Singer Saindhavi: தேசிய திரைப்பட விருது.. ஜி.வி. பிரகாஷை வாழ்த்திய சைந்தவி!

GV Prakash Kumar And Saindhavi : கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளராக இருந்து வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவருக்கு 2023ம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர் தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அவரின் முன்னாள் மனைவியும், பாடகியான சைந்தவி வாழ்த்துக்களைக் கூறியுள்ளார். இது தொடர்பான தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Singer Saindhavi: தேசிய திரைப்பட விருது.. ஜி.வி. பிரகாஷை வாழ்த்திய சைந்தவி!

ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி

Published: 

02 Aug 2025 18:04 PM

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என பல்வேறு பணிகளைச் செய்து வருபவர் ஜி. வி. பிரகாஷ் குமார் (GV Prakash Kumar). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் கிங்ஸ்டன் (Kingston). இந்த படமானது இவருக்குக் கலவையான விமர்சனங்களைக் கொடுத்திருந்தது. இதை அடுத்தாக பிளாக்மைல் (Blackmail) என்ற படத்திலும் நடித்திருந்தார். இப்படம் கடந்த 2025, ஆகஸ்ட் 1ம் தேதியில் வெளியாகவிருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது நடிகர் ஜி.வி. பிரகாஷிற்கு, இந்திய அரசின் சார்பாகத் தேசிய திரைப்பட விருது (National Film Awards) அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளர் விருது ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை முன்னிட்டு, அதற்கான வெற்றியாளர்களின் அறிவிப்புகள் வெளியானது. அதில் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு, தனுஷின் வாத்தி (Vaathi) படத்திற்காகச் சிறந்த இசையமைப்பாள விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பல பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஜிவி. பிரகாஷின் முன்னாள் மனைவியும், பாடகியான சைந்தவி (Saindhavi) வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்ட்ரோரியில் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : தொடரும் வசூல் வேட்டை.. விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ பட 2வது நாள் வசூல் விவரம் இதோ!

வாத்தி திரைப்படம் :

நடிகர் தனுஷின் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான திரைப்படம் வாத்தி. இந்த படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் இப்படத்தில் தனுஷ் கதாநாயகன் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடித்திருந்தார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்த படத்திற்காகத்தான், ஜி.வி . பிரகாஷ் குமாருக்குச் சிறந்த இசையமைப்பாளர் என்ற தேசிய விருது கிடைத்துள்ளது. இதற்கு முன் நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்திற்காக, சிறந்த பின்னணி இசையமைப்பாளர் என்ற தேசிய விருதும் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : உங்கள் அன்புக்கு கடமைப்பட்டுள்ளேன்- தேசிய விருது வென்ற எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி!

ஜிவி. பிரகாஷிற்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ் :

நடிகர் தனுஷின் தனது எக்ஸ் பக்கத்தில் ஜிவி. பிரகாஷ் குமார் மற்றும் தமிழ் சினிமாவில் தேசிய விருது வென்ற பிரபலங்களை வாழ்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், அவர் “71வது தேசிய திரைப்பட விருதை வென்ற பிரபலங்களுக்கு வாழ்த்துக்கள் என எழுதியுள்ளார். மேலும் வாத்தி திரைப்படத்திற்காகச் சிறந்த இசையமைப்பாளர் என்ற விருதை எனது சகோதரர் ஜி.வி. பிரகாஷ் குமார் வென்றுள்ளார். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், வாத்தி படத்தின் இசையமைப்பும் அவரின் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் பார்க்கிங் படக்குழுவிற்கும், நடிகர் எம்.எஸ். பாஸ்கர் சாருக்கும் வாழ்த்துக்கள்” என நடிகர் தனுஷ் அந்த பதிவில் எழுதியுள்ளார்.