கிட்னியை தொடர்ந்து கல்லீரல் திருட்டு.. அமைச்சர் போட்ட உத்தரவு..

Liver Theft in Namakkal: நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது கல்லீரல் திருடப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் வினித் IAS தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிட்னியை தொடர்ந்து கல்லீரல் திருட்டு.. அமைச்சர் போட்ட உத்தரவு..

கோப்பு புகைப்படம்

Published: 

18 Aug 2025 22:58 PM

கல்லீரல் திருட்டு, ஆகஸ்ட் 18, 2025: கிட்னி விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் வினித் IAS தலைமையிலான குழு மீண்டும் கல்லீரல் விவகாரத்திலும் விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் கிட்னி விவகாரமே பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அடுத்ததாக கல்லீரலும் சட்டவிரோதமாக விற்பனைக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் 37 வயது பெண் ஒருவர் விசைத்தறி வேலை செய்து வருகிறேன். வாங்கிய கடனை கட்ட முடியவில்லை என்று கூறி, இதற்காக சென்னையில் கிட்னியை விற்க முயற்சி செய்து கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலை ஏறப்பட்டுள்ளது.

கல்லீரல் திருட்டு:

அதே மருத்துவமனையில் வேறு ஒரு நோயாளிக்கு கல்லீரல் தேவை இருப்பதை அறிந்து கொண்ட புரோக்கர், தனக்கு செய்த மருத்துவ செலவுக்கான பணத்தை கேட்டு மிரட்டி கல்லீரலை விற்பனை செய்யுமாறு கூறியுள்ளனர். அந்த பெண்ணை மிரட்டி கிட்னிக்கு பதிலாக கல்லீரலைக் கொடுக்க சம்மதிக்க வைத்துள்ளார்.

அதற்காக, ரூ.8 லட்சம் வரை பேரம் பேசியதாகவும், பின்னர் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் மட்டுமே வழங்கியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.இதையடுத்து புரேக்கர்கள். இதனால் அவரும் கல்லீரலை கொடுக்க சம்மதித்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் கல்லீரலை விற்பனை செய்த பெண் தற்போது எந்த வேலையும் செய்ய முடியவில்லை என்றும் உடல் பலவீனமாகிவிட்டது என்று கூறி சமீபத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார்.

மேலும் படிக்க: துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன்.. அன்புமணி ராமதாஸ் ஆதரவு..

இது தொடர்பாக பேசிய பாதிக்கப்பட்ட பெண், “ கிட்னிக்கு பதிலாக என் கல்லீரல் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் பிறகு என்னால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இப்போது, என் 18 வயது மகன் தான் வேலைக்கு சென்று குடும்பத்துக்கான பொறுப்பை ஏற்கிறான். அது எனக்குப் பேரவேதனை. அதேசமயம், என்னை கவனிக்க 13 வயது மகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறாள். குழந்தையின் கல்வி பாதிக்கப்படுவது வேதனையாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: பெண்களிடையே காணப்படும் ஹீமோகுளோபின் குறைபாடு – அறிகுறிகள் என்ன?

விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க உத்தரவு:

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கிட்னி விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் வினித் IAS தலைமையிலான குழு மீண்டும் கல்லீரல் விவகாரத்திலும் விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.