Cinema Rewind: என்னுடைய வெற்றிக்குக் காரணமான 2 பேர்.. நடிகை மீனா ஓபன் டாக்!
Actress Meenas Success In Cinema : தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர் நடிகை மீனா. இவர் கோலிவுட் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் பிரபல கதாநாயகிகளில் ஒருவராக பணியாற்றி வந்தார். தற்போதும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் தனது திரைத்துறை வெற்றி பின் இருந்த நபர்களைப் பற்றிப் பேசிய விஷயம் குறித்துப் பார்க்கலாம்.

நடிகை மீனாவைத் (Meena) தமிழ் சினிமாவில் தெரியாத நபர்களே இருக்க முடியாது. சூப்பர் ஸ்டார் (Rajinikanth) முதல் விஜயகாந்த் (Vijayakanth) பல ஹிட் திரைப்பட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார். தற்போது நடிகை நயன்தாராவிற்கு எப்படி படங்கள் தொடர்ந்து அமைத்து வருகிறதோ, அதைப் போல 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் இவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்த நிலையில்தான் இருக்கும். ஆண்டுக்கு இவரின் நடிப்பில் 4 முதல் 5 படங்கள் வரை வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்தது. இவர் கடந்த 1982ம் ஆண்டு சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளியான “நெஞ்சங்கள்” (Nenjangal) என்ற படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் நுழைந்தார். இதைத் தொடர்ந்து ரஜினியின் “எங்கேயோ கேட்ட குரல்” என்ற படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துப் பிரபலமானார்.
இதைத் தொடர்ந்து இவர் கதாநாயகியாக அறிமுகமான திரைப்படம் “கர்தவ்யம்” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவருக்கு, தமிழிலும் பல படங்களின் வாய்ப்புகள் குவிந்து வந்தது. 1990ம் ஆண்டு வெளியான “ஒரு புதிய கதை” என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து நடிகர்கள் ரஜினிகாந்த், சரத்குமார், பிரபு, சத்யராஜ், விஜயகாந்த், கார்த்திக், அர்ஜுன் என பல்வேறு நடிகர்களுடன் கதாநாயகியாகப் படங்களில் நடித்துள்ளார். சினிமாவின் மீது அதீத ஆர்வம் கொண்ட இவர் தற்போதுவரையிலும் , படங்களில் சிறப்புக் கதாபாத்திரங்களில் நடித்தது வருகிறார். மேலும் இவர் முன்னதாக பேசிய வீடியோ ஒன்றில், தான் சினிமாவில் முன்னேறியதற்கு 2 மட்டும்தான் காரணம் என்று கூறியுள்ளார் அதைக் குறித்துப் பார்க்கலாம்.
நடிகை மீனா சொன்ன அந்த 2 பேர் யார் தெரியுமா :
நடிகர் மீனா முன்னதாக பேசியிருந்த நேர்காணலில், தான் சினிமாவில் இப்படிப்பட்ட நிலையில், இருக்க இருவர் மட்டுமே காரணம் என்று கூறியுள்ளார். அந்த வீடியோவில் என்னுடைய இந்த முன்னேற்றத்திற்குக் காரணம் என்னுடைய அப்பா, அம்மாதான் காரணம். என்னுடைய வெற்றிக்குப் பின் இருக்கும் அந்த பெண்ணும், ஆணும் இவர்கள் இருவரும் மட்டும் தான். இவர்கள் இல்லாமல் நான் இப்படி வந்திருக்க முடியாது. அவர்கள் இருவருமே எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் தான் என்று நடிகை மீனா அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
நடிகை மீனா நடிக்கும் படங்கள் :
நடிகை மீனா தமிழில் இறுதியாக ரஜினியின் முன்னணி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ரஜினியின் அத்தை மகள் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். பல வருடங்களுக்குப் பின் ரஜினியுடன் நடித்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து மலையாளத்தில் படங்களை நடிக்கத் தொடங்கியுள்ளார்.
மேலும் இவரின் நடிப்பில் தற்போது ரவுடி பேபி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் இயக்குநர் சுந்தர் சியின் இயக்கத்தில் உருவாகிவரும் மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.