Hit 3: ரசிகர்களை கவர்ந்த ஹிட் 3 படத்தின் 2வது பாடல்!
Hit 3 Movie Second Single Update : டோலிவுட் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் நானி. இவரின் முன்னணி நடிப்பில் தற்போது ரிலீசிற்கு தயாராகியுள்ள திரைப்படம் ஹிட் 3. இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திலிருந்து, இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
பிரபல தெலுங்கு சைலேஷ் கொலானு (Sailesh Kolanu) இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஹிட் 3 (Hit 3). இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நானி (Nani) கதாநாயகனாக நடித்துள்ளார். இவரின் முன்னணி ஏற்கனவே 2 பாகங்கள் வெளியாகியுள்ளது. மார்வெல் திரைப்பட தொகுப்பு போல தற்போது ஹிட் 3 திரைப்படமானது உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாக, கேஜிஎஃப் பிரபல நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி (Srinidhi Shetty) நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர்கள் சூர்யா ஸ்ரீனிவாஸ், ரமேஷ், மகந்தி ஸ்ரீநாத், பிரம்மஜி, ரவி மரியா, ஆதர்ஷ் பாலகிருஷ்ணா மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தை வால் போஸ்டர் சினிமா மற்றும் யூனானிமஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் மிக்கி ஜே. மேயர் இசையமைத்துள்ளார்.
இவரின் இசையமைப்பில் சமீபத்தில் முதல் பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்தது. தற்போது அதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலானது தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படமானது வரும் 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியில்தான் நடிகர் சூர்யாவின், ரெட்ரோ திரைப்படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Video Credits : Saregama Telugu.