Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தனுஷ் பட இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி மறைவு… அதிர்ச்சியில் திரையுலகினர்

Actor and Director SS Stanley: பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி உடல் நலக்குறைவு காரணமாக தனது 57-வது வயதில் இன்று காலை காலமானார். இவர் நடிகர் ஸ்ரீகாந்தின் நடிப்பில் ஏப்ரல் மாதத்தில் படத்தையும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையில் இருந்து சரவணன் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.

தனுஷ் பட இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி மறைவு… அதிர்ச்சியில் திரையுலகினர்
இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Apr 2025 09:00 AM

பிரபல இயக்குநரும் நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி (SS Stanley) இன்று காலை உடல் நலக்குறைவு காலமானார். அவரது இறப்பு திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா நடிப்பில் வெளியான ஏப்ரல் மாதத்தில் (April Mathathil) படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் எஸ்.எஸ்.ஸ்டான்லி. கல்லூரியில் படிக்கும் நண்பர்களை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பாக இளைஞர்கள் இந்தப் படத்தை கொண்டாடினர். இந்தப் படத்தில் தேவன், சிவா, இயக்குநர் வெங்கட் பிரபு, அஞ்சு மகேந்திரா, காயத்ரி ஜெயராம், கருணாஸ் என பலர் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைபாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்றும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷை வைத்து புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற படத்தை இயக்கினார் இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி. ஊரில் துறுதுறு பையனாக வீட்டிற்கு பல பிரச்னைகளை கொண்டு வரும் இளைஞனாக நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் நடித்திருப்பார்.

வீட்டிற்கு அடங்காமல் ஊர் சுற்றும் தனுஷை அவரது பெற்றோர் வேலைக்காக வெளி நாட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். அங்கும் பிரச்னையில் சிக்கிக்கொள்ளும் தனுஷ் எப்படி அந்த பிரச்னைகளை கடந்து மீண்டும் நாடு திரும்புகிறார் என்பதை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கும். இந்தப் படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா என்பதால் தற்போதும் படத்தின் பாடல்களை ரசிகர்கள் முனுமுனுத்துக்கொண்டே உள்ளனர்.

இந்தப் படங்களை தொடர்ந்து எஸ்.எஸ்.ஸ்டான்லி இயக்கத்தில் மெர்குரி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை ஆகிய படங்களும் வெளியாகின. இந்தப் படங்களும் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. மேலும் எஸ்.எஸ்.ஸ்டான்லி படங்களை இயக்குவது மட்டும் இன்றி நடிக்கவும் செய்துள்ளார்.

இயக்குநர் ஞான. ராஜசேகரன் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான பெரியார் படத்தில் அறிஞர் அண்ணா கதாப்பாத்திரத்தில் எஸ்.எஸ்.ஸ்டான்லி நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ராவணன்,  விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை, விஜயின் சர்கார், யோகி பாபுவின் பொம்மை நாயகி என பல படங்களில் நடித்துள்ளார்.

இறுதியாக கடந்த 2024-ம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் 57 வயதான எஸ்.எஸ்.ஸ்டான்லி உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் உட்பட பலர் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்ற்னர்.

ஐசரி கே. கணேஷ் மகளின் திருமணம்.. ஒன்று திரண்ட கோலிவுட் பிரபலங்கள்
ஐசரி கே. கணேஷ் மகளின் திருமணம்.. ஒன்று திரண்ட கோலிவுட் பிரபலங்கள்...
பாகிஸ்தானுடன் எல்லை மோதல் தீவிரம்: வீரர் முரளி நாயக் வீர மரணம்!
பாகிஸ்தானுடன் எல்லை மோதல் தீவிரம்: வீரர் முரளி நாயக் வீர மரணம்!...
எல்லாமே கிடைக்கும்.. தனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!
எல்லாமே கிடைக்கும்.. தனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!...
ஏரிகளில் டன் கணக்கில் கொட்டப்படும் காய்கறிகள்: காரணம் என்ன?
ஏரிகளில் டன் கணக்கில் கொட்டப்படும் காய்கறிகள்: காரணம் என்ன?...
ரஜினியுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா.. என்ன படம் தெரியுமா?
ரஜினியுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா.. என்ன படம் தெரியுமா?...
1947 முதல் 2025 வரை.. இந்தியா பாகிஸ்தான் இடையே நீடிக்கும் போர்..
1947 முதல் 2025 வரை.. இந்தியா பாகிஸ்தான் இடையே நீடிக்கும் போர்.....
மீண்டும் குடிபோதையில் ரகளை செய்த ஜெயிலர் பட நடிகர் விநாயகன் கைது
மீண்டும் குடிபோதையில் ரகளை செய்த ஜெயிலர் பட நடிகர் விநாயகன் கைது...
ஏடிஎம் மையங்கள் 3 நாட்கள் செயல்படாதா? - அரசு சொன்ன முக்கிய தகவல்!
ஏடிஎம் மையங்கள் 3 நாட்கள் செயல்படாதா? - அரசு சொன்ன முக்கிய தகவல்!...
சென்னை: ராயப்பேட்டையில் பெண் ஐஏஎஸ் அதிகாரியை கடித்த நாய்..
சென்னை: ராயப்பேட்டையில் பெண் ஐஏஎஸ் அதிகாரியை கடித்த நாய்.....
திருவண்ணாமலை கிரிவலத்தில் நடந்த ஆச்சரியம் - நடிகை சாந்தினி!
திருவண்ணாமலை கிரிவலத்தில் நடந்த ஆச்சரியம் - நடிகை சாந்தினி!...
ராணுவத் தளபதிக்கு கூடுதல் அதிகாரம்.. மத்திய அரசு அதிரடி!
ராணுவத் தளபதிக்கு கூடுதல் அதிகாரம்.. மத்திய அரசு அதிரடி!...