Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Waves 2025: மன அமைதியே முக்கியம்.. Waves மாநாட்டில் அல்லு அர்ஜூன் ஓபன் டாக்!

உலக ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு (WAVES) வியாழக்கிழமை (மே 01) மும்பையில் கோலாகலமாகத் தொடங்கியது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, TV9 நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பருண் தாஸ், டோலிவுட் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனை நேர்காணல் செய்தார். அதனைப் பற்றி காணலாம்.

Waves 2025: மன அமைதியே முக்கியம்.. Waves மாநாட்டில் அல்லு அர்ஜூன் ஓபன் டாக்!
அல்லு அர்ஜூன் - பருண் தாஸ்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 01 May 2025 18:59 PM

உலக ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு (WAVES) மும்பையில் கோலாகலமாகத் தொடங்கியது. ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் மத்திய அரசால் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வு மொத்தம் 4 நாட்கள் நடைபெறும். இந்த மதிப்புமிக்க மாநாட்டில் 90க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 350க்கும் மேற்பட்ட தொடக்க நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

மேலும், பாலிவுட், டோலிவுட், கோலிவுட் மற்றும் மோலிவுட் உள்ளிட்ட இந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்த திரைப்பட நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இதற்கிடையில்,TV9 நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பருண் தாஸ், அதே மாநாட்டில் டோலிவுட் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனை நேர்காணல் செய்தார்.

இத்தகைய நேரத்தில், WAVES உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக மத்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அல்லு அர்ஜூன் நன்றி தெரிவித்தார். மேலும் மிக நீண்ட காலமாக, பொழுதுபோக்குத் துறைக்கு இதுபோன்ற ஒரு உச்சிமாநாடு தேவைப்பட்டது, அது நடந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் எனவும் தெரிவித்தார்.

 உடல் வலிமைக்கு முக்கிய காரணம்

மேலும் அல்லு அர்ஜூன் தனது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையைப் பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களையும் இந்த அமர்வில் பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்வில் அல்லு அர்ஜுன் கூறுகையில், தனது மன அமைதியே தனது உடல் வலிமைக்கு முக்கிய காரணம் என தெரிவித்தார்.

என் தாத்தா அல்லு ராமலிங்கய்யா 1000 படங்களில் நடித்தார். என் அப்பா அல்லு அரவிந்த் 70 படங்களைத் தயாரித்தார். என் மாமா சிரஞ்சீவி, தனது சூப்பர் ஸ்டார் குடும்பத்தினர் மற்றும் தென்னிந்திய ரசிகர்களின் ஆதரவுடன் இந்த நிலையை எட்டியுள்ளார். ‘புஷ்பா’ படத்துக்கு எனக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்தது. ஒவ்வொரு நடிகருக்கும் உடற்தகுதி மிகவும் முக்கியம்.

நான் படப்பிடிப்பு இல்லாதபோதும் கூட உடற்தகுதி எனக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. எனக்கு சினிமாவைத் தவிர வேறு எந்த யோசனையும் இல்லை. நான் படப்பிடிப்பு நடத்தவில்லை என்றால், வீட்டிலேயே ஓய்வெடுப்பேன். நான் படங்களில் சிக்ஸ் பேக்கிற்காக மிகவும் கடினமாக உழைத்தேன் என்று அல்லு அர்ஜுன் கூறினார்.

“புஷ்பா 2: தி ரைஸ் வெற்றிக்குப் பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி மாறியது?” என TV9 நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பருண் தாஸ் எழுப்பிய கேள்விக்கு, “மக்களின் அருளால், இப்போது என் முகம் அனைவருக்கும் தெரியும். இப்போது, ​​புஷ்பாவால், நான் பொழுதுபோக்கு துறையில் ஒரு பரிச்சயமான முகமாக மாறிவிட்டேன்” என தெரிவித்தார்.

மேலும், “புஷ்பா 2 படப்பிடிப்பின் போது, ​​ஒரு விபத்தில் சிக்கி, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. மருத்துவர் ஆறு மாதங்கள் ஓய்வெடுக்கச் சொன்னார். அப்போதுதான் எனக்கு வயதாகும்போது, ​​என் உடல் வலிமையும் அதிகரிக்கிறது என்பதை உணர்ந்தேன். 69 ஆண்டுகளில் தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகர் நான்தான்” எனவும் அல்லு அர்ஜூன் குறிப்பிட்டார்.

தர்பூசணியுடன் சாப்பிடக்கூடாத 4 உணவுகள் - எச்சரிக்கும் நிபுணர்கள்!
தர்பூசணியுடன் சாப்பிடக்கூடாத 4 உணவுகள் - எச்சரிக்கும் நிபுணர்கள்!...
இதய நோய்களை சில விநாடிகளில் கண்டுபிடிக்கும் ஏஐ!
இதய நோய்களை சில விநாடிகளில் கண்டுபிடிக்கும் ஏஐ!...
வெயிலால் ஏற்படும் தோல் எரிச்சல்... டாக்டர் சொல்லும் அறிவுரை!
வெயிலால் ஏற்படும் தோல் எரிச்சல்... டாக்டர் சொல்லும் அறிவுரை!...
கோடையில் நீங்கள் சிக்கன் சாப்பிடுகிறீர்களா? பிரச்சனை உண்டாகும்!
கோடையில் நீங்கள் சிக்கன் சாப்பிடுகிறீர்களா? பிரச்சனை உண்டாகும்!...
குங்ஃபூவை பயன்படுத்தி திருடனை வீழ்த்திய இளைஞர் - வைரல் வீடியோ
குங்ஃபூவை பயன்படுத்தி திருடனை வீழ்த்திய இளைஞர் - வைரல் வீடியோ...
Amazon Great Summer Sale - டாப் 5 ஏசி பிராண்டுகள்!
Amazon Great Summer Sale - டாப் 5 ஏசி பிராண்டுகள்!...
காதலில் விழுந்த ஷிகர் தவான்! பெண் புகைப்படத்துடன் வெளியான அப்டேட்
காதலில் விழுந்த ஷிகர் தவான்! பெண் புகைப்படத்துடன் வெளியான அப்டேட்...
இளைஞருக்கு குளிரை சூடாகவும், சூடானவை குளிராகவும் உணரும் நோய்!
இளைஞருக்கு குளிரை சூடாகவும், சூடானவை குளிராகவும் உணரும் நோய்!...
பனீர் டிக்கா மசாலா சாப்பிட ஆசையா..? எளிதாக இப்படி செய்து பாருங்க!
பனீர் டிக்கா மசாலா சாப்பிட ஆசையா..? எளிதாக இப்படி செய்து பாருங்க!...
தியேட்டரில் புகைபிடிக்கும் எச்சரிக்கைகள் மனநிலையைக் கொல்லும்
தியேட்டரில் புகைபிடிக்கும் எச்சரிக்கைகள் மனநிலையைக் கொல்லும்...
யாருடன் கூட்டணி ? பிரேமலதா விஜயகாந்த் சொன்னது என்ன?
யாருடன் கூட்டணி ? பிரேமலதா விஜயகாந்த் சொன்னது என்ன?...