அந்த உடை நல்லாதான் இருக்கும்.. ஆனால் எனக்கு பிடிக்காது – நடிகை தேவயானி ஓபன் டாக்
Devayani About Modern Dress: சுமார் 100 படங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, மலையாளம் என நடித்தார் நடிகை தேவயானி. இந்த நிலையில் கடந்த 2001-ம் ஆண்டு இயக்குநர் ராஜ்குமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நடிகை தேவயானி. இந்த திருமணத்திற்கு தேவயானியின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளாத போதும் இயக்குநர் ராஜ்குமாரனை திருமணம் செய்துக்கொண்டார் தேவயானி. இவர்கள் இருவருக்கும் இனியா மற்றும் பிரியங்கா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

மாடர்ன் உடை அணிவது குறித்து முன்னதாக பேட்டி ஒன்றில் நடிகை தேவயானி (Devayani) பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் கடந்த 1995-ம் ஆண்டு வெளியான படம் தொட்டா சிணுங்கி. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார் தேவயானி. அந்தப் படத்தை தொடர்ந்து கடந்த 1996-ம் ஆண்டு வெளியானது காதல் கோட்டை (Kadhal Kottai) படம். இந்தப் படம் தேவயானியை தமிழ் ரசிகர்களிடையே நன்கு பரிச்சையமானவராக மாற்றியது. நடிகர் அஜித் குமார் இந்தப் படத்தில் நாயகனாக நடித்த தேவயானி நாயகியாக நடித்து இருந்தார். நாயகனும் நாயகியும் பார்க்கமலே காதல் செய்வார்கள். இவர்கள் இருவரும் க்ளைமேக்ஸில் இணையும் காட்சிக்கு தியேட்டரே ஆர்பரித்தது. இந்தப் படத்தை தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.
லாங்க் டிஸ்டன்ஸ் ரிலேஷன்பிப் அப்போ எப்படி இருக்கும் என்றும் இந்தப் படம் அற்புதமாக காட்டியிருக்கும். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் 2000 ஆண்டு வரை பெரிய அளவில் படங்கள் நடிகை தேவயானிக்கு வெற்றியடையவில்லை என்றே கூறலாம். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என நடித்து வந்த தேவயானி 2000-ம் ஆண்டிற்கு பிறகு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
தமிழில் தொடர்ந்து முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர்கள் கமல் ஹாசன், சரத்குமார், சத்யராஜ், பிரசாந்த், விஜய், அஜித், விக்ரம் என பலருக்கும் நாயகியாக நடித்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் காதல் கோட்டை, சூர்யவம்சம், பாரதி ஆகிய படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசு விருதை வென்றார் தேவயானி.
இந்த நிலையில் நடிகை தேவயானி மார்டன் உடை அணிவது குறித்து பேசியுள்ளார். அதில் நடிகை தேவயானி பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது அவர் மாடர்ன் உடை அணிந்த பழைய புகைப்படங்களை காட்டி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய தேவயானி தான் நடித்த தொட்டாசினிங்கி என்ற முதல் படத்தில் நடித்த போது எடுத்தப் புகைப்படங்கள் இது.
மாடர்ன் உடை என்பது நல்லா தான் இருக்கும். ஆனால் எனக்கு அந்த உடை மீது பெரிய அளவில் ஈர்ப்பு இல்லை. மேலும் அது தனக்கு சௌகரியமாக இல்லை என்பதால் அது தனக்கு அணிவதில் விருப்பம் இல்லை என்றும் அந்த பேட்டியில் தேவயானி தெரிவித்தது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தொடர்ந்து புடவையில் காட்சியளிக்கும் நடிகை தேவயானி அவரது கோலங்கள் சீரியலில் அவர் அணிந்த புடவைகள் என்று துணிக் கடையில் விற்பனை செய்தனர் எனபதும் குறிப்பிடதக்கது.