Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒரே நாளில் மோதும் சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் மற்றும் மிர்ச்சி சிவாவின் சுமோ படங்கள்… 

This Week Theatre Release: இந்த வாரம் தமிழ் சினிமா புதிய வரவை திரையரங்குகளில் எதிர் நோக்கி காத்திருக்கின்றது. நடிகர் அஜித் குமார் நடிப்பில் முன்னதாக குட் பேட் அக்லி படம் வெளியானதால் கடந்த இரண்டு வாரங்களாக தமிழ் சினிமாவில் வேறு எந்தப் படங்களும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இந்த வாரம் கேங்கர்ஸ் மற்றும் சுமோ என இரண்டு படங்கள் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் மோதும் சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் மற்றும் மிர்ச்சி சிவாவின் சுமோ படங்கள்… 
கேங்கர்ஸ், சுமோImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Apr 2025 18:42 PM

சுந்தர் சி (Sundar C) 1995-ம் ஆண்டு வெளியான முறைமாமன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர்கள் ஜெயராம், குஷ்பு, கவுண்டமணி மற்றும் மனோரமா நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் காமெடியை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், அன்பே சிவம் என பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். தொடர்ந்து இயக்குநராக இருந்த சுந்தர் சி தற்போது நடிகராகவும் கோலிவுட் சினிமாவில் வலம் வருகிறார். முன்னதாக கோலிவுட் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்த சுந்தர் சி இயக்குநர் சூரஜ் இயக்கத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான தலைநகரம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார்.

அந்தப் படத்தை தொடர்ந்து தான் இயக்கும் படங்களில் நாயகனாகவும், மற்ற இயக்குநர்களின் படங்களில் நாயகனாகவும் தற்போது நடித்து வருகிறார். அரண்மனை படம் 2014-ம் ஆண்டு முதல் பாகம் வெளியானதில் இருந்து தொடர்ந்து மூன்று பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதே சாமி – பேய் கதையை மையமாக வைத்து மூன்று பாகங்களிலும் வெவ்வேறு நடிகர்களை வைத்து வெளியான இந்தப் படம் கோலிவுட் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி தற்போது கேங்கர்ஸ் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார்.

இதில் சுந்தர் சி உடன் இணைந்து நடிகர்கள் கேத்ரின் தெரசா, வடிவேலு, வாணி போஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் படம் ஏப்ரல் மாதம் 24-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அகில உலக சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் மிர்ச்சி சிவா கடந்த 2007-ம் ஆண்டு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். இந்தைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான சரோஜா, தமிழ் படம், தில்லு முல்லு, கலகலப்பு, சொன்னா புரியாது, வணக்கம் சென்னை என தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சூதுகவ்வும் 2 படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் மிர்ச்சி சிவா தற்போது இயக்குநர் ராம் உடன் பறந்து போ படத்திற்காக கூட்டணி சேர்ந்துள்ளார். இந்த நிலையில் நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் முன்னதாக உருவாகி வெளியாகாமல் இருந்த சுமோ படம் தற்போது வெளியீட்டிற்காக காத்திருக்கின்றது.

இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து நடிகர்கள் பிரியா ஆனந்த், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் படம் 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரோலக்ஸ் ரோலில் நடிப்பதற்குக் காரணம் அந்த வெறிதான்- சூர்யா!
ரோலக்ஸ் ரோலில் நடிப்பதற்குக் காரணம் அந்த வெறிதான்- சூர்யா!...
பஹல்காம் தாக்குதல் சம்பவம் - மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவு
பஹல்காம் தாக்குதல் சம்பவம் - மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவு...
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் எப்போது தொடங்கும்?
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் எப்போது தொடங்கும்?...
சிம்புவின் STR 49 படத்தில் சந்தானம் காமெடியனா? இயக்குநர் விளக்கம்
சிம்புவின் STR 49 படத்தில் சந்தானம் காமெடியனா? இயக்குநர் விளக்கம்...
தவெக தொண்டரின் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர், நடந்தது என்ன?
தவெக தொண்டரின் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர், நடந்தது என்ன?...
அமேசானில் அதிரடி தள்ளுபடி விலையில் சிங்கிள் டோர் ஃபிரிட்ஜ்!
அமேசானில் அதிரடி தள்ளுபடி விலையில் சிங்கிள் டோர் ஃபிரிட்ஜ்!...
போட்ல செல்ல ஆசையா? அப்போ கன்னியாகுமரிக்கு போங்க..!
போட்ல செல்ல ஆசையா? அப்போ கன்னியாகுமரிக்கு போங்க..!...
அடுத்தடுத்து வந்த இ-மெயில்! முகமது ஷமிக்கு வந்த கொலை மிரட்டல்..!
அடுத்தடுத்து வந்த இ-மெயில்! முகமது ஷமிக்கு வந்த கொலை மிரட்டல்..!...
கொடைக்கானலில் விஜய்யின் 'ஜன நாயகன்' ஷூட்டிங் ஓவர்!
கொடைக்கானலில் விஜய்யின் 'ஜன நாயகன்' ஷூட்டிங் ஓவர்!...
திண்டுக்கல்-நாகர்கோவில் கோடை சிறப்பு ரயில்: அட்டவணை விவரம் இதோ!
திண்டுக்கல்-நாகர்கோவில் கோடை சிறப்பு ரயில்: அட்டவணை விவரம் இதோ!...
பாகிஸ்தானியர்களால் ஹேக் செய்யப்பட்ட இந்திய பாதுகாப்பு தளங்கள்
பாகிஸ்தானியர்களால் ஹேக் செய்யப்பட்ட இந்திய பாதுகாப்பு தளங்கள்...