Thug Life : ஓ மாறா.. தக் லைஃப் படத்திலிருந்து வெளியான ‘ஓ மாறா’ வீடியோ பாடல்!
O Maara Video Song : தமிழ் சினிமாவில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசனின் கூட்டணியில் வெளியான திரைப்படம் தக் லைஃப். கடந்த 2025, ஜூன் 5ம் தேதியில் வெளியான இப்படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்திலிருந்து ஓ மாறா என வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தக் லைப் திரைப்படம்
இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகியிருந்த திரைப்படம் தக் லைஃப் (Thug Life). இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) மற்றும் சிலம்பரசன் (Silambarasan) இணைந்து முன்னணி வேடத்தில் நடித்திருந்தனர். மேலும் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகைகள் அபிராமி (Abhirami) மற்றும் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2025, ஜூன் 5ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. நடிகர் கமல்ஹாசனின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை மணிரத்னம் எழுதி, இயக்கியிருந்தார். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைகளுடன் உருவாகியிருந்தது. ஒரு கேங்ஸ்டரின் பதவிக்கு ஆசைப்படும் மற்ற கேங்ஸ்டர்ஸ் போன்ற கதைகளில் வித்தியாசமாக அமைந்திருந்தது இந்த தக் லைஃப்.
இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் (A.R. Rahman) இசையமைத்திருந்தார். இவரின் இசையமைப்பில் இப்படத்தில் பல ஹிட் பாடல்கள் அமைந்திருந்தது. அதில் ஓ மாறா என்ற பாடலும் ஒன்று. தற்போது இப்படத்திலிருந்து “ஓ மாறா” என வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஓ மாறா பாடலை வெளியிட்ட படக்குழு :
Let The Swag & Chill Flow This Weekend! #OMaara Video Song From #ThugLife is Out Now! 😎🔥
A #ManiRatnam Film
An @arrahman MusicalTamil
🎙✍🏻 @paal_dabbaTelugu
🎙 @AdithyarkM
✍🏻 @RakenduMouliV@ikamalhaasan @SilambarasanTR_ #Mahendran @bagapath… pic.twitter.com/edYrTNvpwu— Saregama South (@saregamasouth) June 21, 2025
தக் லைஃப் படத்தில் தோல்விக்குக் காரணம் :
நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசனின் கூட்டணியில் உருவாகியிருந்த இப்படத்திற்கு ரிலீசாகுவதற்கு முன் மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. மேலும் இப்படத்தில் இசை வெளியீட்டு விழாவின் போது கமல்ஹாசன் கன்னட மொழியைப் பற்றி தவறாகப் பேசியதாகக் கூறப்பட்ட நிலையில், படத்தின் கர்நாடகா ரிலீஸ் பெரும் பாதிப்பைச் சந்தித்தது. இப்படத்தின் முதல் சரிவுக்கு இதுவும் ஒரு காரணம்.
மேலும் இப்படமானது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியிடப்பட்ட நிலையில், இப்படத்தின் கதைக்களம் மீது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி இருந்தது. இந்த படத்தின் கதை பெரிதாக இல்லை, படம் மிகவும் சாதாரணமாகப் போகிறது என படத்தின் மீது நெகடிவ் விமர்சனங்கள் வரத்தொடங்கியது. அப்படியே இப்படத்தின் திரையரங்கில் வரவேற்பும் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னட மொழியில் நஷ்டம்
இந்த தக் லைஃப் படமானது கர்நாடகாவில் வெளியாகாத நிலையில், இப்பாடத்திற்கு சுமார் ரூ 30 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகத் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. முதலில் தடை வைத்திருந்த கர்நாடகா உயர்நீதிமன்றம் 2 வாரங்களுக்குப் பின்னரே படத்தை ரிலீஸ் செய்வதற்கு ஒப்புக்கொண்டது.
ஆனால் இன்னும் சில நாட்களில் இப்படம் ஓடிடியில் வெளியாகிவிடும் என்பதால் இப்படத்திற்குக் கர்நாடகாவில் வரவேற்புகள் இருக்காது என்று கருதப்பட்ட நிலையில், இப்படத்தைக் கர்நாடகாவில் ரிலீஸ் செய்வதற்கு உரிமை பெற்ற தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.