DD Next Level Review : சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

DD Next Level Movie X Review : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருந்து, தற்போது சினிமாவில் ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம். இவரின் முன்னணி நடிப்பில் இன்று 2025, மே 16ம் தேதியில் திரையரங்குகளில் வெளியான படம் டிடி நெக்ஸ்ட் லெவல். ஹாரர் கலந்த நகைச்சுவை படமான, இந்த திரைப்படத்தின் ட்விட்டர் ரிவ்யூ பற்றிப் பார்க்கலாம்.

DD Next Level Review : சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் எப்படி இருக்கு?  விமர்சனம் இதோ!

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல்

Updated On: 

16 May 2025 10:52 AM

கோலிவுட் சினிமாவில் பிரபல காமெடியனாக இருந்து, ஹீரோவாக படங்களில் நடித்து வருபவர் சந்தானம் (santhanam). இவரின் நடிப்பில் முற்றிலும் நகைச்சுவை கலந்த ஹாரர் படமாக வெளியாகியுள்ள படம் டிடி நெக்ஸ்ட் லெவல் (DD Next Level). இந்த படத்தைப் பிரபல இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் (S. Prem Anand)  இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்யா (Arya) இந்த படத்தைத் தயாரித்திருக்கிறார். இந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படமானது, தில்லுக்கு துட்டு என்ற படத் தொகுப்பில் 4வது பாகமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சந்தனத்துடன் செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், கீதிகா திவாரி, நிழல்கள் ரவி மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படமானது இன்று 2025, மே 16ம் தேதியில், முதல் காட்சிகள் காலை 8:30 மணியளவில் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. படத்தைப் பார்த்த பலரும் படம் முழுவதும் ஒரு பேமிலி என்டேர்டைமென்ட்டாக இருக்கு மற்றும் படம் முக்குவதும் நகைச்சுவை இருக்கிறது என்று கூறி வருகின்றனர். இது குறித்தான டுவிட்டர் ரிவ்யூ (Twitter Review) பற்றிப் பார்க்கலாம்.

டிடி நெக்ஸ்ட் லெவல் படம் எப்படி இருக்கு ?

நடிகர் சந்தானத்தின் இந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் கதைக்களமானது முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறதாம். இந்த படத்தில் நடிகர் சந்தானம் படங்களை ரிவ்யூ செய்யும் யூடியூபராக இருக்கிறார். மேலும் நடிகர் சந்தனத்துடன் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படமானது இடத்தின் இறுதி வரை சலிக்காமல் நன்றாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

கிட்டத்தட்ட டிடி நெக்ஸ்ட் லெவல் படமானது, சந்தானத்தின் படம் எவ்வாறு முழுமையான காமெடியுடன் இருக்குமோ அவ்வாறே உள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் அஜித்தின் படங்களின் ரெபரென்ஸ் அதிகம் இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவலின் டுவிட்டர் விமர்சனங்கள் :

சந்தானத்தின் இந்த படம் மக்களைச் சிரிக்க வைத்ததா?

இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், நடிகர் சந்தானத்தின் கதாபாத்திரம் மிகவும் அருமையாக இருக்கிறது. இதில் நடிகர் சந்தானம் படங்களை விமர்சனம் செய்யும் ஊடகவாசியாக இருக்கிறார். இவர் இந்த படங்களை விமர்சனங்கள் செய்து அதன் மூலம் இவர் பிரச்சனையில் சிக்குகிறார் என்பதுதான் இந்த படத்தின் முக்கிய சாராம்சமாக இருக்கிறது.

இந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் பேயாக நடித்துள்ளார். இந்த படத்தில் குறிப்பாக காமெடிக்கு பஞ்சம் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படமானது குடும்பத்துடன் பார்க்கும் ஒரு அருமையான நகைச்சுவை கலந்த ஹாரர் படமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்குத் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படமானது எதிர்பாராத காமெடி கதைக்களத்துடன் மிகவும் அருமையாக இருக்கிறது என்றே கூறலாம்.