Thalapathy Vijay : மீண்டும் போலீஸ் அதிகாரியாக விஜய்.. இணையத்தில் லீக்கான ‘ஜன நாயகன்’ ஷூட்டிங் புகைப்படம்!
Vijays Jana Nayagan Shooting Photo Leak : தமிழ் சினிமாவில் விஜய்யின் நடிப்பில் இறுதியாக உருவாகிவரும் படம் ஜன நாயகன். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் 3 வேடத்தில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதைத் தொடர்ந்து நடிகர் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஷூட்டிங் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய்க்கு (Thalapathy Vijay) ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கோட் (GOAT). இதை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இந்த படமும் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்று சுமார் ரூ. 450 கொடிகளை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து விஜய்யின் கடைசி படமாக உருவாகி வரும் படம் ஜன நாயகன் (Jana Nayagan). தளபதி விஜய்யின் இந்த படத்தை இயக்குநர் ஹெச். வினோத் (H. Vinoth) இயக்கி வருகிறார். இவர் இறுதியாக அஜித்தின் துணிவு படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து விஜய்யின் கடைசி திரைப்படமான ஜன நாயகன் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் 3 வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அவ்வப்போது ஷூட்டிங் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதைப்போல் நடிகர் விஜய் ஜன நாயகன் படத்தில் போலீஸ் அதிகாரி உடையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
நடிகர் விஜய் இறுதியாகத் தெறி திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அதன் பிறகு சுமார் 9 வருடங்களுக்குப் பின் ஜன நாயகன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமும் விஜய்யின் அதிரடி ஆக்ஷ்ன் திரைப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இணையத்தில் வைரலாகும் விஜய்யின் புகைப்படம் ;
#JanaNayagan Shooting Spot Pic Leaked 😱😍🥵🔥💥#JanaNayagan #ThalapathyVijay𓃵 @actorvijay pic.twitter.com/GoXBxc4jI1
— ABINASH VIJAY (@AbinashVijay46) May 11, 2025
நடிகர் விஜய்யின் 69வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்தது வருகிறார். இவர்களுடன் நடிகர்கள் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நரேன், வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹாசன், மமிதா பைஜூ மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்தது வருகிறார்கள். நடிகர் விஜய்யின் கடைசி படம் என்பதால் கேமியோ ரோலில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஜன நாயகன் படத்தினை கேவிஎன் ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இவர் இறுதியாக விஜய்யின் லியோ படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில், அதைத் தொடர்ந்த விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்திலும் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் சிறப்புப் பாடலை மலையாள புகழ் பெற்ற ராப்பர் ஹனுமன்கைண்ட் மற்றும் அசல் கோளாறு இணைந்து பாடவுள்ளனர்.
நடிகர் விஜய்யின் இந்த ஜன நாயகன் திரைப்படத்தின் ஷூட்டிங் இந்த 2025, மே மாத்திற்குள் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இதை தொடர்ந்து இந்த படம் வரும் 2026 பொங்கல் பண்டியை முன்னிட்டு ஜனவரி 09ம் தேதியில் திரைப்படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. நடிகர் விஜய்யின் இறுதி படம் என்பதால் நிச்சயமாக இந்த படமானது சுமார் ரூ. 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.