Vetrimaaran : சிம்புவுடன் இணையும் படம் – தனுஷ் காப்பி ரைட் கேட்கவில்லை – வெற்றிமாறன்!
Vetrimaaran Talk About Dhanush Vadachennai Movie Copyright : இயக்குநர்களில் மிகவும் பிரபலமானவராக இருந்து வருபவர் வெற்றிமாறன். இவரின் இயக்கத்தில் பல படங்கள் வெளியாகி ஹிட்டாகியிருகிறது. இந்நிலையில் சிலம்பரசனுடன் புதிய படத்தில் இணைந்திருக்கும் நிலையில், அந்த படத்திற்காக தனுஷ், காப்பி ரைட்ஸ் கேட்கவில்லை என வெற்றிமாறன் விளக்கமளித்துள்ளார்.

தனுஷ் மற்றும் வெற்றிமாறன்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் வெற்றிமாறன் (Vetrimaarn). இவர் நடிகர் தனுஷின் (Dhanush) பொல்லாதவன் (Polladhavan) என்ற திரைப்படத்தை இயக்கி தமிழில் இயக்குநராக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஆடுகளம், விசாரணை போன்ற படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். இந்நிலையில், இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் விடுதலை 2 (Viduthalai 2) . கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த படமானது திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, வெற்றிமாறன் சிலம்பரசனுடம் புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்த படமானது வடசென்னை (Vada Chennai) பின்னணியில் நடைபெறும் கதையாக இருக்கும் என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். .
மேலும் வடசென்னை படத்தை நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். தற்போது அந்த படத்தின் பின்னணியில் சிம்புவின் படம் உருவாகவுள்ள நிலையில், தனுஷ் அதற்கு எந்த வித மறுப்பும் தெரிவிக்காததோடு, காப்பி ரைட்ஸ் (No copyrights) வேண்டாம் என சொன்னதாக வெற்றிமாறன் விளக்கமளித்திருக்கிறார்.
சிம்பு – வெற்றிமாறன் படத்துக்கு காப்பி ரைட்ஸ் கேட்காத தனுஷ்
சமீபத்தில் தனது யூடியூப் பக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் பேசினார். அவரிடம் அதில், வடசென்னை படத்திற்கான காப்புரிமையை தனுஷ் வைத்திருக்கும் நிலையில், சிலம்பரசனுடன் நீங்கள் இணையும் படத்திற்குக் காப்பி ட்ரைட்ஸிற்காக தனுஷ் பணம் கேட்டாரா ? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வெற்றிமாறன், “சிலம்பரசனுடன் நான் இணையும் புதிய திரைப்படம் வடசென்னை 2 படம் எனப் பலரும் கூறிவருகின்றனர். ஆனால் அந்த படம் வடசென்னை 2 கிடையாது. அந்த படத்துடன் தொடர்புடைய கதைக்களத்துடன் உருவாகிவரும் மற்றொரு கதைக்களம் கொண்ட படமாகும்.
மேலும் இந்த வடசென்னை படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்தான், அவரிடம் தான் இந்த வடசென்னை படத்தின் காப்பி ரைட்ஸ் இருக்கிறது. அந்த படத்தில் மைய கதை, கதாபாத்திரங்கள், காட்சிகள் என அனைத்திற்கும் உரிமை தனுஷிடம்தான் இருக்கிறது. அதனால் அவர் காப்பி ரைட்ஸ் கேட்டால் கூட தவறில்லை. அது அவரின் உரிமையும் கூட. அதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. அதை போல சிலம்பரசனுடன் இப்படி ஒரு படம் பண்ணப்போவதாக, தனுஷிடம் போனில் பேசினேன்.
வெற்றிமாறன், நடிகர் தனுஷ் குறித்து பேசிய வீடியோ :
#Vetrimaaran:
“#STR49 set in the world of Vadachannai, but it’s not #vadachennai2. As #Dhanush is the copyright holder of Vadachannai film, I said that I’m making a film with #SilambarasanTR in Vadachannai world. Dhanush didn’t even asked a single rupee & said that he will give… pic.twitter.com/UiMSqfYAvE— AmuthaBharathi (@CinemaWithAB) June 30, 2025
சிலம்பரசனுடன் இணையும் படத்தை வடசென்னை படத்துடன் தொடர்புப்படுத்தி எடுப்பது அல்லது அதற்கு தொடர்பில்லாமல் எடுப்பது என இரண்டு ஐடியா தன்னிடம் இருப்பதாக தெரிவித்தேன். அவர் தனக்கு எந்தவித பிரச்னையும் இல்லை. உங்கள் பாணியில் படத்தை நீங்கள் இயக்குங்கள். நீங்கள் கேட்டால் எங்கள் டீமிலிருந்து நோ காபி ரைட்ஸ் கொடுத்துவிடுகிறோம், பணம் எதுவும் தேவையில்லை” என்றுதான் தனுஷ் என்னிடம் கூறினார் என வெற்றிமாறன் பேசியிருந்தார்.