Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vishnu Vishal: திருமண நாளில் கிஃப்ட்.. மீண்டும் தந்தையான விஷ்ணு விஷால்!

Actor Vishnu Vishal Has A Second child : தமிழில் பிரபல முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் ஆரம்பத்தில் கிரிக்கெட் வீரராகப் பயிற்சி எடுத்து வந்தார், பின் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் தனது 4வது திருமண நாளில் பரிசாக இரண்டாவது குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார். இவருக்கு ஏற்கனவே ஒரு மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Vishnu Vishal: திருமண நாளில் கிஃப்ட்.. மீண்டும் தந்தையான விஷ்ணு விஷால்!
விஷ்ணு விஷால் மற்றும் ஜவாலா கட்டாImage Source: Instagram
barath-murugan
Barath Murugan | Published: 22 Apr 2025 13:43 PM

கோலிவுட் சினிமாவில் நடித்த முதல் படத்திலே மிகவும் பிரபலமானவர் நடிகர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal) . இவர் தமிழில் ஹீரோவாக அறிமுகமான படம் வெண்ணிலா கபடிக்குழு (Vennila Kabadi Kuzhu). கடந்த 2009ம் ஆண்டு வெளியான கபடி விளையாட்டு சார்ந்த, காதல் கதைக்களத்துடன் இந்த திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்தின் மூலம் அவர் மிகவும் பிரபலமானார். மேலும் அடுத்தடுத்த தமிழ்ப் படங்களில் நடித்து வந்தார். மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக லால் சலாம் (Lal Salam) திரைப்படம் வெளியாகியிருந்தது. இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது அந்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. இவர் இந்த படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் “இரண்டாம் வானம்” என்ற படத்தில் நடிகை மமிதா பைஜுவுடன் இணைந்து நடித்து வருகிறார். நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2010ம் ஆண்டு ரஜினி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. பின் இவர்கள் இருவரும் மனக் கசப்பின் காரணமாக கடந்த 2018ம் ஆண்டு விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர். பின் நடிகர் விஷ்ணு விஷால் பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா என்பவரை  கடந்த 2021ம் ஆண்டு  திருமணம் செய்தார்.

இந்நிலையில், இந்த தம்பதிக்கு 4வது திருமண நாளில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான விஷயத்தை நடிகர் விஷ்ணு விஷால் தனது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.

நடிகர் விஷ்ணு விஷாலின் இன்ஸ்ட்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Vishnu Vishal (@thevishnuvishal)

இந்த பதிவில் நடிகர் விஷ்ணு விஷால் ” எனக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது, எனது மகன் ஆர்யன் இப்போது அண்ணாவாகிவிட்டான். அதுவும் எங்களின் 4வது திருமண நாளில் எல்லாம் வல்ல இறைவன் எங்களுக்காகக் கொடுத்த பரிசை நாங்கள் வரவேற்கிறோம். எங்களின் திருமணநாளிலே இறைவன் எங்களுக்கு இப்படி ஒரு பரிசை கொடுத்துள்ளார். எங்களுக்கு ரசிகர்களாகிய உங்களின் அன்பும் ஆசீர்வாதமும் நிச்சயமாக வேண்டும் என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷாலின் புதிய திரைப்படம் :

நடிகர் விஷ்ணு விஷால் லால் சலாம் படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் ராம் குமாரின் இயக்கத்தில் உருவாகிவரும் இரண்டாம் வானம் என்ற படத்தில் கமிட்டானார். இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக, மலையாள புகழ் பெற்ற நடிகை மமிதா பைஜூ நடித்த வருகிறார். இந்த படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து இவர் மோகன்தாஸ் மற்றும் ஆர்யன் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வயிறு உப்புசத்தால் பிரச்னைகளை எதிர்கொள்கிறீர்களா?
வயிறு உப்புசத்தால் பிரச்னைகளை எதிர்கொள்கிறீர்களா?...
திருமணம் நின்றுபோனதற்குக் காரணம் இதுதான்.. நடிகை த்ரிஷா !
திருமணம் நின்றுபோனதற்குக் காரணம் இதுதான்.. நடிகை த்ரிஷா !...
Amazon Great Summer Sale 2025 : இயர்பட்ஸ் வாங்கபோறீங்களா?
Amazon Great Summer Sale 2025 : இயர்பட்ஸ் வாங்கபோறீங்களா?...
மக்கள் மத்தியில் திமுகவிற்கு வெற்றி முகம்.. முதல்வர் பெருமிதம்!
மக்கள் மத்தியில் திமுகவிற்கு வெற்றி முகம்.. முதல்வர் பெருமிதம்!...
மே 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா
மே 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா...
ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெப்ப அலை !
ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெப்ப அலை !...
பணி அழுத்தம்... - முதுகு தண்டை பாதிக்கும் காரணங்கள்!
பணி அழுத்தம்... - முதுகு தண்டை பாதிக்கும் காரணங்கள்!...
2027 உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் விளையாடுவார்களா? கம்பீர் பதில்
2027 உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் விளையாடுவார்களா? கம்பீர் பதில்...
திருமணத்தில் ரூ.21 கோடி பரிசாக வழங்கிய மணமகள் வீட்டார்!
திருமணத்தில் ரூ.21 கோடி பரிசாக வழங்கிய மணமகள் வீட்டார்!...
பேடிஎம் Q4 2025 வருவாய்: ரூ.81 கோடி லாபம்.. வெளியான விவரம்!
பேடிஎம் Q4 2025 வருவாய்: ரூ.81 கோடி லாபம்.. வெளியான விவரம்!...
ஓசூர் கோயில் பிரசாதத்தில் பாம்பு.. பக்தர்கள் அதிர்ச்சி..!
ஓசூர் கோயில் பிரசாதத்தில் பாம்பு.. பக்தர்கள் அதிர்ச்சி..!...