Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kayadu Lohar : ரொம்ப நல்ல பொண்ணுங்க நானு.. ராஷ்மிகாவை போல மேடையில் பேசிய கயாடு லோஹர்!

Kayadu Lohars Opinion On Love : தமிழ் சினிமாவில் தான் நடித்த முதல் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் கயாடு லோஹர். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றப் படம் டிராகன். இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கதாநாயகியாகக் கலக்கி வருகிறார். மேலும் நடிகை கயாடு லோஹர் பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் இவர் பேசிய விஷயம் வைரலாகி வருகிறது.

Kayadu Lohar : ரொம்ப நல்ல பொண்ணுங்க நானு.. ராஷ்மிகாவை போல மேடையில் பேசிய கயாடு லோஹர்!
கயாடு லோஹர் Image Source: Instagram
barath-murugan
Barath Murugan | Published: 04 May 2025 22:28 PM

நடிகை கயாடு லோஹர்  (Kayadu Lohar) நடிப்பில் இறுதியாக வெளியான படம் டிராகன் (Dragon). அந்த படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu)  இயக்கியிருந்தார். இந்த படத்தில் இவர் லவ் டுடே பிரபல நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு (Pradeep Ranganathan) ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் ஹீரோயினியாக அறிமுகமான முதல் படத்தின் மூலமாகப் பல லட்சம் ரசிகர்களைக் கவர்ந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகர் அதர்வாவின் இதயம் முரளி (Idhayam Murali) என்ற படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தைத் தயாரிப்பாளரும், இயக்குநராகவும் இருந்து வரும் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2025 மார்ச் மாதத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு சர்பரை கொடுத்து. நடிகை கயாடு லோஹர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, மராத்தி , மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் இவர் எந்த மொழியிலும் ஒரு படத்திற்கு மேலாக நடித்ததில்லை. தமிழில் மட்டும் டிராகன் படத்தைத் தொடர்ந்து 2 படங்களில் கதாநாயகியாகக் கலக்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சென்னையின் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கயாடு லோஹர், காதல் குறித்துப் பேசியிருக்கிறார். தற்போது அந்த தகவலின் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை கயாடு லோஹர் பேசிய விஷயம் :

கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கயாடு லோஹர் “நான் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அனைவரையும் பார்க்கும்போது மிகவும் ஆனந்தமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சியில் ஒருவர் கயாடு லோஹரை பார்த்து, ’நீங்க யாரை லவ் பண்ணுறீங்க..?’ என்று கேட்டுள்ளார். அதற்கு நடிகை கயாடு லோஹர் “நான் அப்படியெல்லாம் இல்லை, ரொம்ப நல்ல பொண்ணுங்க நான். காதலைப் பற்றிய விவகாரமே எனக்கு வேண்டாம்” என்று கூறியுள்ளார். இந்நிலையில் அவர் கூறிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை கயாடு லோஹரின் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by kayadulohar (@kayadu_lohar_official)

நடிகை கயாடு லோஹர் அதர்வாவின் இதயம் முரளி படத்தைத் தொடர்ந்து, மேலும் ஒரு தமிழ் படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். அது வேறு எந்த படமும் இல்லை, நடிகர் சிலம்பரசனின் STR 49 திரைப்படத்தில்தான். இந்த படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக இவர் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் மேலும் நடிகர் சந்தானமும் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். நடிகை கயாடு லோஹர் டான் பிக்ச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இதயம் முரளி மற்றும் STR 49 என இரு படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பயம் காட்டிய படோனி.. கடைசியில் பஞ்சாபிடம் சரணடைந்த லக்னோ..!
பயம் காட்டிய படோனி.. கடைசியில் பஞ்சாபிடம் சரணடைந்த லக்னோ..!...
பாகிஸ்தானை சேர்ந்தவர்களை நிகழ்ச்சிகளுக்கு அழைக்க கூடாது - NBDA!
பாகிஸ்தானை சேர்ந்தவர்களை நிகழ்ச்சிகளுக்கு அழைக்க கூடாது - NBDA!...
உங்கள் ஆதார் கார்டை வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா?
உங்கள் ஆதார் கார்டை வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா?...
25 நாட்களில் கோடிக்கணக்கில் வசூலைக் குவித்த குட் பேட் அக்லி!
25 நாட்களில் கோடிக்கணக்கில் வசூலைக் குவித்த குட் பேட் அக்லி!...
பறவை தண்ணீரில் நடக்கிறதா..? மில்லியன் மக்களைக் குழப்பிய வீடியோ!
பறவை தண்ணீரில் நடக்கிறதா..? மில்லியன் மக்களைக் குழப்பிய வீடியோ!...
அந்த காட்சியில் நானும் கார்த்தியும் பட்டினியா இருந்தோம்-பிரியாமணி
அந்த காட்சியில் நானும் கார்த்தியும் பட்டினியா இருந்தோம்-பிரியாமணி...
சிம்புவின் 'STR49' படப்பிடிப்பு பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு!
சிம்புவின் 'STR49' படப்பிடிப்பு பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு!...
பருந்துக்கு பாஸ்போர்ட் கொடுத்த நாடு எது தெரியுமா?
பருந்துக்கு பாஸ்போர்ட் கொடுத்த நாடு எது தெரியுமா?...
அந்த டான்ஸ் வைத்ததற்குக் காரணம் இதுதான்- கார்த்திக் சுப்பராஜ்!
அந்த டான்ஸ் வைத்ததற்குக் காரணம் இதுதான்- கார்த்திக் சுப்பராஜ்!...
ரொம்ப நல்ல பொண்ணுங்க நானு.. மேடையில் பேசிய கயாடு லோஹர்!
ரொம்ப நல்ல பொண்ணுங்க நானு.. மேடையில் பேசிய கயாடு லோஹர்!...
ரன்பீர் - சாய் பல்லவியின் ராமாயணா படத்தை புகழ்ந்த பிரபலம்!
ரன்பீர் - சாய் பல்லவியின் ராமாயணா படத்தை புகழ்ந்த பிரபலம்!...