விஜய்யின் பேச்சை கேட்காத ரசிகர்கள் – சேதமடைந்த வாகனம் – பின்தொடர்ந்த ரசிகர்கள்
TVK leader Vijay's Van Damaged : ஜன நாயகன் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்வதற்காக நடிகர் விஜய் மதுரை வந்திருந்தார். அவருக்கு தமிழக வெற்றிக் கழக தொண்டர்களும் ரசிகர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் அவரது வாகனத்தின் மீது ஏறுவது, பின் தொடர்ந்து வருவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என ரசிகர்களுக்கு விஜய் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதனை மீறியும் ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்தனர்.

ஜன நாயகன் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக கொடைக்கானல் (Kodaikanal) செல்வதற்காக நடிகர் விஜய் (Vijay) மதுரை வந்தார். அவருக்கு பூக்கள் தூவி ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். முன்னதாக மதுரை (Madurai) வருவதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஜய், ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்கிறேன். கூடிய விரைவில் மதுரை மண்ணில் உங்களை சந்திக்கிறேன். மதுரை விமான நிலையத்தில் உங்களை சந்தித்து விட்டு என் வேலையை பார்க்க சென்று விடுவேன். என் காரை யாரும் பின் தொடராதீர்கள். பைக்கில் வேகமாக வருவது, ஹெல்மெட் அணியாமல் வருவது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
மதுரை விமான நிலையத்தில் வைப் செய்த விஜய்
இந்த நிலையில் மதுரை விமான நிலையம் வந்த அவர் விமானத்தில் இருந்து குதித்து ரசிகர்களைப் பார்த்து கையைத் தூக்கி வைப் செய்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மதுரை விமான நிலையத்தில் அவருக்கு மலர் தூவி மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நடிகர் விஜய்யும் வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுக்கு கைகாட்டினார். வேலாயுதம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு மதுரை வந்தவர் அதன் பிறக கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு அவர் மதுரை வருகிறார்.
விஜய்யின் பேச்சைக் கேட்காத ரசிகர்கள் – வாகனம் சேதம்
Tharamaana Sambavam at Madurai 🔥🔥
Thalapathy fort 🫡🔥 @actorvijay pic.twitter.com/3oljFn8tfg— OTFC Dindigul (@OTFC_Dindigul) May 1, 2025
மதுரை விமான நிலையத்தில் நடிகர் விஜய்யின் வேனை விஜய் ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். இதனால் அவரது வாகனம் மெதுவாகவே நகர்ந்தது. தன் வாகனத்தை பின் தொடர வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டதையும் கேட்காமல் ரசிகர்கள் அவரது வாகனத்தை பின் தொடர்ந்து சென்றனர். இந்த நிலையில் வாகனத்தின் மீது ரசிகர்கள் ஏற முயன்றதால் வாகனத்தின் முன் பகுதி சேதம் அடைந்ததது.
முன்னதாக பூத் கமிட்டி கருத்தரங்கில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் கோயம்புத்தூர் வந்திருந்தார். அப்போது கோவை விமான நிலையத்தில் இருந்து கருத்தரங்கம் நடைபெறும் இடம் வரை நடிகர் ரோடு ஷோ சென்றார். அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும் ரசிகர்களும் அவரது காரை பின் தொடர்ந்து சென்றனர். அதில் பலர் ஹெல்மெட் அணியாமலும், பைக்கில் நின்ற படியே சென்றனர். மேலும் ஒரு சிலர் அவரது வாகனத்தின் மீது குதித்து பரபரப்பு ஏற்படுத்தினர். இது பெரும் சர்ச்சையான நிலையில் நடிகர் விஜய் இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த விஜய்
என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம்.
மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி முகவர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த என்னை உங்கள் அளவு கடந்த அன்பால் நனைய வைத்தீர்கள்! I love you…
— TVK Vijay (@TVKVijayHQ) April 30, 2025
இது தொடர்பாக அவரது அறிக்கையில் ”நம்முடைய இளைய தோழர்கள், நமது வாகனங்களை இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடருவது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு மிகவும் கவலையை அளித்தன. நான் இங்கே சொல்லி இருக்கற மாதிரி, இத நீங்க கட்டளையாகவோ கண்டிப்பாகவோ கூட எடுத்துக்கங்க…தப்பே இல்ல…” என்று குறிப்பிட்டிருந்தார். இதனையும் மீறி அவரது ரசிகர்கள் அவர் மீதான அன்பு மிகுதியில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.