சூரியின் மாமன் படக்குழுவினரின் அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு

Maman Movie: நடிகர் சூரி நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகவும் பிடித்த ஜானரில் நடித்துள்ளார். தொடர்ந்து இறுக்கமான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் சூரி தற்போது முழுக்க முழுக்க காமெடி செண்டிமெண்டை மையமாக வைத்து உருவான இந்த மாமன் படத்தில் தற்போது நடித்துள்ளார்.

சூரியின் மாமன் படக்குழுவினரின் அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு

மாமன்

Published: 

15 May 2025 22:37 PM

நடிகர் சூரி (Actor Soori) நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்தே இறுக்கமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகம் ஆகி பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் சூரி. வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் இவரது காமெடி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடிக்க ஆரம்பித்து பிறகு சூரி காமெடியனாக நடிக்க வேண்டும் என்று படக்குழுவினர் கால் ஷீட்டிற்காக காத்திருந்த நிலையில் தமிழ் சினிமாவில் இருந்தது. இப்படி காமெடியனாக ரசிகர்களின் மனதில் பட்டா போட்டு இருந்த நடிகர் சூரி நாயகனாக மாற்றினார் இயக்குநர் வெற்றிமாறன். ஆம் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் தான் நடிகர் சூரி முதன்முறையாக நாயகனாக அறிகுமக் ஆனார்.

அந்தப் படத்தை தொடர்ந்து இவர் கொட்டுக்காளி, கருடன் மற்றும் விடுதலை பாகம் 2 ஆகிய படங்களிலும் நாயகனாக நடித்தார். இந்த மூன்று படங்களும் விடுதலை படத்தைப் போல மிகவும் இறுக்கமான சூழலில் இருக்கும். காமெடியனாக பார்த்த சூரி சீர்யசான கதாப்பாத்திர்த்திலும் ரசிகர்கள் வரவேற்றனர்.

இந்த நிலையில் நடிகர் சூரி மிகவும் ஜாலியான ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று தானே ஒரு கதையை எழுதியுள்ளார். அந்தக் கதையை இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் தான் இயக்கியுள்ளார். மாமன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இது முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் பட விழாவில் பேசிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சூரி மாதிரி ஒரு நடிகருடன் இணைந்து நடித்ததில் தனக்கு மிகவும் பெருமை என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் படம் நாளை 16-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவளுடன் காத்திருக்கின்றனர்.

படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

விடுமுறை நாட்களை டார்கெட்டாக கொண்டு வெளியாகும் இந்தப் படம் நிச்சயமாக வெற்றியடையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாப்பாத்திர அறிமுக வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகின்றது.