Sivakarthikeyan : கடைக்குட்டி மகனின் பிறந்தநாள்.. புகைப்படத்தைப் பகிர்ந்த சிவகார்த்திகேயன்!
Sivakarthikeyan Son Pawan's First Birthday : தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் மிக முக்கியமாக திகழ்பவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் மதராஸி மற்றும் பராசக்தி என அடுத்தடுத்த படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது 3வது மகன் பவனின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்துக் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன்
சின்னதிரை நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து பின், துணை நடிகர், ஹீரோ என வளர்ந்தவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் இறுதியாக அமரன் (Amaran) படம் வெளியானது. இந்த படமானது மறைந்த முன்னாள் ராணுவ வீர மேஜர் முகுந்த வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்பட்டது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி (Sai Pallavi) மிகவும் அருமையாக நடித்திருந்தனர். அமரன் படமானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், ஏ. ஆர். முருகதாஸ் (A. R. Murugadoss) இயக்கத்தில் மதராஸி (Madharasi) மற்றும் இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் பராசக்தி (Parasakthi) என 2 படங்களில் கமிட்டானார். அமரன் படத்தைத் தொடர்ந்து மதராஸி படத்தின் ஷூட்டிங்க்கும் நடந்து வந்த நிலையில், கடந்த 2025, மே மாதத்தில் ஷூட்டிங் நிறைவடைந்தது.
அதை தொடர்ந்து பராசக்தி படத்தின் இறுதி ஷூட்டிங்கில் இணையவுள்ளார். இந்நிலையில் இன்று 2025, ஜூன் 2ம் தேதியில், சிவகார்த்திகேயனின் 3வது மகனின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் சிவகார்த்திகேயன் மகனின் புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது அந்த புகைப்படமானது இணையத்தில் தீயாகி பரவி வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயனின் எக்ஸ் தள பதிவு :
எங்கள் மகிழ்ச்சியை மும்மடங்காக்கிய கடைக்குட்டி பவனுக்கு முதல் பிறந்தநாள் வாழ்த்துகள் 🥰🥰
Happy first birthday dear Pavan kutty ❤️❤️🤗🤗 pic.twitter.com/9OMuC1JHBG
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 2, 2025
இந்த பதிவில் நடிகர் சிவகார்த்திகேயன், “கடைக்குட்டி பவனுக்கு முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று எழுதியுள்ளார். தற்போது இந்த பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி மற்றும் அவர்களின் மகன் பவன் இருக்கும் புகைப்பட ம் வைரலாகி வருகிறது.
மதராஸி :
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மதராஸி. இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2023ம் ஆண்டிலே வெளியானது. அதை தொடர்ந்து சுமார் 1 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இவர் விஜய் சேதுபதியின் ஏஸ் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் கூடிய இந்த, மதராஸி படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் மீது சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.
பராசக்தி திரைப்படம் ;
சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படம்தான் பராசக்தி. இதை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிவருகிறார். இந்த படமானது உண்மை சம்பவத்தை அடிப்படியாகக் கொண்டு உருவாகிவருகிறதாம். இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா உட்படப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்படமானது இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.