Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

L2 எம்புரான் பட தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

Producer Antony Perumbavoor: வருமான வரித் துறை வட்டாரங்களின்படி 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முந்தைய சோதனைகளின் தொடர்ச்சியாக மோகன்லாலின்L2 எம்புரான் பட தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் எம்புரான் படம் வெளியானதில் இருந்தே அந்த படத்திற்கு தொடர்புடையவர்கள் இந்த மாதிரியான சிக்கல்களை சந்தித்து வருவது குறிப்பிடதக்கது.

L2 எம்புரான் பட தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
மோகன்லால், தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Apr 2025 16:04 PM

வருமான வரித்துறையினர் L2: எம்புரான் பட தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூருக்கு (Antony Perumbavoor) நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அவரது முந்தைய படங்களான லூசிஃபர் மற்றும் மரக்கர்: லயன் ஆஃப் தி அரேபியன் சீ படங்களுடன் தொடர்புடைய பண பரிவர்த்தனைகள் குறித்து விளக்கம் கோரி ஆண்டனி பெரும்பாவூருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து வருமான வரித்துறை (Income Tax) அதிகாரிகள் கூறுகையில், கடந்த 2022-ம் ஆண்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைகளைத் தொடர்ந்து இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் மூலம் நடந்து வரும் நடவடிக்கைகளும் சமீபத்தில் வெளியான மற்றும் L2: எம்புரான் படங்களுடன் தொடர்பில்லை என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். 2022 ஆம் ஆண்டில், கேரளாவில் உள்ள பல திரைப்பட தயாரிப்பாளர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

இந்த சோதனைகள் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் ஆசீர்வாத் சினிமாஸ் உட்பட ஐந்து தயாரிப்பு நிறுவனங்களை சுற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019 முதல் 2022 ஆண்டு வரையிலான இந்த நிறுவனங்களின் பண பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை ஆராய்ந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.

ஆண்டனி பெரும்பாவூருக்கு சமீபத்தில் அனுப்பப்பட்ட நோட்டீஸ் வருமான வரித் துறையின் தொடர் விசாரணைகளின் ஒரு பகுதியாகும். முன்னதாக தயாரிப்பாளர் கோகுலம் கோபாலனின் அலுவலகங்களில் அமலாக்க இயக்குநரகம் (ED) சோதனை நடத்திய சில நாட்களுக்குப் பிறகு, நடிகர்-இயக்குனர் பிருத்விராஜ் சுகுமாரனுக்கு வருமான வரித் துறை சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது.

மேலும், பிருத்விராஜ் சுகுமாரனுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான வரி தாக்கல்களில் உள்ள முரண்பாடுகளைக் கண்டறிந்த பின்னர் மார்ச் மாதம் 29-ம் தேதி 2025-ம் ஆண்டு அன்று மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது. வருமான வரித் துறை ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி 2025-ம் ஆண்டு அவரது விளக்கத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இது நடந்துகொண்டிருக்கும் L2: எம்புரான் சர்ச்சையுடன் தொடர்புடையதாகத் தோன்றினாலும், இது ஒரு நிலையான நடைமுறை அறிவிப்பு என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மார்ச் மாதம் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு எம்புரான் படம் வெளியானதில் இருந்தே பல சர்ச்சைகளை சந்தித்து வருகின்றது.

படத்தில் 2002-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரங்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் வன்முறைகளை தூண்டும் விதமாக இந்தப் படம் உள்ளது. படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வலதுசாரி அமைப்புகள் பலர் கோரிக்கைகள் வைத்தனர். இப்படி பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாகவும் ஓடிடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்திற்கு தொடர்புடையவர்கள் மீது தொடர்ந்து இவ்வாறான நோட்டீஸ் அனுப்பப்படுவது ரசிகர்களிடையே கேள்வியை எழுப்பி வருகின்றது.