பிஎம் கிசான் 22வது தவணை.. விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2,000 வரப்போவது எப்போது? | TV9 Tamil News

பிஎம் கிசான் 22வது தவணை.. விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2,000 வரப்போவது எப்போது?

Published: 

26 Feb 2026 11:34 AM

 IST

When Will Farmers Get 22nd Installment of PM Kisan | இந்தியாவில் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஏராளமான விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில், பிஎம் கிசான் 22வது தவணை எப்போது விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு அசத்தல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா. விவசாயிகளை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்கும் விதமாக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 

விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு அசத்தல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா. விவசாயிகளை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்கும் விதமாக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 

2 / 5

இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை முழுவதுமாக வழங்கப்படாமல் ஆண்டுக்கு மூன்று முறை வழங்கப்படுகிறது. அதாவது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 விகிதம் இந்த பிஎம் கிசான் நிதி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

3 / 5

இந்த திட்டத்தில் இதுவரை 21 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 19, 2025 அன்று கோயம்புத்தூரில் 21வது தவணையையை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். அப்போது 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி பணம் மொத்தமாக விடுவிக்கப்பட்டது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 

4 / 5

பிஎம் கிசான் திட்டத்தில் 21 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், 22வது தவணையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் 2026, மார்ச் மாதத்தில் 22வது தவணை பிஎம் கிசான் பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

5 / 5

இதன் காரணமாக 22வது தவணையை மிகுந்த ஆவலுடன் விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், விவசாயிகள் தங்களது 22வது தவணை பணத்தை பெறுவதற்கு கேஒய்சி மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. ஒருவேளை கேஒய்சி மேற்கொள்ளவில்லை என்றால் 22வது தவணை பணம் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us