Kamal Haasan: கமல் ஐடியா.. மணிரத்னம் மேஜிக்.. தக் லைஃப் உருவான கதை!
Kamal Haasan About Mani Ratnam : தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர் கமல் ஹாசன். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் என்றால் அது இந்தியன் 2. இந்த படமானது எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில், அதையடுத்து மணிரத்னத்தின் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதைக்களம் உருவாக்கியது குறித்து அவர் பேசியுள்ளார்.

கோலிவுட் சினிமாவையும் கடந்து பான் இந்தியா வரை மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் மணிரத்னம் (Mani Ratnam). இவரின் இயக்கத்தில் இதுவரை வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. மேலும் இவரின் இயக்கத்தில் இறுதியாகப் பொன்னியின் செல்வன் 2 (Ponniyin Selvan 2) படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து இவரின் இயக்கத்திலும், கமல் ஹாசன் (Kamal Haasan) மற்றும் சிலம்பரசனின் (Silambarasan) முன்னணி நடிப்பிலும் உருவாகியுள்ள படம் தக் லைஃப் (Thug Life). இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன், திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் கமல் ஹாசனுடன் நடிகைகள் அபிராமி மற்றும் திரிஷா (Trisha) இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகை திரிஷா நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. கமல் மற்றும் சிம்புவின் இந்த படமானது வரும் 2025, ஜூன் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இந்த படத்தினை இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்தாலும், நடிகர் கமல் ஹாசன் கதையை எழுதியுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் கதைக்களம் முழுக்க கமல் ஹாசனின் எழுத்தில் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு நடிகர் கமல் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவர் மணிரத்னம் மற்றும் என்னுடைய எழுத்து இணைந்துதான் படம் உருவாகியுள்ளதாகப் பேசியுள்ளார். மேலும் அவர் கூறியது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.
தக் லைஃப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :
The Thug walks in, the city celebrates the #ThuglifeTrailer launch#ThuglifeTrailer
➡https://t.co/Xy1tm87OuO#ThuglifeAudioLaunch from May 24#Thuglife #ThuglifeFromJune5 #KamalHaasan #SilambarasanTRA #ManiRatnam Film
An @arrahman Musical@ikamalhaasan @SilambarasanTR_… pic.twitter.com/GtSDT0AU5v— Raaj Kamal Films International (@RKFI) May 22, 2025
தக் லைஃப் படத்தின் கதைக்களம் பற்றி நடிகர் கமல் ஹாசன் பேச்சு :
சமீபத்தில் படக்குழுவுடன் சந்தித்த நேர்காணல் ஒன்றில் , நடிகர் கமல் ஹாசன், “இந்த படத்தின் கதையை நான் முன்னாடியே பண்ணனும் என்று நினைத்தேன் , அதை மணிரத்னத்திடம் காட்டினேன். அந்த கதையை அவரும் வாங்கி படித்தார். பின் மறுநாளே அவர் இந்த படத்தை பண்ணலாம் என்று என்னிடம் கூறினார்” என்கிறார் கமல் ஹாசன். அதற்குத் தொகுப்பாளர் படத்தின் ஐடியா முழுக்க உங்களுடையதுதானே ? என்று கேட்டார்.
அதற்குக் கமல் ஹாசன் “இல்லை, நான் இந்த படம் வெளியானதற்குப் பின் எனது ஸ்கிரிப்ட் பேப்பரை காட்டுகிறேன் அதில் உள்ளபடியே படத்தில் அனைத்து காட்சிகளும் இடம் பெற்றுள்ளதா என்று நீங்களே பார்க்கலாம். அதை பார்த்தால் நீங்களே அது வேறமாதிரி இருக்கு, படம் வேற மாதிரி இருக்கு என்று கூறுவீர்கள். அதுதான் மணிரத்னம் , கமல் ஹாசன் படத்தின் கூட்டணி” என்று நடிகர் கமல் ஹாசன் ஓபனாக பேசியிருந்தார்.