GV Prakash Kumar : ‘சூர்யா 46 முதல் டியூன் பயங்கரமா வந்திருக்கு’ – சிறப்பான அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்!

Suriya 46 Update : இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் சூர்யா46. இப்படமானது தெலுங்கு மற்றும் தமிழ்ப் படமாக உருவாகிவருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் குறித்தது அவர் பேசியிருக்கிறார்.

GV Prakash Kumar : சூர்யா 46 முதல் டியூன் பயங்கரமா வந்திருக்கு - சிறப்பான அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்!

ஜிவி பிரகாஷ், சூர்யா மற்றும் வெங்கி அட்லூரி

Published: 

10 Jun 2025 19:25 PM

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் இறுதியாக வெளியாகி பெற்ற வெற்றியைக் கொடுத்த படம் ரெட்ரோ (Retro). இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா 45 மற்றும் சூர்யா 46 (Suriya46) என இரு படங்களைத் தனது கைவசம் வைத்திருக்கிறார். இதில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் (RJ Balaji)  இயக்கத்தில் உருவாகிவரும் படம் சூர்யா 45. இந்த படமானது கிராமத்து கதைக்களத்துடன் கூடிய படமாக உருவாகிவருகிறது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக திரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், சூர்யாவின் காட்சிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து சூர்யா இணைந்துள்ள திரைப்படம் சூர்யா46. இந்த படத்தைப் பிரபல தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே வாத்தி (Vaaththi)  மற்றும் லக்கி பாஸ்கர் என ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து சூர்யாவுடன் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

இந்த படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் (G.V. Prakash Kumar) இசையமைத்து வருகிறார். இவர் ஏற்கனவே வெங்கி அட்லூரியின் வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அதை அடுத்ததாக சூர்யாவின் 46வது படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சந்தித்த ஜி.வி. பிரகாஷ் “சூர்யா46 படத்தின் முதல் பாடல் டியூன் லாக் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் அவர் பேசியதை விளக்கமாகப் பார்க்கலாம்.

சூர்யா46 படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

 

சூர்யா46 படத்தை பற்றி ஜி.வி.பிரகாஷ் குமார் பேச்சு

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஜி.வி. பிரகாஷ் வாடிவாசல் மற்றும் சூர்யா46 படம் பற்றியும் பேசியிருக்கிறார். அதில் அவர் “வெற்றிமாறன் மற்றும் என்னுடைய கூட்டணி படம் என்றாலே நிச்சயம் டிரம்பட் மியூசிக் இடம்பெறும். அந்த வகையில் வாடிவாசல் படத்திற்கு இசையமைப்பு பணிகள் நடந்துவருகிறது. மேலும் மீண்டும் சூர்யா சாரின் 46வது திரைப்படத்திலும் இணைந்திருக்கிறேன்.

மேலும் வெங்கி அட்லூரி மற்றும் சூர்யா சார் படத்திலும் பணியாற்றிவருகிறேன், படத்தின் முதல் டியூன் லாக் ஆகிவிட்டது, மிகவும் பயங்கரமாக வந்திருக்கிறது. மேலும் அதைப் போலத்தான் வெங்கி அட்லூரி சாரின் இயக்கத்தில் இரண்டு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன், அந்த இரு படங்களும் சூப்பர் ஹிட். எப்படி ஆதிக் ரவிச்சந்திரனுடன் மார்க் ஆண்டனி மற்றும் குட் பேட் அக்லி படம் ஹிட்டானது அதை போல வெங்கி அட்லூரியுடன் இந்த இரு படங்களும் சூப்பர் ஹிட். மேலும் அவருடன் சூர்யா46 படத்தில் மூன்றாவது முறையாக இணைத்துள்ளேன் என்று நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் பேசியிருந்தார்.