Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dhanush : தனுஷின் குபேரா வெற்றி.. ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை!

Kuberaa Movie Box Office Collection : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி வெற்றிபெற்று வரும் நிலையில், இந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியான குபேரா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இப்படமானது 4 நாட்கள் முடிவில் 100 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Dhanush : தனுஷின் குபேரா வெற்றி..  ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை!
தனுஷின் குபேரா திரைப்படம் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 25 Jun 2025 17:34 PM

இயக்குநர் சேகர் கம்முலாவின் (Sekhar Kammula) இயக்கத்தில்,  நடிகர் தனுஷ் (Dhanush) இறுதியாக நடித்திருந்த திரைப்படம் குபேரா (Kuberaa) . இந்த படமானது முழுக்க மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. கடந்த 2025, ஜூன் 20ம் தேதியில் வெளியான இப்படத்தில் தனுஷ் தேவா (Deva) என்ற பிச்சைக்காரன் வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் தனுஷிற்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் நாகார்ஜுனா (Nagarajuna)  நடித்திருந்தார். இந்த குபேரா படமானது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்தது. வெளியான பான் இந்திய படமாகும். இதில் நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனாவும் (Rashmika Mandanna) மிக முக்கிய ரோலில் நடித்திருந்தார். இந்த படமானது அதிரடி ஆக்ஷ்ன் திரில்லர் திரைப்படமாகவே அமைந்திருந்தது.

இந்த படத்தில் நடிகர் தனுஷின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது, இடமானது வெளியாகி 4 நாட்கள் முடிவில் சுமார் ரூ100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

குபேரா படக்குழு வெளியிட்ட வசூல் விவரம் :

குபேரா வெற்றி :

சேகர் கம்முலாவின் இயக்கத்தில் வெளியான இந்த குபேரா திரைப்படமானது கடந்த 2025, ஜூன் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. வெளியான முதல் நாளிலே சுமார் ரூ. 30 கோடியை வசூல் செய்திருந்தது. இதை அடுத்ததாக இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் கடந்த 2025, ஜூன் 22ம் தேதியில் படக்குழு வெற்றி விழாவைக் கொண்டாடியிருந்தது. இதில் தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா, சிரஞ்சீவி என பலரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் தொடர் 100 கோடி வசூல் திரைப்படங்கள் :

நடிகர் தனுஷின் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம் படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை இயக்குநர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் வெளியான இப்படமானது ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. அதை தொடர்ந்து 2023ம் ஆண்டு இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் வெளியான வாத்தி படமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படமும் சுமார் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.

இதையடுத்து தனுஷின் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளியான ராயன் படமும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது. இதை தொடர்ந்துதான் இந்த 2025ம் ஆண்டு வெளியான குபேரா படமும் 4 நாட்கள் முடிவில் சுமார் ரூ. 100 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. சினிமாவில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக சுமார் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த படங்களை நடிகர் தனுஷ் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.