.
67 கிலோ அம்பர் கிரீஸ் பறிமுதல்- இருவர் கைது
தொடர்ந்து, அம்பர் கிரீசை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். அத்துடன், அதனை வைத்திருந்த இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், கடல் பகுதியில் திமிங்கலம் வெளியிடும் எச்சத்தை சேகரித்து அதனை மொத்தமாக தமிழகத்துக்கு கடத்தி சென்று விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. மேலும், இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா, சர்வதேச தொடர்புகள் உள்ளதா என்பது குறித்தும் கடற்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: சென்னையில் பூனை விஷம் வைத்து கொலை? – போலீஸ் விசாரணை
ரூ. 7 கோடி மதிப்பிலான அம்பர் கிரீஸ் கடத்தல் முயற்சி
தற்போது, இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு கடல் வழியாக கடத்தி வர முயன்ற 67 கிலோ அம்பர் கிரீஸின் சர்வதேச மதிப்பு ரூ. 7 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்பர் கிரீஸ் என்பது திமிங்கலம் வெளியிடும் எச்சம் ஆகும். இதனை, சேகரிப்பதும், கடத்துவதும், விற்பதும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உண்டான செயலாகும். சர்வதேச அளவில் இதற்கு இருந்து வரும் மதிப்பின் காரணமாக சிலர் திமிங்கலம் எச்சத்தை கடத்துவது அவ்வப்போது நடந்து வருகிறது.
அம்பர் கிரீஸ் என்றால் என்ன.. அதன் பயன்கள்
திமிங்கலம் எச்சத்தின் மூலம் உயர் ரக வாசனை திரவியங்கள், விலை உயர்ந்த மதுபானங்களில் நறுமணத்தை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. அத்துடன், சில வகையான மருந்துகளை தயார் செய்யவும் திமிங்கலம் எச்சம் உபயோகப்படுத்தப்படுகிறது. மிகவும் அரிதாக கிடைக்கக்கூடிய இந்த திமிங்கலம் எச்சம் கடல் தங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. இதனால், இதற்கான மதிப்பும் சர்வதேச அளவில் அதிகமாக இருந்து வருகிறது.
BRICS 2026: பிரதமர் மோடி – ஷி ஜின்பிங் சந்திப்புக்கு முன் சீனா முக்கிய அறிவிப்பு.. வேறுபாடுகளை சுமூகமாக கையாள உறுதி!!
இந்திய தலைநகர் புதுடெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தலைவர்கள் பங்கேற்கும் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு மிகக் விமரிசையாக நடைபெறுகிறது. இந்த உயர்மட்ட மாநாட்டில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் புதுடெல்லிக்கு வருகை தந்துள்ளனர். இதில் சர்வதேச அளவில் மிகவும் உற்றுநோக்கப்படும் நிகழ்வாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே நடைபெறவுள்ள இருதரப்பு பேச்சுவார்த்தை அமைந்துள்ளது. சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியாவிற்கு வருகை தருவதும், இரு நாட்டு தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசுவதும் ஆசிய பிராந்திய அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளில் ஒரு புதிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. இந்த முக்கிய சந்திப்புக்கு முன்னதாக, இந்தியாவுடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் எல்லைப் பிரச்சினைகளை தூதரக ரீதியிலும் நீண்டகால நோக்கிலும் சுமூகமாக கையாளத் தயாராக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : 18வது பிரிக்ஸ் மாநாடு.. டெல்லி வரும் உலக தலைவர்கள்.. விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன?
இணையும் இரு பெரும் ஆசிய சக்திகள்:
கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட எல்லை மோதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் சீனா இடையே நிலவி வந்த தூதரக உறவுகளில் பெரும் தொய்வு ஏற்பட்டது. அதன்பின்னர், இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில் ரோந்து அமைப்புகளைச் சீரமைப்பது தொடர்பான முக்கிய உடன்பாட்டை எட்டின. கடந்த சில ஆண்டுக் கால இடைவெளியில் இரு தலைவர்களும் கசான் மற்றும் தியான்ஜின் நகரங்களில் நடந்த சர்வதேச கூட்டமைப்புகளில் சந்தித்திருந்தாலும், இந்திய மண்ணில் நடைபெறும் இந்த இருதரப்பு பேச்சுவார்த்தை மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. கடைசியாக 2019-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா மாநாட்டிற்காக ஷி ஜின்பிங் இந்தியா வந்திருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் டெல்லியில் நடைபெறும் இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கு இடையேயான இயல்பு நிலையை மீண்டும் கொண்டுவருவதற்கான முக்கிய படியாகப் பார்க்கப்படுகிறது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் கருத்து:
இந்தியாவில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பு குறித்து பேட்டி அளித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மாவோ நிங், இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை முதிர்ச்சியுடன் கையாள வேண்டும் என வலியுறுத்தினார். "பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் ஷி ஜின்பிங் ஆகிய இரு தலைவர்களின் மூலோபாய வழிகாட்டுதலின்படி செயல்பட சீனா தயாராக உள்ளது. இருதரப்பு உறவுகளை வெறும் தற்காலிக அமைப்பாகப் பார்க்காமல், நீண்டகால தொலைநோக்கு மற்றும் வியூக ரீதியிலான கோணத்தில் பார்க்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். மேலும், தொடர்புகளைக் கூட்டுவது, பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் ஒருவருக்கொருவர் நலம் விரும்பும் நல்லண்டை நாடுகளாகவும் கூட்டாளிகளாகவும் செயல்படுவதே இந்த சந்திப்பின் நோக்கம் என்று சீனா சுட்டிக்காட்டியுள்ளது.
வளர்ந்து வரும் பிரிக்ஸ் கூட்டமைப்பு:
உலகளவில் மாறிவரும் பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில், பிரிக்ஸ் அமைப்பானது வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் முக்கிய குரலாக மாறியுள்ளது. உலகளாவிய தெற்கு (Global South) நாடுகளின் நலன்களைப் பாதுகாப்பதிலும், அமைதியான பேச்சுவார்த்தை மூலம் சர்வதேச தகராறுகளைத் தீர்ப்பதிலும் பிரிக்ஸ் முக்கிய பங்கு வகிப்பதாக மாவோ நிங் குறிப்பிட்டிருந்தார். 2006-ல் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளை எட்டியுள்ள இந்த கூட்டமைப்பில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகியவற்றுடன் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா போன்ற புதிய நாடுகளும் இணைந்துள்ளன. இந்தச் சூழலில் நடைபெறும் டெல்லி மாநாடு உலக அமைதிக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : BRICS 2026 மாநாட்டுக்கு இந்தியா தயார் – பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ
எல்லை அமைதியும் இருதரப்பு வர்த்தகமும்:
தென் கொரியாவின் காஸ்ட்லியான விவாகரத்து.. ரூ.17,000 கோடி செட்டில்மென்ட்.. கேமிங் நிறுவனத்தின் நிறுவனருக்கு கோர்டு அதிரடி!
சியோல், செப்டம்பர் 10 : விவாகரத்தின் போது கணவன் மனைக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. இது கணவரின் பொருளாதாரத்தை பொருத்தும், நீதிமன்றத்தின் விசாரணையை பொருத்தும் மாறுபடும். சில விவாகரத்து வழக்குகளில் மனைவி செட்டில்மெண்ட் பெற தகுதி இல்லாதவர் என்பதையும் நீதிமன்றங்கள் தீர்பாக வழங்கியுள்ளன. இந்த நிலையில் தான், தென் கொரியாவின் (South Korea) மிகவும் காஸ்ட்லியான விவாகரத்து (Costliest Divorce) பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விவாகரத்து வழக்கு - மனைவிக்கு ரூ.17,000 கோடி வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்
தென் கொரியாவின் பிரபல ஸ்மைல்கேட் கேமிங் நிறுவனத்தின் நிறுவனரான குவான் ஹியுக்-பின், தனது மனைவியுடன் விவாகரத்து வழக்கில் சுமார் 2.55 டிரில்லியன் வான் (அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.17,000 கோடிக்கும் அதிகம் ஆகும்) சொத்து பங்கீடாக வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை பெற்றுள்ளார். தென் கொரியா விவாகரத்து வாழக்குகளிலேயே அதிக தொகையை செட்டில்மெண்டாக கொண்ட விவாகரத்து வழக்கு இதுவாகும். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பலரையும் வாய் பிளக்க செய்துள்ளது.
இதையும் படிங்க : காங்கோ திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. 22 பேர் பரிதாப பலி!
விவாகரத்து வழக்கின் பின்னணி
ஹியுக்-பின் ஸ்மைல்கேட் கேமிங் நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில், இந்த நிறுவனத்தின் பிளாக்பஸ்டர் துப்பாக்கிச்டுதல் விளையாட்டான கிராஸ்பயர் மற்றும் லாஸ்ட் ஆர்க் ஆகிய விளையாட்டுகள் மிகவும் பிரபலமானவையாக உள்ளன. இது மிகப்பெரிய நிறுவனமாக உயர்ந்த நிலையில், இதன் முழு பங்குகளும் ஹியுக்-பின் வசம் தான் இருந்தது. இந்த நிலையில் தான், அவர் 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.
இதையும் படிங்க : வெடித்து சிதறிய எரிமலை.. 50ஆயிரம் அடி உயர்ந்த சாம்பல்.. இந்தோனேஷியாவில் சம்பவம்
இலங்கையை உலுக்கும் எல் நினோ.. 1.15 லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரம் காலி.. பதறவைக்கும் பின்னணி!
இலங்கையில் எல் நினோ வானிலை மற்றும் அதிக வெப்பநிலை, குறைவான மழைப்பொழிவு ஆகியவற்றின் காரணமாக 1 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதி அடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல் நினோ நிலை உருவாகி வருவதாகவும் அது தற்போது நிலவும் வானிலை அமைப்புக்கு காரணமாக அமையக்கூடும் என்றும் வானிலை ஆய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகன் அஜித் விஜே மன்னன் தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் கிழக்கு வெப்ப மண்டல பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் காலமுறை வெப்பமயமாதலான எல் நினோ அந்த பிராந்தியம் முழுவதும் வெப்பநிலை அமைப்புகளை மாற்றக்கூடும் என்றும் வறண்ட காலநிலை தொடர்வதால் இலங்கையின் மீது ஏற்படக்கூடிய தாக்கத்தை கருத்தில் கொண்டு அதன் வளர்ச்சி உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
இலங்கையில் 25 நிர்வாக மாவட்டங்களில் மக்கள் பாதிப்பு
இந்திய பெருங்கடலால் சூழப்பட்ட இந்த தீவு இதன் தாக்கத்தை மிகவும் தீவிரமாக உணரக்கூடும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். பேரிடர் மேலாண்மை மையத்தின் தகவல்களின்படி இலங்கையின் 25 நிர்வாக மாவட்டங்களில் வானிலை அமைப்பால் 115.586 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் வெப்பம் மற்றும் மழையின்மையால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டு தண்ணீர் கிடைப்பதில் கடுமையான சவால்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குடிநீர் பற்றாக்குறையால் தற்போது ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக டி.எம்.சி. அதிகாரி பிரகித் தனன் சூர்யா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தெஹ்ரான் தாக்குதல்கள் போர்க்குற்றமாக இருக்கலாம்: அம்னஸ்டி இன்டர்நேஷனல் பரபரப்பு குற்றச்சாட்டு
எருவேவா நீர் தேக்க நீர் மட்டம் வெகுவாக குறைவு
வடமத்திய அனுராதபுரம் மாவட்டத்தில் சுமார் 3,500 ஏக்கர் அடி கொள்ளளவு கொண்ட எருவேவா நீர் தேக்கத்தின் நீர்மட்டம் ஏறத்தாழ சுமார் 1000 ஏக்கர் அடியாக குறைந்துள்ளதாக நீர் பாசன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய பகுதியின் வடகிழக்கின் நந்திக் கடல் உள்ளிட்ட பகுதிகளிலும் நீர்மட்டம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீடித்த வறண்ட நிலை, நீர்வாழ் உயிரினங்களையும், வனவிலங்குகளையும் பாதிக்கிறது. வடகிழக்கிலுள்ள முல்லைதீவு காயலில் ஆயிரக்கணக்கான சிறுமீன்கள் செத்து கிடப்பது தெரியவந்துள்ளது.
விவசாயம் கடுமையாக பாதிப்பு
அத்துடன் கடல் நீரும், நல்ல நீரும் கலந்ததன் காரணமாகவே மீன்கள் இறப்புக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் இயற்கை நீர் ஆதாரங்கள் வற்றி வருவதனால் வனவிலங்குகள் மாற்று நீர் ஆதாரங்களை தேடி வேறு இடங்களுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளன. விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது தண்ணீர் பற்றாக்குறையால் நெல், தென்னை, வாழை மற்றும் கொய்யா உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
உலக பணக்காரர் பட்டியல்.. தட்டித்தூக்கும் எலான் மஸ்க்.. பேஸ்புக் ஓனர் நிலை என்ன? லிஸ்ட் இதோ!
எலான் மஸ்க் 892 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் உலகின் மிகப் பெரிய பணக்காரராகத் தொடர்கிறார். ஆகஸ்ட் மாதம் அவருக்கு மிகவும் லாபகரமான மாதமாக அமைந்தது. அவரது நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸின் பங்குகள் 33 சதவீதமும், டெஸ்லாவின் பங்குகள் 18 சதவீதமும் உயர்ந்தன. இந்த எழுச்சியின் விளைவாக, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மஸ்கின் செல்வம் 202 பில்லியன் டாலர் அளவுக்கு மிகப்பெரிய அளவில் அதிகரித்தது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், மஸ்க் சிறிது காலத்திற்கு உலகின் முதல் டிரில்லியனர் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூகிளின் இணை நிறுவனருக்கு பின்னடைவு
கூகுள் இணை நிறுவனர் லாரி பேஜ், செல்வந்தர்களின் இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். அவரது நிகர மதிப்பு 277 பில்லியன் டாலர்கள் ஆகும். இருப்பினும், ஆகஸ்ட் மாதம் அவருக்குச் சரியாக அமையவில்லை, ஏனெனில் அவரது செல்வம் 15 பில்லியன் டாலர்கள் குறைந்தது. ஆகஸ்ட் மாதத்தில் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்தவர் பேஜ் ஆவார். அவர் 1998-ல் செர்ஜி பிரினுடன் இணைந்து கூகுளை நிறுவினார். அவரது கூட்டாளியான செர்ஜி பிரினின் செல்வமும் 13 பில்லியன் டாலர்கள் குறைந்து, 256 பில்லியன் டாலர்களாக ஆனது. பிரின் தற்போது பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளார், ஆனால் அவர் ஆல்பாபெட் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உறுப்பினராகத் தொடர்கிறார்.
Also Read: HDFC வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. இத உடனே செக் பண்ணுங்க!
தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு இடையே கடுமையான போட்டி
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், 268 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் உலகின் மூன்றாவது பணக்காரராக உள்ளார். இந்த நிலையை அடைய அவர் ஜூலை மாதம் செர்ஜி பிரின்னை முந்தினார். இருப்பினும், பெசோஸ் ஆகஸ்ட் மாதத்தில் 10 பில்லியன் டாலர் இழப்பையும் சந்தித்தார். இதற்கிடையில், டெல் டெக்னாலஜிஸ் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் டெல், 241 பில்லியன் டாலர் மதிப்புடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் அவரது செல்வம் 12 பில்லியன் டாலர் அதிகரித்தது. டெல், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோதே தனது நிறுவனத்தைத் தொடங்கினார்.
மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க்கும் வேகமாக முன்னேறி வருகிறார். 197 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் ஸக்கர்பெர்க் ஆறாவது இடத்தில் உள்ளார். அவர் 2004-ல் ஹார்வர்டில் படித்துக்கொண்டிருந்தபோது ஃபேஸ்புக்கைத் தொடங்கினார், அது பின்னர் மெட்டாவாக விரிவடைந்தது.
ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன் பிரமிக்க வைக்கும் வகையில் 25 பில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார். இந்த ஆதாயத்தின் மூலம், அவர் எட்டாவது இடத்திலிருந்து ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். எலிசனின் மொத்த நிகர மதிப்பு 193 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.
என்விடியா தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் 191 பில்லியன் டாலருடன் எட்டாவது இடத்திற்குச் சரிந்துள்ளார். 1993-ல் என்விடியாவை நிறுவிய ஹுவாங், 17 பில்லியன் டாலர் சம்பாதித்தார், ஆனால் எலிசனின் விரைவான வளர்ச்சி அவரை ஒரு இடம் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
Also Read: முதலீடு செய்யும் பிளானா?.. அப்போ இந்த அடிப்படை விதிகள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!
முதல் பத்து பட்டியலில் புதிய நுழைவு
தெஹ்ரான் தாக்குதல்கள் போர்க்குற்றமாக இருக்கலாம்: அம்னஸ்டி இன்டர்நேஷனல் பரபரப்பு குற்றச்சாட்டு
செப்டம்பர் 9, 2026: தெஹ்ரானில் மக்கள் நெருக்கம் மிகுந்த 3 பகுதிகளில் மார்ச் மாதம் நடத்தப்பட்ட இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் போர்க்குற்றமாக இருக்கலாம் என அம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மார்ச் 1 முதல் 13ஆம் தேதி வரை நைலூஃபர், ரெசாலத் மற்றும் ஜாவாதியே பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 41 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அம்னஸ்டி தெரிவித்துள்ளது. மேலும், வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் கூறியுள்ளது.
இஸ்ரேல் வான்வழித்ஃப் தாக்குதல் - போர்க்குற்றம்:
The U.S./Israeli strikes in Tehran may constitute indiscriminate attacks and amount to war crimes. They must be the object of independent, impartial, effective and transparent investigations.https://t.co/l8Ih8FVFrD
— Amnesty International USA (@amnestyusa) September 8, 2026
அம்னஸ்டி பொதுச் செயலாளர் ஆக்னஸ் காலமார்ட் கூறுகையில், மக்கள் அதிகம் வசிக்கும் நகர்ப்புற பகுதிகளில் பரந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் எதிர்பார்க்கக்கூடியவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரெசாலத் பகுதியில் உள்ள பாசிஜ் படைப் பிரிவின் கட்டிடம் தாக்கப்பட்டதுடன், அருகிலிருந்த 3 கட்டிடங்களும் சேதமடைந்ததாகவும், இதில் குறைந்தது 16 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் அம்னஸ்டி கூறியுள்ளது. நைலூஃபர் மற்றும் ஜாவாதியே பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மேலும் 25 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கிசுகிசு மூலம் பணம் சம்பாதிக்கும் பெண்.. வந்த காசில் இரண்டு வீடுகள்.. இணையத்தில் கவனம் ஈர்க்கும் சம்பவம்..
இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், தெஹ்ரானில் தாங்கள் நடத்திய தாக்குதல்கள் குறித்து இரு நாடுகளும் ஏற்கனவே அறிவித்திருந்ததாக அம்னஸ்டி தெரிவித்துள்ளது.
செயற்கைக்கோள் படங்கள், இணையத்தில் வெளியான 60 வீடியோக்கள் மற்றும் ஈரான், இஸ்ரேல், அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கைகளை ஆய்வு செய்ததுடன், ஈரானில் இருந்த 2 பேரிடமும் தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக அம்னஸ்டி தெரிவித்துள்ளது.
ஈரான் அமெரிக்கா இடையே அதிகரிக்கும் போர் பதற்றம்:
இதனிடையே, அமெரிக்காவின் ஆளில்லா நீர்மூழ்கி வாகனம் ஒன்றை ஹோர்முஸ் நீரிணை பகுதியில் கைப்பற்றியதாக ஈரான் தெரிவித்துள்ளது. அதற்கு பதிலளித்த அமெரிக்க ராணுவம், பழைய மாடல் ஆளில்லா நீர்மூழ்கி வாகனம் ஒன்று செயலிழந்ததாக கூறியுள்ளது.
மேலும், ஈரானின் 27 விமான நிறுவனங்களை அமெரிக்க கருவூலத் துறை தடைகள் பட்டியலில் சேர்த்துள்ளது. ஈரானின் வணிக விமான நிறுவனங்கள் ஆயுதங்கள் மற்றும் ஆட்களை கொண்டு செல்ல உதவுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் படிக்க: காங்கோ திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. 22 பேர் பரிதாப பலி
கிசுகிசு மூலம் பணம் சம்பாதிக்கும் பெண்.. வந்த காசில் இரண்டு வீடுகள்.. இணையத்தில் கவனம் ஈர்க்கும் சம்பவம்..
செப்டம்பர் 7, 2026: கொலம்பியாவில் அக்கம்பக்கத்தினரின் கிசுகிசுக்களை சேகரித்து, அவற்றை விற்பனை செய்து வருமானம் ஈட்டும் 67 வயது பெண் குறித்த தகவல் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. குயின்டியோ மாகாணத்தின் ஆர்மீனியா நகரைச் சேர்ந்த மிரியம் என்பவர், அப்பகுதியில் நடக்கும் தனிப்பட்ட சம்பவங்கள் குறித்து தகவல்களை சேகரித்து, ஆர்வமுள்ளவர்களிடம் அவற்றை விற்பனை செய்து வருகிறார். காதல் பிரச்சினைகள், தம்பதிகளுக்குள் ஏற்படும் சண்டைகள், திருமணத்திற்கு புறம்பான உறவுகள் மற்றும் அன்றாட நிகழ்வுகள் என பல்வேறு விஷயங்கள் அவரது ‘கிசுகிசு’ பட்டியலில் இடம்பெறுகின்றன.
கிசுகிசு சொல்ல பணம் வாங்கும் பெண்:
“எனக்கு கிசுகிசு மிகவும் பிடிக்கும்” எனக் கூறும் மிரியம், தன்னை ஒரு தொழில்முறை ‘Chismosa’ என அழைத்துக்கொள்கிறார். ஸ்பானிஷ் மொழியில் ‘Chismosa’ என்பது கிசுகிசு பேசுபவர் அல்லது தகவல்களைச் சேகரிப்பவர் என்ற பொருளைக் கொண்டதாகும்.
மேலும் படிக்க: காங்கோ திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. 22 பேர் பரிதாப பலி!
சிறிய தகவல்களுக்கு சில ஆயிரம் கொலம்பிய பெசோக்களும், முக்கியமான மற்றும் விரிவான தகவல்களுக்கு அதிக தொகையும் வசூலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஒருமுறை, மனைவி வெளியூர் செல்லும்போது கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் தகவலை வெளியிடாமல் இருப்பதற்காக 7 லட்சம் கொலம்பிய பெசோக்கள் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
தகவல்களை மறக்காமல் இருக்க நோட்ஸ்:
அக்கம்பக்கத்தில் நடப்பவற்றை கவனமாகக் கண்காணிக்கும் மிரியம், முக்கிய தகவல்களை மறந்துவிடாமல் இருக்க நோட்டுப் புத்தகத்திலும் குறிப்பெடுத்து வைத்துள்ளார். மேலும், அக்கம்பக்கத்தினரைப் பற்றிய புகைப்படங்கள் மற்றும் குறிப்புகள் அடங்கிய தனிப்பட்ட ஆவணத் தொகுப்பையும் அவர் வைத்திருக்கிறார்.
இந்த வித்தியாசமான தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் தனது அன்றாட செலவுகளுக்கு உதவுவதுடன், இரண்டு வீடுகளை வாங்குவதற்கும் உதவியதாக மிரியம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:  இடுப்பளவு வெள்ள நீரில் திருமணம் செய்த ஜோடி.. பிலிப்பைன்ஸில் சுவாரஸ்ய சம்பவம்!
காங்கோ திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. 22 பேர் பரிதாப பலி!
கின்ஷாசா, செப்டம்பர் 06 : காங்கோவில் (Congo) உள்ள கின்ஷாசா என்ற பகுதியில் நடைபெற்ற பயங்கர தீ விபத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மிகவும் மகிழ்ச்சியுடன் தொடங்கிய அந்த திருமண கொண்டாட்டம், பெரும் சோகத்தில் நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில், திருமண விழாவில் தீ விபத்து ஏற்பட்டு 22 பேர் உயிரிழந்த சோக சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து
மத்திய கிழக்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள நாடு தான் காங்கோ. இந்த நாட்டின் தலைநகர் தான் கின்ஷாவா. இந்த நகரின் லிங்வாலா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று (செப்டம்பர் 05, 2026) இரவு திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக்கொண்டு இருந்துள்ளது. அப்போது, எதிர்பாராத விதமாக அந்த கட்டடத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதன் காரணமாக தீ கட்டடம் முழுவதும் மலமலவென பரவியுள்ளது. இந்த நிலையில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் தீ விபத்தில் சிக்கிக்கொண்டனர்.
இதையும் படிங்க : நேபாளத்துக்கு தொடர்ந்து கைகொடுக்கும் இந்தியா.. 5.5 டன் மருத்துவப் பொருட்கள் அனுப்பி வைப்பு.. நிலைமை என்ன?
விபத்தில் சிக்கி 22 பேர் பலியான சோகம்
Congo wedding party horror as major fire kills at least 22 people
The fire started late on Friday and continued into the early hours of Saturday pic.twitter.com/QOCtcVS2KI
— Shakeel Yasar Ullah (@yasarullah) September 5, 2026
வெடித்து சிதறிய எரிமலை.. 50ஆயிரம் அடி உயர்ந்த சாம்பல்.. இந்தோனேஷியாவில் சம்பவம்
இந்தோனேசியாவின் அனக் கிரகடோவா எரிமலை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வெடித்தது. இதனால் மேற்கு இந்தோனேசியாவின் சில பகுதிகளில் எரிமலைச் சாம்பல் பரவியது. இதன் காரணமாக, ஜகார்த்தாவின் சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இந்தோனேசியாவின் புவியியல் ஆய்வு நிறுவனத்தின்படி, ஜாவா மற்றும் சுமாத்ரா ஆகிய முக்கியத் தீவுகளுக்கு இடையே சுண்டா ஜலசந்தியில் அமைந்துள்ள இந்த எரிமலைத் தீவு, சனிக்கிழமையன்று அதிகரித்த செயல்பாட்டிற்கான அறிகுறிகளைக் காட்டியது. இந்த எரிமலை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:53 மணிக்கு சுமார் 30 விநாடிகள் வெடித்தது.
உயிரிழப்புகள் குறித்த எந்தத் தகவலும் இல்லை, மேலும் வெளியேற்ற உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. எரிமலைக்கு மிக அருகிலுள்ள மக்கள் வசிக்கும் பகுதி சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இருப்பினும், செயல்படும் எரிமலையிலிருந்து குறைந்தது மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்குமாறு உள்ளூர் மக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. விமான நிலையம் மூடப்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை 209 விமானங்கள் பாதிக்கப்பட்டன, இதனால் சுமார் 22,800 பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதில் தெற்கு சுலவேசியில் உள்ள மக்காசர் மற்றும் சிங்கப்பூர் இடையேயான பரபரப்பான உள்நாட்டு விமானங்களும் அடங்கும். சர்வதேச விமானங்களில், சிங்கப்பூருக்கான விமானங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன.
Also Read: நேபாளத்தில் இடிபாடுகளிலிருந்து தப்பிய 97 வயது மூதாட்டி.. ஓடோடி சென்று உதவும் இந்தியக் கரங்கள்
விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன
தலைநகர் ஜகார்த்தா, சுமத்ரா தீவின் சில பகுதிகள் மற்றும் அதன் தென்கோடி முனையில் உள்ள லம்பங் மாகாணம் ஆகியவற்றை எரிமலைச் சாம்பல் மூடியுள்ளது. அனக் கிரகடோவா மலையில் அதிகரித்த எரிமலைச் செயல்பாடு காரணமாக, சோகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில் காலை 5:30 மணி முதல் 9:30 மணி வரை விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை காலை தெரிவித்தது.
நாட்டின் மிகவும் பரபரப்பான விமான நிலையத்தில், பயணிகள் பணத்தைத் திரும்பக் கோரியதோடு, தாங்கள் பதிவுசெய்திருந்த பயணப் பைகளையும் திருப்பிக் கொடுத்தனர். அதே நேரத்தில், ரத்து செய்யப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்தோனேசியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை, விமானப் பயணத்தின் மீதான எரிமலை வெடிப்பின் தாக்கத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், விமான நிலையங்கள், விமான நிலைய இயக்குநர்கள், விமான நிறுவனங்கள் மற்றும் வானிலை ஆய்வு மையத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்தது. சோகர்னோ-ஹட்டா விமான நிலையத்தில் இரவு முழுவதும் நிறுத்தப்பட்டிருந்த 170 விமானங்கள் அங்கேயே இருப்பதாக அத்துறை கூறியது.
இலங்கையில் என்ன நடக்குது? மஹிந்த ராஜபக்சே மகன் கைதான பின்னணி!
இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாகப் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகப் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. நாட்டின் சீரழிவுக்குக் காரணம் எனக் கூறி ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராகப் பொதுமக்கள் திரண்டெழுந்து நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து, அக்குடும்பத்தைச் சேர்ந்த தலைவர்கள் பலர் அதிகார இழப்பைச் சந்தித்தனர். இந்நிலையில், மகிந்த ராஜபக்சேவின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய நிதி முறைகேடுகள் குறித்து தற்போதைய அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, சுமார் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் வழக்கில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சேவைக் அந்நாட்டின் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிரடியாகக் கைது செய்துள்ளது.
இதையும் படிக்க: இலங்கை கதவுகள் திறக்கப்பட்டன.. இந்தியாவில் இருந்து தடையின்றி தாயகம் செல்லலாம்.. Sri Lanka அரசின் மாஸ் பிளான்!
விசாரணையும் கைது நடவடிக்கையும்:
இலங்கையின் லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, 40 வயதான நாமல் ராஜபக்சேவுக்குச் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தது. 2013-ம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஐரோப்பிய விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ்ஸிடம் இருந்து விமானங்கள் வாங்கியதில் நடந்த நிதி முறைகேடுகள் தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையைத் தொடர்ந்து, அவர் மீது சட்டப்பூர்வமாகக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், விரைவில் அவர் நீதிமன்றக் காவலில் வைப்பதற்காக நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இக்கைது நடவடிக்கையை நாமலின் வழக்கறிஞர் நிஷாந்த தயானந்தாவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
2.3 பில்லியன் டாலர் ஒப்பந்தமும் ஊழல் பின்னணியும்:
கடந்த 2005 முதல் 2015 வரை மகிந்த ராஜபக்ச அதிபராக இருந்த காலத்தில், இலங்கை அரசின் அமைச்சரவை ஒப்புதலுடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக 10 ஏர்பஸ் விமானங்களை வாங்குவதற்கு 2.3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக ஏர்பஸ் நிறுவனம் சுமார் 16 மில்லியன் டாலர் தொகையை லஞ்சமாகக் கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும், அதில் சுமார் 1.7 மில்லியன் டாலர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான கபில சந்திரசேனாவுக்கு கைமாறியதாகவும் அமெரிக்க, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளின் கூட்டு விசாரணையில் தெரியவந்தது. மேலும், கபில சந்திரசேனா தனக்குக் கிடைத்த லஞ்சப் பணத்தில் ஒரு பகுதியை அன்றைய அதிபர் ராஜபக்சவுக்கு வழங்கியதாக முதற்கட்ட விசாரணையில் கூறியிருந்தார்.
இதையும் படிக்க: “279 உயிர்களை பலிகொண்ட கொடூரம்!” – இலங்கை ஈஸ்டர் சூசைட் பாம் தாக்குதல் வழக்கின் இறுதித் தீர்ப்பு செப்டம்பர் 22-ல் வெளியீடு!
ராஜபக்ச குடும்பத்தின் மறுப்பும் அடுத்தகட்ட நகர்வுகளும்:
Miss World 2026: உலக அழகி 2026 பட்டத்தை வென்ற ஜோஹெரி மோல்.. யார் இவர்?
மிஸ் வேர்ல்ட் போட்டியின் மாபெரும் இறுதிப் போட்டி இன்று, செப்டம்பர் 5 ஆம் தேதி, வியட்நாமில் நடைபெற்றது. இப்போட்டியில் சுமார் 111 நாடுகள் பங்கேற்றன. இதில், இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய நிகிதா போர்வாள், நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் போட்டியாளர் ஆவார். இருப்பினும், அவரால் முதல் 20 இடங்களுக்குள் வர முடியாமல், ஆரம்பத்திலேயே வெளியேற்றப்பட்டார். அனைவரின் பார்வையும் வெற்றியாளர் மீது இருந்தது, தற்போது அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹெரி மோல் டொமிங்கஸ், மிஸ் வேர்ல்ட் 2026 பட்டத்தை வென்றுள்ளார்.
ஸ்பெயினின் எலிசபெத் ரெய்ன்ஸை வீழ்த்தி அவர் மகுடம் சூடினார்; ரெய்ன்ஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மலேசியாவின் தனுசியா செட்டி இரண்டாம் இடத்தைப் பிடித்தார். ஜோஹரிக்கு, அவரது முந்தைய வெற்றியாளரான தாய்லாந்தின் ஓபல் சுசதா சுவாங்ஸ்ரீ மகுடம் சூட்டினார். ஓபல் கடந்த ஆண்டு நடைபெற்ற 72வது உலக அழகிப் போட்டியில் வெற்றி பெற்றதுடன், தனது நாட்டிலிருந்து இந்தப் பட்டத்தை வென்ற முதல் போட்டியாளர் என்ற பெருமையையும் பெற்றார்.
வீடியோ
HISTORY FOR THE DOMINICAN REPUBLIC! 👑
Joheirry Mola is the new #MissWorld2026 🌎✨
She makes history as the FIRST Miss World winner from the Dominican Republic! 🇩🇴❤️
What a moment for the Dominican people! Congratulations, Joheirry! 👑🎉 pic.twitter.com/Sdm0AE8Bhr
— @PaddyPOV (@PaddyPOV) September 5, 2026
மிஸ் வேர்ல்ட் 2026 ஜோஹெரி மோல் டொமிங்கஸ் யார்?
அதிகாரப்பூர்வ மிஸ் வேர்ல்ட் இணையதளத்தின்படி, ஜோஹெரி ஒரு அழகிப் போட்டி வெற்றியாளர், சமூக ஆர்வலர் மற்றும் சிறந்த தொடர்பாளர் ஆவார். அவர் ஐபெரோஅமெரிக்கானா பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை மற்றும் நிர்வாகம் பயின்றார். நலிவடைந்த மற்றும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான ஆங்கிலக் கல்வியை ஊக்குவிக்கும் 'வாய்ஸஸ் ஆஃப் டுமாரோ' என்ற அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவராக ஜோஹெரி உள்ளார். மேலும் அவர் ஆங்கில இலக்கியம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களைக் கற்பிப்பதன் மூலம், விமர்சன சிந்தனையின் வழியே அறிவார்ந்த அணுகுமுறையை வளர்த்துக்கொள்ள குழந்தைகளை ஊக்குவிக்கிறார்.
உலக அழகி 2026 இறுதி போட்டி.. எங்கு, எப்போது நடைபெறுகிறது?.. இந்தியர்கள் பார்ப்பது எப்படி?
நா டிராங், செப்டம்பர் 05 : ஒவ்வொரு ஆண்டும் உலக அழகி போட்டி (Miss Universe Pageant) நடைபெறும். இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான அழகிகள் பங்கேற்பர். பல கட்டங்களாக நடைபெறும் இந்த போட்டியில், இறுதி போட்டி மிக கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான உலக அழகி (2026 Miss World Pageant) போட்டி நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில், 2026 உலக அழகி இறுதி போட்டி எங்கு நடைபெற உள்ளது, அதனை பார்ப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலக அழகி போட்டி 2026 - இறுதி போட்டி எப்போது, எங்கு?
உலக அழகி இறுதி போட்டி 2026, இன்று அதாவது செப்டம்பர் 05, 2026 தாய்லாந்தில் உள்ள நா டிராங் பகுதியில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு, உலக அழகி போட்டியை ஒளிபரப்பு செய்யும் நிறுவனம் ஹாட்ஸ்டார் தான். எனவே, இந்திய மக்கள் இன்று மாலை 5.30 மணி முதலே இந்த 2026 ஆம் ஆண்டுக்கான உலக அழகி இறுதி போட்டியை ஜியோ ஹாட்ஸ்டாரில் (Jio Hotstar) எக்ஸ்குளூசிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : போரை முடிவுக்கு கொண்டு வருவதே மனிதகுலத்தின் அழைப்பு” – அதிபர் புதினுடனான சந்திப்பில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
இந்தியா சார்பில் பங்கேற்கும் அழகி யார்?
View this post on Instagram
A post shared by Miss World (@missworld)
உலக நாடுகளை பிரதிபலிக்கும் வகையில், ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் அழகிகள் இந்த போட்டியில் பங்கேற்பர். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில், இந்தியா சார்பில் நிகிதா போர்வாள் பங்கேற்க உள்ளார். இவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.இவர் 2024 ஆம் ஆண்டு, ஃபெமினா மிஸ் இந்தியா (Femina Miss India) பட்டம் பெற்றார்.
இதையும் படிங்க : ஷாங்காய் உச்சி மாநாடு: பிரதமர் மோடி- புதின் – ஷி ஜின்பிங் சந்திப்பின் மீது உலகமே கவனம்!
நேபாளத்துக்கு தொடர்ந்து கைகொடுக்கும் இந்தியா.. 5.5 டன் மருத்துவப் பொருட்கள் அனுப்பி வைப்பு.. நிலைமை என்ன?
நேபாளத்தில் பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல நாட்கள் கடந்தும், நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், இந்தியா நேபாளத்திற்கு மீட்பு மற்றும் நிவாரண உதவிகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. புதன்கிழமை, உதவிகளை ஏற்றி வந்த ஐந்தாவது இந்திய விமானப்படை விமானம் காத்மாண்டு வந்தடைந்தது. அதில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலி ​​நிவாரணிகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் பிற அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்ட சுமார் 5.5 டன் மருத்துவப் பொருட்கள் இருந்தன. அந்த விமானம் 11 பேர் கொண்ட ஒரு சிறப்புக் குழுவையும், 6 டன்னுக்கும் அதிகமான மீட்புப் பொருட்களையும் ஏற்றி வந்தது. இந்த புதிய சரக்குடன், இந்தியா இதுவரை நேபாளத்திற்கு சுமார் 74 டன் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது.
புதன்கிழமை மீட்கப்பட்ட மூவர் உட்பட, இதுவரை 166 இந்தியக் குடிமக்கள் இந்தப் பேரழிவு வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். புனித யாத்திரை அல்லது பிற பணிகளுக்காக திபெத் சென்றிருந்த மொத்தம் 410 இந்தியக் குடிமக்களும் தற்போது வெளியேறியுள்ளனர்.
Also Read: ஷாங்காய் உச்சி மாநாடு: பிரதமர் மோடி- புதின் – ஷி ஜின்பிங் சந்திப்பின் மீது உலகமே கவனம்!
சுரங்கப்பாதைக்குள் தேடுதல் பணி தொடர்கிறது.
இந்திய சுரங்க மீட்புக் குழு புதன்கிழமை அன்று தனது தளத்தை திரிசூலியிலிருந்து சியாப்ருபேசிக்கு மாற்றியது. இது, மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் சிலிமேக்குச் செல்லும் பயண நேரத்தைக் குறைக்க உதவும். இதற்கிடையில், நேபாள இராணுவத்துடன் இணைந்து அக்குழு சிலிமேயில் தனது தேடுதல் பணியைத் தொடர்கிறது. சுரங்கத்திற்குள் ஆழமான சேறும் சகதியும், தடைகளும் இருந்தபோதிலும், புதன்கிழமை அன்று அக்குழுவினர் சுமார் 100 மீட்டர் தூரம் முன்னேறினர். பணிகளை விரைவுபடுத்துவதற்கும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு அதிக கனரக உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கும் ஏதுவாக, சுரங்கத்தை அடைய மாற்றுச் சாலை வழித்தடத்திற்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு வருகின்றன.
11 இந்திய மீட்பு நிபுணர்கள் நேபாளம் சென்றடைந்தனர்
இந்தியாவைச் சேர்ந்த பதினொரு மீட்பு நிபுணர்கள் சிறப்பு உபகரணங்களுடன் புதன்கிழமை திரிசூலி பஜார் அருகே வந்தடைந்தனர். அவர்கள் வியாழக்கிழமை நேபாள இராணுவத்துடன் இணைந்து தங்கள் பணியைத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இந்தியாவின் தடயவியல் குழுவினர் தற்போது காத்மாண்டுவில் உள்ள இரண்டு ஆய்வகங்களில் நேபாள நிபுணர்களுடன் இணைந்து டிஎன்ஏ மாதிரிகளை ஆய்வு செய்து பகுப்பாய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,100-ஐத் தாண்டியுள்ளது.
மீண்டும் பதற்றம்.. ஈரானுக்கு ட்ரம்பின் கடும் எச்சரிக்கை.. ஹோர்முஸில் என்ன நடக்குது?
மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான இராணுவப் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதால், நிலைமை மேலும் பதட்டமாகியுள்ளது.
டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளைப் புதைக்கும் ஈரானின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாகவும், ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது தெஹ்ரான் எட்டு ஏவுகணைகளைக் கொண்டு நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த சமீபத்திய தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். ஈரான் மீண்டும் தாக்கினால், இன்னும் கடுமையாகப் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், "ஈரான் மீதான மிகப்பெரிய தாக்குதல் இன்னும் வரவிருக்கிறது" என்ற டிரம்பின் கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. வரவிருக்கும் தாக்குதலில் ஈரானின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.
Also Read: “ஈரானுடன் வணிகத் தொடர்பு!”.. இந்தியாவின் 4 நிறுவனங்கள் மீது தடை விதித்த அமெரிக்கா!!
ஈரான் சொல்வது என்ன?
மறுபுறம், ஐ.ஆர்.ஜி.சி-யும் அமெரிக்காவிற்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்தது. சமீபத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு அமெரிக்கா பெரும் விலையைக் கொடுக்க நேரிடும் என்றும், அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் சொத்துக்களுக்கு எதிரான பதிலடி நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதவை என்றும் அது அறிவித்தது. தனது பதில் உடனடியாக இருக்கும் என்பதையும் அது தெளிவுபடுத்தியது. அமெரிக்க மத்திய கட்டளையகத்தின்படி, ஐ.ஆர்.ஜி.சி தளங்கள் மீதான தாக்குதல்கள் அமெரிக்க நேரப்படி நண்பகல் 12 மணிக்குத் தொடங்கின. ஈரானிய ஊடக அறிக்கைகளின்படி, கெஷ்ம், ஜஸ்க், சிரிக், சபாஹர், பந்தர் அப்பாஸ், கொனாரக் மற்றும் மினாப் ஆகிய பகுதிகளில் பெரும் வெடிப்புகள் நிகழ்ந்தன.
சர்வதேச அளவில் கவலை
ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு.. பிரதமர் மோடி குறிப்பிட்ட 10 முக்கிய பாய்ண்ட்ஸ்!
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதத்திற்காக அண்டை நாடுகளை மீண்டும் ஒருமுறை கடுமையாகச் சாடினார். பாகிஸ்தானின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், ஆள்சேர்ப்பு, தீவிரமயமாக்கல் மற்றும் பாதுகாப்பான புகலிடங்கள் ஆகியவற்றின் முழுமையான சூழலமைப்பையும் தகர்க்க வேண்டும் என்று கூறி, பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவது பற்றி அவர் பேசினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 26வது உச்சிமாநாடு, கிர்கிஸ்தானின் தலைநகரான பிஷ்கெக்கில் நடைபெற்றது.
பிரதமர் பதிவு
Addressed the SCO Summit in Bishkek.
This Summit is special because we are marking 25 years since the start of SCO.
Here are the points I’ve raised in the Summit👇🏼 pic.twitter.com/oYZLLFvztf
— Narendra Modi (@narendramodi) September 1, 2026
பிரதமர் மோடி குறிப்பிட்ட 10 முக்கிய பாய்ன்ட்ஸ்
SCO-வின் மூன்று முக்கிய தூண்கள் : பாதுகாப்பு, இணைப்பு மற்றும் வாய்ப்புகளை வலுப்படுத்தி, செயல்படுத்தக்கூடிய முடிவுகளை உருவாக்க வேண்டும்.
பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் : பயங்கரவாத நிதியுதவி, ஆட்சேர்ப்பு, தீவிரவாதமயமாக்கல் மற்றும் பாதுகாப்பான தங்குமிடங்களைத் தடுக்க வேண்டும்.
அரசு ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு : பயங்கரவாதத்தை எந்த சூழலிலும் ஒரு மூலோபாய கருவியாக பயன்படுத்தக் கூடாது.
ஆப்கானிஸ்தானில் அமைதி : ஆப்கன் மக்களுக்கு தொடர்ந்து வளர்ச்சி உதவி மற்றும் மனிதாபிமான ஆதரவு வழங்க வேண்டும்.
மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு : பிராந்திய மோதல்கள் தீவிரமடைவதைத் தடுத்து, எரிசக்தி பாதுகாப்பு, கடல் வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாக்க வேண்டும்.
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க வேண்டும் : போதைப்பொருள் கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக SCO நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
நம்பகமான இணைப்பு : அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதித்து, உள்ளடக்கிய இணைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும்.
வர்த்தகம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மேம்பாடு: சுங்க நடைமுறைகளை எளிமைப்படுத்தி, டிஜிட்டல் ஆவணங்களை விரிவுபடுத்தி, சரக்கு போக்குவரத்து வலையமைப்பை திறம்பட மாற்ற வேண்டும்.
மக்கள் தொடர்புக்கு முக்கியத்துவம் : இளைஞர்கள், தொழில்முனைவோர், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் SCO ஒத்துழைப்பு அமைய வேண்டும்.
இளைஞர் மற்றும் அறிவியல் பரிமாற்றம் : SCO Start-up Forum, Young Authors’ Conclave, Young Scientists’ Forum உள்ளிட்ட திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும்
இலங்கை கதவுகள் திறக்கப்பட்டன.. இந்தியாவில் இருந்து தடையின்றி தாயகம் செல்லலாம்.. Sri Lanka அரசின் மாஸ் பிளான்!
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இலங்கை வாழ் தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் அகதிகள் முகாம் அமைத்துக் கொடுத்துள்ளனர். இங்கு வசித்து வரும் இலங்கை தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கு இலங்கை அரசு புதிய சிறப்பு ஏற்பாட்டை உருவாக்கி உள்ளது. இதில், முறையான பாஸ்போர்ட் அல்லது பயண ஆவணங்கள் இல்லாமல் போர்க்காலத்தின் போது, இந்தியா வந்தவர்கள் மற்றும் உரிய சோதனைகளுக்கு பிறகு தன்னார்வமாக நாடு திரும்புவதற்கு இந்த நடைமுறை வழி வகுக்கும். கடந்த 1983- ஆம் ஆண்டு ஏற்பட்ட இன மோதல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற உள்நாட்டு போரின் காரணமாக ஏராளமான இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்தனர். இலங்கையில் நடைபெற்ற போரானது சுமார் 30 ஆண்டுகளுக்கு நீடித்தது.
தமிழகத்தில் 90 ஆயிரம் இலங்கை தமிழர்கள் வசிப்பு
கடந்த 2009- ஆம் ஆண்டு இந்த போர் இறுதிக் கட்டத்தை எட்டியது. 2002- ஆம் ஆண்டு முதல் 2022- ஆம் ஆண்டு வரை சுமார் 18 ஆயிரம் பேர் இலங்கைக்கு திரும்பிச் சென்றனர். மீதமுள்ள சுமார் 90 ஆயிரம் பேர் தமிழகத்தில் வசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நடைமுறையின் படி, முதலில் இலங்கை தூதரகங்கள் வாயிலாக அகதிகளின் அடையாளம் மற்றும் இலங்கை குடியுரிமை உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, இலங்கை நாட்டின் அரசு பாதுகாப்பு அமைப்புகளிடம் இருந்து முறையான அனுமதி பெற வேண்டும்.
மேலும் படிக்க: நேபாளத்தில் மீண்டும் தீவிரமடையும் வெள்ள அபாயம்.. கோஷி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் கரையோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை!!
கடும் குற்றங்களில் தொடர்பு இல்லாதவர்கள்
இதில், கொலை, தேச துரோகம் உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் தொடர்பு இல்லாதவர்கள் தேவையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தற்காலிக பாஸ்போர்ட் வழங்கப்படும். அதன் அடிப்படையில், சட்டபூர்வமாக அவர்கள் இலங்கை செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்த முடிவானது இலங்கை போருக்கு பின்னர் தாயகம் திரும்ப விரும்பும் அகதிகளுக்கு முக்கிய வாய்ப்பாக இருக்கும். இதில், குறிப்பாக பல்வேறு ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வரும் அவர்களுக்கு ஆவணங்கள் தொடர்பான சிக்கல்கள் பெரும் தடையாக இருந்து வருகிறது.
கைது நடவடிக்கை இன்றி இலங்கை பயணம்
தற்போது, அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறையின் காரணமாக அந்த சிக்கல்கள் ஓரளவு குறைய வாய்ப்பு உள்ளது. கடந்த 2025- ஆம் ஆண்டு ஜூலை முதல் 2026- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான காலக்கட்டத்தில், 46 குடும்பங்களைச் சேர்ந்த 246 பேர் எந்த விதமான கைது நடவடிக்கைகளும் இல்லாமல் இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போரை முடிவுக்கு கொண்டு வருவதே மனிதகுலத்தின் அழைப்பு” – அதிபர் புதினுடனான சந்திப்பில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
செப்டம்பர் 1, 2026: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டையொட்டி கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் பிரதமர் நரேந்திர மோடியை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த இருதரப்பு சந்திப்பில், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - பிரதமர் மோடி:
Had extensive discussions with President Putin. Discussed the full range of the India-Russia Special and Privileged Strategic Partnership. It is gladdening to see significant progress across various sectors in recent years.
Focus areas for the India-Russia friendship remain… pic.twitter.com/tclMVJ72KS
— Narendra Modi (@narendramodi) August 31, 2026
“போரின் ஒவ்வொரு நாளும் மனிதகுலத்தை பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. அதே நேரத்தில், அமைதியை நோக்கி எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு அடியும் மனிதகுலத்திற்கு புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. முடிவில்லாத போர்களில் இருந்து விலகி, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
மேலும், அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் என்பதே மனிதகுலத்தின் எதிர்பார்ப்பு என்றும், மகாத்மா காந்தி மற்றும் கவுதம புத்தரின் தேசமான இந்தியா, அமைதியின் பாதையையே உலகிற்கு எடுத்துரைக்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
அதிபர் புதினை வரவேற்ற பிரதமர் மோடி:
சந்திப்பின் தொடக்கத்தில் அதிபர் புதினை வரவேற்ற பிரதமர் மோடி, “எனது நண்பரே, உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என தெரிவித்தார். புதின் இந்தியாவுக்கு மேற்கொண்ட முந்தைய பயணம் மிகவும் வெற்றிகரமாகவும், நினைவுகூரத்தக்கதாகவும் அமைந்ததாக கூறிய அவர், அந்த பயணம் இரு நாடுகளின் பொருளாதார உறவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற முந்தைய சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவதில் இரு நாடுகளின் அதிகாரிகளும் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
இந்தியா - ரஷ்யா உறவு மேலும் மேம்படுத்த திட்டம்:
இந்த சந்திப்பில் இந்தியா - ரஷ்யா இடையேயான வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
இந்தியா - ரஷ்யா இடையேயான உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார். பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவுவதாகவும் அவர் கூறினார். மேலும், 2025ஆம் ஆண்டில் இந்தியா - ரஷ்யா இடையேயான சுற்றுலாப் பயணிகள் பரிமாற்றம் 16 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: பிரதமர் மோடி குறிப்பிட்ட வெப்சைட்.. உள்ளூர் தயாரிப்பு கோரிக்கை.. மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசியது என்ன?
ஒரே காரில் பயணம் மேற்கொண்ட இரு நாட்டு தலைவர்கள்:
இதனிடையே, அடுத்த வாரம் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் புதின் இந்தியா வரவுள்ளார். அவரது வருகையை இந்திய மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். அதிபர் புதினின் இந்திய வருகை, மாஸ்கோ - புதுடெல்லி இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
ஷாங்காய் உச்சி மாநாடு: பிரதமர் மோடி- புதின் – ஷி ஜின்பிங் சந்திப்பின் மீது உலகமே கவனம்!
உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் மாறிவரும் புவிசார் அரசியல் மற்றும் தொடரும் மோதல்களுக்கு மத்தியில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) நாடுகளும் அவற்றின் தலைவர்களும் பிஷ்கெக்கில் இரண்டு நாள் உச்சிமாநாட்டிற்காகக் கூடுகின்றனர். இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 25வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது . இந்தியாவைப் பொறுத்தவரை, பிஷ்கெக்கில் நடைபெறும் இந்தக் கூட்டம், செப்டம்பர் 12-13 தேதிகளில் டெல்லியில் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டிற்கான ஒரு ஆயத்தக் கட்டமாகும். புதின் மற்றும் ஷி ஜின்பிங் இருவரும் இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதினுடனான இருதரப்பு சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் பிரதமர் மோடியும் ஷி ஜின்பிங்கும் உச்சி மாநாட்டின் போது சந்திப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆவலுடன் உள்ளேன் - பிரதமர் மோடி
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை (SCO) ஒரு "முக்கியமான அமைப்பு" என்று விவரித்த பிரதமர் மோடி, "இந்தியா 2017 முதல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ஒரு செயல்திறன் மிக்க மற்றும் ஆக்கப்பூர்வமான உறுப்பினராக இருந்து வருகிறது. பாதுகாப்பு, இணைப்பு மற்றும் வாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிராந்தியத்தை உருவாக்குவதற்கும், நமது அண்டை நாடுகளிலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் எனும் கொடுமைகளிலிருந்து விடுபட்ட ஒரு பிராந்தியத்தை உருவாக்குவதற்குமான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்ல, சக உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்," என்று கூறினார்.
Also Read : உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தார் பிரதமர் மோடி.. உற்சாக வரவேற்பு.. பயணத்தின் திட்டம் என்ன?
மேற்கு ஆசியாவில் போர் குறித்து விவாதிப்பதற்கான சாத்தியக்கூறு
"கிர்கிஸ்தான் அதிபர் சதிர் ஜபரோவ் மற்றும் பிற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) தலைவர்களைச் சந்திப்பதையும், இந்தியா ஆழ்ந்த மரியாதை செலுத்தும் மத்திய ஆசியாவின் வளமான, வாழும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் இந்த விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்துகொள்வதையும் நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்," என்று அவர் கூறினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) பெலாரஸ், ​​சீனா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய 10 உறுப்பு நாடுகளும்; ஆர்மீனியா, அஜர்பைஜான், பஹ்ரைன், எகிப்து, கம்போடியா, குவைத், லாவோஸ், மாலத்தீவுகள், மியான்மர், நேபாளம், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, துருக்கி மற்றும் இலங்கை ஆகிய 15 உரையாடல் கூட்டாளிகளும்; மங்கோலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு பார்வையாளர்களும் உள்ளனர்.
மேற்கு ஆசியாவில் நடக்கும் போர் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக ஈரான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பினராக இருப்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா 2017 முதல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினராக இருந்து வருகிறது.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் டிஎன்ஏ – அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உரை
அமெரிக்கப் பயணத்தில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், முக்கியக் கருத்துக்களைத் தெரிவித்தார். நியூயார்க்கில் நடைபெற்ற பல சமய உரையாடலில், இந்து-முஸ்லிம் உறவுகள் மற்றும் இந்துத்துவக் கோட்பாடு குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் தற்போது விவாதப் பொருளாகியுள்ளன. இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என்று நினைக்கும் எந்தவொரு இந்துவும், இந்துவாகவே இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். 'அமெரிக்க இந்துக்கள் ஈடுபாடு மற்றும் உரையாடலுக்காக' (AHEAD Forum) அமைப்பின் ஏற்பாட்டில், ஆகஸ்ட் 29 அன்று, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற மேடிசன் ஸ்கொயர் கார்டனில் இந்த உலகளாவிய ஒற்றுமைக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பகவத், சிறப்புரை ஆற்றினார்.
ஒற்றுமையும் வேற்றுமையும் இந்தியாவின் இயல்பிலேயே உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மோகன் பகவத், “நாம் அமெரிக்காவைப் பற்றிப் பேசும்போது, ​​‘பன்முகத்தன்மை’ என்ற வார்த்தையை அடிக்கடி கேட்கிறோம். ஆனால் இந்தியாவைப் பற்றிப் பேசும்போது, ​​‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற வார்த்தைதான் நினைவுக்கு வருகிறது. இந்தியாவை வெறும் ஒரு புவியியல் பிராந்தியமாகப் பார்க்க முடியாது. இந்த பன்முகத்தன்மையும் ஒற்றுமையும் இந்திய மரபணுவின் ஒரு பகுதியாகும். இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தனித்துவமான நோக்கம் உண்டு” என்றார்.
வீடியோ
Swami Vivekananda said that every nation has a message to deliver, a mission to accomplish, and a destiny to fulfil. Bharat is there to realise, and from time to time make the world realise this unity in diversity. - Dr. Mohan ji Bhagwat at #UniversalOneness ;… pic.twitter.com/gwRAImPKgq
— RSS (@RSSorg) August 29, 2026
சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த அவர், உலகிற்கு ஒற்றுமை எனும் செய்தியை அளித்து, அந்தக் கொள்கையை உலகம் முழுவதும் பரப்புவதே இந்தியாவின் உண்மையான குறிக்கோள் என்று கூறினார். "நாம் அனைவரும் ஒன்று. பன்முகத்தன்மை என்பது நமது ஒற்றுமைக்கு ஓர் அணிகலன் போன்றது. அதனால்தான் நாம் பன்முகத்தன்மையை மதிக்கவும், ஏற்றுக்கொள்ளவும், கொண்டாடவும் வேண்டும்," என்று அவர் அழைப்பு விடுத்தார்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு – சமூகத்திற்குப் பங்களித்தல்
இயற்கை மற்றும் சமூகத்தின் மீதான நமது பொறுப்புகளை நினைவூட்டிய அவர், “நாம் உண்ணும் உணவு விவசாயிகளின் கடின உழைப்பிலிருந்தும், நாம் அணியும் ஆடைகள் தொழிலாளர்களின் கடின உழைப்பிலிருந்தும் வருகின்றன. சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். எனவே, பதிலுக்கு சமூகத்திற்கு சேவை செய்வது நமது பொறுப்பாகும்” என்றார். உலகில் குடியேறிய இந்தியர்கள் தங்கள் கர்ம பூமிக்கு விசுவாசமாக இருந்து, தங்கள் தாய்நாட்டின் விழுமியங்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
உலக அமைதிக்கான 5 செயல் கோட்பாடுகள்
மோகன் பகவத்தின் உரைக்கு முன்பு, உலகெங்கிலும் உள்ள 30 நாடுகளைச் சேர்ந்த 180 மதத் தலைவர்கள் உறுதிமொழி எடுத்தனர். அவர்கள் 'ஒரே உலகம் – ஒரே மனிதநேயம்' என்ற 5 அம்ச செயல் திட்டத்தை அறிவித்தனர். மதத்தின் பெயரால் வெறுப்பையும் வன்முறையையும் தூண்டுவதை உலக மதத் தலைவர்கள் வன்மையாகக் கண்டித்தனர்.
நேபாளத்தில் இடிபாடுகளிலிருந்து தப்பிய 97 வயது மூதாட்டி.. ஓடோடி சென்று உதவும் இந்தியக் கரங்கள்.. தொடரும் மீட்புப் போர்!!
நேபாள மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை சரிவு மற்றும் அதனைத் தொடர்ந்து பொங்கி வழியும் பேரழிவு வெள்ளத்தால் நேபாள நாட்டின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. போதேகோஷி மற்றும் திரிசூலி நதிப்படுகைகளில் ஏற்பட்ட இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கினால் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600-ஐக் கடந்துள்ள சூழலில், நேபாளத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நூற்றுக்கணக்கான இந்தியர்களின் நிலை குறித்துப் பெரும் கவலை எழுந்தது. இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தீவிர நடவடிக்கை, இடிபாடுகளுக்கு இடையே நிகழ்ந்த ஒரு அதிசயமான மனித மீட்பு மற்றும் இந்திய அரசு வழங்கியுள்ள பிரம்மாண்டமான நிவாரண உதவிகள் ஆகியவை தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: நேபாளத்தில் மீண்டும் தீவிரமடையும் வெள்ள அபாயம்.. கோஷி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் கரையோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை!!
மாயமான 50 இந்தியர்களுடன் தொடர்பு மீட்பு:
RESCATAN CON VIDA A MUJER DE 97 AÑOS TRAS CASI 24 HORAS BAJO LOS ESCOMBROS 🥹🇳🇵
Contra todo pronóstico, Guna Maya Bohara, de 97 años, fue rescatada con vida después de permanecer cerca de 24 horas atrapada bajo lodo y escombros tras las devastadoras inundaciones en Nepal.
🚨… pic.twitter.com/kxf1pQXjMr
— EnBoga (@EnBogaMx) August 29, 2026
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து அங்கு தங்கியிருந்த மற்றும் பயணம் மேற்கொண்ட நூற்றுக்கணக்கான இந்தியர்கள் வெளியுலகத் தொடர்பை இழந்து காணாமல்போயினர். புதுடெல்லியில் உள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் (MEA), காத்மாண்டவில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் பீரஜிங்கில் உள்ள தூதரக அமைப்புகள் மூலம் போர்க்கால அடிப்படையில் தேடுதல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. தூதரக அதிகாரிகளின் தொடர் முயற்சியால், காணாமல்போனதாகப் பட்டியலிடப்பட்டிருந்த இந்தியர்களில் 50 பேருடன் வெற்றிகரமாகத் தொடர்பு மீட்டெடுக்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 108 இந்தியர்கள் ஆபத்தான பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இன்னும் சுமார் 275 இந்தியர்கள் மற்றும் 128 இந்திய வம்சாவளியினரைத் தொடர்பு கொள்ள முடியாத சூழல் நிலவுவதால், அவர்களை விரைவாகக் கண்டறிய இந்தியத் தூதரகம் நேபாள மற்றும் சீன எல்லை அதிகாரிகளுடன் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
இடிபாடுகளிலிருந்து மீண்ட 97 வயது மூதாட்டி:
பேரழிவின் சோகத்திற்கு நடுவே, மனித குலத்தின் தளராத நம்பிக்கையை உணர்த்தும் வகையில் ஒரு அதிசய மீட்புச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் இடிந்து விழுந்த மாபெரும் கட்டிட இடிபாடுகளுக்குள் 97 வயதான குண மாயா பொஹாரா (Guna Maya Bohara) என்ற மூதாட்டி சிக்கிக் கொண்டார். நேபாள ராணுவம் மற்றும் காவல் துறையினர் இணைந்து நடத்திய 4 மணி நேரக் கடினமான போராட்டத்திற்குப் பிறகு, அந்த மூதாட்டி இடிபாடுகளிலிருந்து காயங்களின்றி உயிருடன் மீட்கப்பட்டார். மரணத்தின் விளிம்பிலும் சற்றும் மன உறுதியைக் கைவிடாமல் ஒரு 'மாவீரனைப் போல' இடிபாடுகளிலிருந்து மீண்டு வந்த குண மாயா பொஹாரா, தற்போது ஒட்டுமொத்த நேபாள வெள்ளப் பேரிடரில் மீண்டு வரும் மக்களின் நம்பிக்கையின் முகமாக உலகளவில் கவனத்தைப் பெற்றுள்ளார்.
இதையும் படிக்க: நேபாள வெள்ளப்பெருக்கு.. சிக்கிய ஒற்றை வீடு – தப்பிய உயிர்கள்.. பதைபதைக்க வைக்கும் காட்சி..
பிரதமர் மோடியின் துரித உதவி:
நேபாளத்தில் மீண்டும் தீவிரமடையும் வெள்ள அபாயம்.. கோஷி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் கரையோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை!!
அண்டை நாடான நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு இடையே, இமயமலைப் பகுதியின் நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட எதிர்பாராத பனிப்பாறை சரிவு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பேராபத்து உருவாகியுள்ளது. இமயமலையின் மிக உயர் பகுதியில் பனிப்பாறை உடைந்து லெண்டே கோலா நதியில் விழுந்ததால் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம், போதேகோஷி மற்றும் திரிசூலி ஆற்றுப் படுகைகள் வழியே சீறிப்பாய்ந்து கரையோர கிராமங்களை உருத்தெரியாமல் அழித்துள்ளது. இந்த இயற்கை சீற்றத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600-ஐத் தாண்டியுள்ள நிலையில், 2,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read: உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தார் பிரதமர் மோடி.. உற்சாக வரவேற்பு.. பயணத்தின் திட்டம் என்ன?
திடீர் பனிப்பாறை சரிவும் நில அதிர்வு குழப்பமும்:
रसुवाको भोटेकोशी नदीमा बाढीको बहाव थप केही बढेको सूचना प्राप्त भएकोले रसुवा, नुवाकोट, धादिंङ, चितवनलगायतका प्रभावित क्षेत्रमा खोज, उद्धार तथा राहतमा खटिएका, तटीय क्षेत्रमा रहेका एवं अन्य सम्बन्धित सबैमा सतर्कता अपनाउनु हुन अनुरोध छ। थप सूचना प्राप्त हुनसाथ अद्याधिक गर्नेछौं।
— NDRRMA (@NDRRMA_Nepal) August 30, 2026
முதலில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும், செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்த அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்  மற்றும் சர்வதேச வல்லுநர்கள், 5,200 மீட்டர் உயரத்தில் இருந்த மாபெரும் பனிப்பாறையின் கீழ் பகுதி உடைந்து பள்ளத்தாக்கில் விழுந்ததே இந்த திடீர் வெள்ளப் பெருக்குக்குக் காரணம் என உறுதி செய்துள்ளனர். வெறும் 30 நிமிடங்களில் ஆற்று நீர்மட்டம் 9 மீட்டர் (30 அடி) வரை உயர்ந்ததால், கரையோரம் அமைக்கப்பட்டிருந்த நீர்மின் நிலையங்கள், பாலங்கள் மற்றும் பல அடுக்குக் கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இந்தியர்கள் மீட்பும் தொடரும் தேடுதல் வேட்டையும்:
இந்த திடீர் பேரழிவில் நேபாளத்திற்கு ஆன்மீகப் பயணம் மற்றும் சுற்றுலா சென்ற நூற்றுக்கணக்கான இந்தியர்களும் சிக்கியுள்ளனர். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் மீட்புக் குழுவினரின் தீவிர நடவடிக்கையால் இதுவரை பல இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு காத்மாண்டுவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இருப்பினும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் உட்பட பல இந்தியர்களின் நிலைமை குறித்து இன்னும் தகவல் கிடைக்காததால் தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்தின் நிவாரணப் பொருட்களுடன் மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் மூலம் தொலைதூர மலைப் பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கப் போராடி வருகின்றனர்.
உ.பி, பீகாருக்கு அவசர எச்சரிக்கை:
நேபாளத்திலிருந்து பாயும் நதிகளில் நீர்வரத்து கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதால், இந்தியாவின் எல்லை மாநிலங்களான பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்திற்கு அவசர வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாகப் பீகாரின் கண்டக் ஆற்றில் நீர்மட்டம் அபாயக் கட்டத்தைத் தாண்டியதால், வல்மீகி நகர் அணைக்கட்டின் அனைத்து 36 மதகுகளும் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேற்கு சாம்பாரான் உள்ளிட்ட கரையோர மாவட்டங்களில் வசதிப்போரை உடனடியாக வெளியேற்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், உத்தரப் பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச், குஷிநகர் ஆகிய எல்லை மாவட்ட நிர்வாகங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
Also Read: நேபாள வெள்ளப்பெருக்கு.. சிக்கிய ஒற்றை வீடு – தப்பிய உயிர்கள்.. பதைபதைக்க வைக்கும் காட்சி..
பேரிடர் மீட்புக் குழுவின் தீவிர நடவடிக்கை:
உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தார் பிரதமர் மோடி.. உற்சாக வரவேற்பு.. பயணத்தின் திட்டம் என்ன?
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை உஸ்பெகிஸ்தான் வந்தடைந்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அவர் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவுடன் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தை நடத்துவார். தாஷ்கண்ட் விமான நிலையத்தில் பிரதமர் மோடி வந்தடைந்ததை அதிபர் மிர்சியோயேவ் வரவேற்றார். இது பிரதமர் மோடியின் உஸ்பெகிஸ்தான் பயணம் நான்காவது முறையாகும். தாஷ்கண்டிற்கு வந்தடைந்த பிறகு பிரதமர் மோடி X தளத்தில் பதிவிட்டதாவது, "நான் தாஷ்கண்டிற்கு வந்தடைந்தபோது, ​​அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் என்னை அன்புடன் வரவேற்றார். இந்தச் சிறப்பு வரவேற்பிற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது உஸ்பெகிஸ்தானுக்கு எனது நான்காவது பயணம் ஆகும். இது நமது இருதரப்பு உறவுகளின் ஆழத்தையும், வளர்ந்து வரும் வேகத்தையும் பிரதிபலிக்கிறது." என்றார்
யாங்கி உஸ்பெகிஸ்தான் பூங்காவிற்கு வருகை
உஸ்பெகிஸ்தானுக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, யாங்கி உஸ்பெகிஸ்தான் பூங்காவிற்குச் சென்று, சுதந்திர நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்தார். அதிபர் மிர்சியோயேவும் பிரதமர் மோடியுடன் அந்த நினைவுச் சின்னத்திற்கு வருகை தந்தார். நாட்டின் சுதந்திரத்தின் 30வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த நினைவுச் சின்னம், சுதந்திரம் மற்றும் நன்மையின் இலட்சியங்களைச் சின்னமாகக் காட்டுகிறது.
பிரதமர் மோடி பதிவு
Upon landing in Tashkent, went to lay a wreath at the Yangi Uzbekistan Monument with President Mirziyoyev.
The Yangi Uzbekistan Monument reflects the aspirations and progress of the Uzbek people. Glad to begin my visit by coming here.
Toshkentga yetib kelganimdan so‘ng,… pic.twitter.com/7VHDC0esBt
— Narendra Modi (@narendramodi) August 29, 2026
தாஷ்கண்ட் வந்தடைந்ததும், அதிபர் மிர்சியோயேவுடன் இணைந்து யாங்கி உஸ்பெகிஸ்தான் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன். யாங்கி உஸ்பெகிஸ்தான் நினைவிடம், உஸ்பெக் மக்களின் அபிலாஷைகளையும் முன்னேற்றத்தையும் பிரதிபலிக்கிறது. எனது பயணத்தை இங்கிருந்து தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
Also Read: நேபாள வெள்ளப்பெருக்கு.. சிக்கிய ஒற்றை வீடு – தப்பிய உயிர்கள்.. பதைபதைக்க வைக்கும் காட்சி..
பிரதமர் மோடி கிர்கிஸ் குடியரசுக்கும் பயணம் மேற்கொள்வார்.
பிரதமர் மோடி, கிர்கிஸ் குடியரசு உட்பட தனது இரு நாடுகளுக்கான பயணத்தின் முதல் கட்டமாக தாஷ்கண்டில் உள்ளார். மத்திய ஆசியாவில் இந்தியாவின் மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதையும், அப்பகுதியுடனான நாகரிக உறவுகளை ஆழப்படுத்துவதையும் இந்தப் பயணம் நோக்கமாகக் கொண்டுள்ளது. உஸ்பெகிஸ்தானுக்கான தனது இரண்டு நாள் பயணத்தின் போது, ​​அதிபர் மிர்சியோயேவுடன் வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் இணைப்பு, பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்து மோடி விவாதிப்பார்.
26வது SCO உச்சிமாநாட்டில் பங்கேற்பார்
நேபாளத்தில் வரலாறு காணாத பேரிடர்.. 600-ஐ கடந்த பலி எண்ணிக்கை.. மாயமான ஆயிரக்கணக்கானோர் நிலை என்ன?
நேபாளம் மற்றும் திபெத் எல்லைக்கு உட்பட்ட இமயமலைப் பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் பனிப்பாறைச் சரிவு காரணமாக போதே கோஷி மற்றும் திரிசூலி ஆற்றுப் படுகைகளில் திடீரெனப் பேரழிவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த விபரீத இயற்கைச் சீற்றத்தால் கரைபுரண்டு வந்த வெள்ள நீர், அப்பகுதியில் உள்ள கிராமங்கள், சந்தைப் பகுதிகள், பாலங்கள் மற்றும் முக்கியக் கட்டடங்களை அடித்துச் சென்று பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. திடீரெனப் பாய்ந்த வெள்ள வெள்ளப் பெருக்கால் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். நேபாள வரலாற்றில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த வெள்ளப் பெருக்கில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: Watch Video: நேபாள வெள்ளப்பெருக்கு.. சிக்கிய ஒற்றை வீடு – தப்பிய உயிர்கள்.. பதைபதைக்க வைக்கும் காட்சி..
பலி எண்ணிக்கை உயர்வு:
தற்போதைய நிலவரப்படி, வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600-ஐத் தாண்டி உயர்ந்துள்ளது. அதே சமயம் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என அஞ்சப்படுவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ராசுவா மாவட்டத்திற்கு உட்பட்ட திமூரே, சியாப்ருபேசி மற்றும் நுவாகோட் ஆகிய பகுதிகள் வெள்ளத்தின் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. குடியிருப்புகள், நீர்மின் நிலையத் திட்டப் பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் சேதமடைந்து அப்பகுதிகள் நாட்டின் பிற இடங்களிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் படையினரின் மீட்பு நடவடிக்கை:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்கும் நோக்கில் நேபாள அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளைத் முடுக்கிவிட்டுள்ளது. நேபாள ராணுவம், ஆயுதப் படை மற்றும் நேபாள காவல்துறை ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 14,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் மீட்புக் குழுவினர் இடிபாடுகளிலும் வெள்ள நீரிலும் சிக்கிய ஆயிரக்கணக்கானோரைப் பாதுகாப்பாக மீட்டு தற்காலிக முகாம்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். மேலும், நிலச்சரிவு காரணமாக உருவான தற்காலிக இயற்கை அணைகள் உடைந்து மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பாடும் அபாயம் நிலவுவதால், ஆற்றங்கரை ஓரங்களில் வாழும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு நேபாள பேரிடர் நிர்வாக அமைப்பு எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க: நேபாள வெள்ளத்தில் சிக்கிய 290 இந்தியர்கள்; தமிழகத்தைச் சேர்ந்த 86 பேர் மாயம்
இந்தியாவின் உதவி மற்றும் சர்வதேசக் கவலைகள்
மக்களை ஒன்றிணைப்பது உணர்வு மட்டுமே.. நியூயார்க்கில் மோகன் பாகவத் பேச்சு
ஆகஸ்ட் 29, 2026: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், அமெரிக்காவுக்கான தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று நியூயார்க்கில் உள்ள இஸ்கான் கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார். தொடர்ந்து, வீடற்ற மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். கோயிலில் பக்தர்கள் மத்தியில் பேசிய மோகன் பாகவத், உலகில் நிலவும் மோதல்கள் மற்றும் வேறுபாடுகளை கடந்து மக்களை ஒன்றிணைக்க கிருஷ்ண உணர்வு உதவும் என தெரிவித்தார்.
மக்களை ஒன்றிணைப்பது உணர்வு மட்டுமே:
“இன்றைய உலகில் ஏராளமான மோதல்களும் முரண்பாடுகளும் உள்ளன. மக்களை ஒன்றிணைப்பது உணர்வு மட்டுமே. அந்த உணர்வு கிருஷ்ண உணர்வு. உலகில் பல்வேறு வேறுபாடுகள், முரண்பாடுகள் மற்றும் மோதல்கள் இருந்தாலும், உண்மையில் அனைத்தும் கிருஷ்ணரே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
அனைத்தும் கிருஷ்ணரின் ஒரு பகுதிதான் என்ற புரிதல் ஒவ்வொருவரின் மனதையும் சென்றடைந்தால், உலகம் சிறந்த மற்றும் அமைதியான இடமாக மாறும் என்றும் அவர் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா:
மோகன் பாகவத்தின் இந்த பயணம், ஆகஸ்ட் 29ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெற உள்ள ‘யுனிவர்சல் ஒன்நெஸ் செலிப்ரேஷன்’ நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினரிடையே அவர் உரையாற்றுவதற்கு முன்னதாக அமைந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மோகன் பாகவத் செவ்வாய்க்கிழமை நியூயார்க் சென்றார்.
மேலும் படிக்க: நேபாள வெள்ளப்பெருக்கு.. சிக்கிய ஒற்றை வீடு – தப்பிய உயிர்கள்.. பதைபதைக்க வைக்கும் காட்சி..
இதனிடையே, ‘யுனிவர்சல் ஒன்நெஸ் செலிப்ரேஷன்’ நிகழ்ச்சிக்கு நியூயார்க்கில் எதிர்ப்பும் எழுந்துள்ளது. நிகழ்ச்சிக்கு தான் ஆதரவு அளிக்கவில்லை என நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், தனியார் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியை ரத்து செய்யும் அதிகாரம் நகர நிர்வாகத்திற்கு உள்ளதா என்பது குறித்து தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள ஆச்சார்ய மகாமண்டலேஷ்வர் ஸ்ரீ ஸ்வாமி அவதேஷானந்த் கிரி ஜி மகாராஜ், நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கு தங்களது கருத்துகளை வெளிப்படுத்தவும், நிகழ்ச்சியை விமர்சிக்கவும் உரிமை உள்ளது என தெரிவித்தார்.
உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கம்:
இந்த நிகழ்ச்சி உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியை எடுத்துச் செல்லும் என்றும், உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற இந்திய கலாச்சார நம்பிக்கையை வலியுறுத்தும் என்றும் அவர் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ். அகில பாரதிய பிரச்சாரப் பிரமுக் சுனில் அம்பேகர், ‘யுனிவர்சல் ஒன்நெஸ் செலிப்ரேஷன்’ நிகழ்ச்சி பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்கும் மதங்களுக்கு இடையேயான சந்திப்பாக அமையும் என தெரிவித்தார்.
Watch Video: நேபாள வெள்ளப்பெருக்கு.. சிக்கிய ஒற்றை வீடு – தப்பிய உயிர்கள்.. பதைபதைக்க வைக்கும் காட்சி..
ஆகஸ்ட் 29, 2026: நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரு கிராமமே அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கிருந்து வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. எக்ஸ் தளத்தில் வெளியான சுமார் 2 நிமிட வீடியோவில், சேறு, தண்ணீர் மற்றும் கட்டிட இடிபாடுகள் கலந்த வெள்ளம் பெரும் வேகத்துடன் பாய்ந்து செல்வது பதிவாகியுள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய ஒற்றை வீடு - வைரல் காட்சிகள்:
Terrifying footage shows a flash flood sweeping through the Nepal–Tibet border, trapping people on rooftops and balconies. At least 469 have been killed, with hundreds still missing. pic.twitter.com/xRgRWmwut7
— Weather Monitor (@WeatherMonitors) August 28, 2026
அந்த வெள்ளத்துக்கு மத்தியில், வெளிர் பச்சை நிறத்தில் இரண்டு மாடிகளைக் கொண்ட ஒரு வீடு மட்டும் தாக்குப்பிடித்து நிற்கிறது. அந்த வீட்டைச் சுற்றிலும் சேறும் சகதியும் சூழ்ந்துள்ள நிலையில், மீட்புப் பணிகளுக்கான வாய்ப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் இரண்டாவது மாடி பால்கனியில் ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை என குறைந்தது 3 பேர் சிக்கித் தவிப்பதும் வீடியோவில் தெரிகிறது. அவர்களைச் சுற்றிலும் பெரும் அளவில் சேறு பாய்ந்து கொண்டிருக்கிறது. இதில் பாறைகள், கட்டிட இடிபாடுகள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் அடித்துச் செல்லப்பட்டு, வீட்டின் மீது மோதிக் கொண்டிருக்கின்றன. இதனால் வீடும் எப்போது வேண்டுமானாலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நேபாள வெள்ளம் - 500 பேர் உயிரிழப்பு:
இதனிடையே, இந்த திடீர் வெள்ளத்தில் இதுவரை சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொலைதூரப் பகுதிகளுடனான தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் படிப்படியாக மீண்டும் கிடைக்கும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும், சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும், அவர்களில் சுமார் 290 பேர் இந்தியர்கள் என்றும் கூறப்படுகிறது.
மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிக்கட்டி மற்றும் பாறை சரிவு காரணமாக இந்த திடீர் வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆகஸ்ட் 26ஆம் தேதி காலை 8.30 மணிக்குப் பிறகு போதேகோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து ஆற்றில் சேறு, தண்ணீர் மற்றும் இடிபாடுகள் பெரும் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
மேலும் படிக்க: நேபாள வெள்ளத்தில் சிக்கிய 290 இந்தியர்கள்; தமிழகத்தைச் சேர்ந்த 86 பேர் மாயம்
வெள்ளப்பெருக்கு உருவானது எப்படி ?
இதன் காரணமாக ஆற்றின் குறுக்கே தடுப்பு ஏரி ஒன்று உருவாகி, அதில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி வந்தது. வெள்ளிக்கிழமை காலை அந்த ஏரி நிரம்பி வழியத் தொடங்கியதால், மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் சில மணி நேரங்களில் நீர் வழிந்து செல்வது நின்றுவிட்டதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து நிறுத்தப்பட்டிருந்த மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
Nepal Flood: நேபாள வெள்ளத்தில் சிக்கிய இரட்டை குழந்தைகளை மீட்டு அரவணைத்த ராணுவத்தினர்.. வைரலாகும் வீடியோ..
ஆகஸ்ட் 28, 2026: நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 300 இந்தியர்களை தொடர்புகொள்ள முடியாத நிலையில், அவர்களில் 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதனிடையே, வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட இரட்டைக் குழந்தைகளை நேபாள ராணுவ வீரர்கள் அரவணைத்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட இரட்டை குழந்தைகள் - வைர்ல் வீடியோ:
VIDEO | Nepal floods: Rescued twin children comforted by Nepal Army personnel amid ongoing relief operations. pic.twitter.com/12fLMnjS0f
— Press Trust of India (@PTI_News) August 27, 2026
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மீட்கப்பட்ட இரட்டைக் குழந்தைகளை நேபாள ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக தங்களிடம் வைத்திருக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. மீட்புப் பணிகள் கடினமான சூழலில் நடைபெற்று வரும் நிலையில், குழந்தைகளை ராணுவ வீரர்கள் அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் காட்சிகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
மீட்புப் பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள்:
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்றடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், நேபாள ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன.
ரேடியோ நேபாளின் தகவலின்படி, ராசுவா மாவட்டத்தின் திமுரே பகுதியில் இருந்து 123 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 94 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 29 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் ஏற்பட்டது எப்படி?
ராசுவா மாவட்டம் மற்றும் நேபாளம்-சீனா எல்லைப் பகுதிகள் இந்த வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பனிச்சரிவு அல்லது பனிப்பாறை சரிவு காரணமாக லெண்டே ஆற்றின் நீரோட்டத்தில் தடுப்பு ஏற்பட்டு, பின்னர் மிகப்பெரிய அளவில் தண்ணீர் மற்றும் சேறு வெளியேறியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு, பல குடியிருப்புகள் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: இது வெறும் நிவாரணம் இல்ல… நேபாள மக்களுக்கு இந்தியா அனுப்பிய பெட்டிகளில் எழுதப்பட்டிருந்த நெகிழ்ச்சியான வாசகம்!
350-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு:
தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ராய்ட்டர்ஸ் வெளியிட்ட தகவலின்படி, நேபாளம் மற்றும் சீனாவில் சேர்த்து குறைந்தது 359 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசோசியேட்டட் பிரஸ் தகவலின்படி, குறைந்தது 353 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,300-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என கூறப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு மற்றும் மாயமானவர்களின் எண்ணிக்கையில் மாறுபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள நாட்டு வெள்ளத்தில் சிக்கி பிழைத்த 21 பேரின் விவரம்- புகைப்படம்.. இந்திய வெளியுறவுத்துறை வெளியீடு!
நேபாளம்- சீனா எல்லைப் பகுதியில் உள்ள தீபெத் மலையில் உள்ள பனிப்பாறைகள் சரிந்து விழுந்ததில் போதே கோஷி ஆற்றில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் முயற்சியில் நேபாள ராணுவம் உள்ளிட்ட படைகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த வெள்ளத்தில் தமிழகத்தில் இருந்து சுற்றுலா சென்ற 57 பேரில் 21 பேர் சிக்கிய நிலையில், அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்த விவரத்தை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், கயிலாய மானசரோவர் யாத்திரை சென்ற தமிழகத்தை சேர்ந்த 21 பயணிகள் குறித்த தகவல்கள் பின்வருமாறு:
மேலும் படிக்க: நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்.. அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு..
வெள்ளத்திலிருந்து தப்பிய 21 தமிழர்கள் விவரம்
சந்தியா- காஞ்சிபுரம்.
வள்ளிநாயகி- திருச்சி.
கிருபாகிரி- சிதம்பரம்.
தியாகராஜன்- சிதம்பரம்.
மைதிலி- சென்னை.
விஜய புவனேஸ்வரி- சிதம்பரம்.
நாவு கபீர் தாஸ்- சென்னை.
முத்துக்குமரேசன்- சிதம்பரம்.
சாந்தி- சிதம்பரம்.
மாறன்- சிதம்பரம்.
கற்பகம்- திருச்சி.
சிவரஞ்சனி- திருச்சி.
கலைமதி- சிதம்பரம்.
பழனியப்பன்- சிதம்பரம்.
ரகுநாதன்- சிதம்பரம்.
பூங்குழலி- மயிலாடுதுறை.
ரத்தினகுமார்- மயிலாடுதுறை.
ராதை- சிதம்பரம்.
கனகசபை- சிதம்பரம்.
திருமாவளவன்- சிதம்பரம்
கும்பகோணம் டூர் நிறுவனம் மூலமாக சுற்றுலா
ஆகியோர் வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேபாள நாட்டு வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை சுமார் 200- ஐ கடந்துள்ளது. இதில், 178 இந்தியர்கள் உள்பட 644 பேரை காணவில்லை என்று நேபாள நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இருந்து 2 குழுக்களாக நேபாள நாட்டுக்கு யாத்திரை சென்றுள்ளனர். கும்பகோணத்தில் செயல்பட்டு வரும் கைலாஷ் யாத்திரா நிறுவனம் மூலமாக 54 பேர் சென்றுள்ளனர்.
3 பேருந்தில் 2 பேருந்தை அடித்து சென்ற வெள்ளம்
இதில், 3 பேருந்துகளில் சென்றுள்ள அவர்களின் 2 பேருந்துகள் கடும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதில், 21 பேர் மட்டும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணியில் மீட்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றன. இதே போல, சென்னையில் இருந்து சென்ற மற்றொரு 49 பேர் கொண்ட குழு குறித்த விவரங்கள் வெளியாகவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன. இதனால், நேபாள நாட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.