STR 49 : மீண்டும் இணைந்த சிம்பு – சந்தானம் காமினேஷன்.. ‘STR 49’ படப்பிடிப்பு பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு!
STR 49 Shooting Pooja Video : பார்க்கிங் திரைப்பட இயக்குநரின் இயக்கத்தில் புதிதாக உருவாக்கவுள்ள படம் STR49. நடிகர் சிலம்பரசன் மற்றும் சந்தானத்தின் கூட்டணியில் உருவாக்கவுள்ள இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் உருவாக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜைகள் கடந்த 2025, மே 3ம் தேதியில் நடந்த நிலையில், இது தொடர்பான பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

கோலிவுட் சினிமாவில் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி எதிர்பாராத வரவேற்பை பெற்ற படம் பார்க்கிங் (Parking). இந்த படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Ramkumar Balakrishnan) இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் முன்னணி நடிகராக நடித்திருந்தார். இந்த படமானது வெளியாகி எதிர்பாராத வரவேற்பைப் பெற்று நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் புதியதாக உருவாக்கவுள்ள படம் STR 49. இந்த படத்தில் கோலிவுட் முன்னணி நட்சத்திரம் சிலம்பரசன் (Silambarasan) நாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அவருக்கு அடுத்த முக்கிய ரோலில் நடிகர் சந்தானம் நடிக்கவுள்ளார். நடிகர் சந்தானம் (Santhanam) பல ஆண்டுகளாகத் தனியாகப் படங்களில் ஹீரோவாக நடித்தது வந்த நிலையில், நடிகர் சிம்புவுடன் இந்த படத்தில் துணை நடிகராக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவரின் கூட்டணி பல வருடங்களுக்குப் பின் மீண்டும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக கயாடு லோஹர் (Kayadu Lohar) நடிக்கவுள்ளார். டிராகன் படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜை கடந்த 2025, மே 3ம் தேதியில் சென்னையில் சிறப்பாக நடைபெற்றிருந்தது. இந்நிலையில் அந்த பூஜையின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
டான் பிக்ச்சர்ஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
A glimpse into what happened at the #STR49 poojai❤️
The union of all our favorite names, at one place
🔗:-https://t.co/HBpEbLjnoS@SilambarasanTR_ @ImRamkumar_B @iamsanthanam @AakashBaskaran @SaiAbhyankkar @11Lohar @kabilanchelliah @philoedit @PraveenRaja_Off @manojdft… pic.twitter.com/f8gI42tr02
— DawnPictures (@DawnPicturesOff) May 4, 2025
நடிகர் சிலம்பரசனின் இந்த படத்தை டான் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு, சந்தானம் மற்றும் கயாடு லோஹரின் கூட்டணியில் உருவாக்கவுள்ள இந்த படத்திற்கு, இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார்.
இவை லோகேஷ் கனகராஜின் பென்ஸ், சூர்யாவின் 45வது திரைப்படம் மற்றும் பிரதீப் ரங்கநாதனின் 4வது படம் என அடுத்தடுத்தபடங்களில் இசையமைப்பாளராக இசையமைத்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிலம்பரசனின் STR 49 படத்திலும் இசையமைப்பாளராக இசையமைக்கவுள்ளார்.
இந்த படத்திற்காக இதுவரை 3 பாடல்களை இசையமைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. சிம்புவின் STR 49 படத்தின் ஷூட்டிங் வரும் 2025, ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து வரும் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.