குடியரசு தினத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் பங்குச்சந்தைக்கு விடுமுறை! | TV9 Tamil News

குடியரசு தினத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் பங்குச்சந்தைக்கு விடுமுறை!

Updated On: 

23 Jan 2026 13:48 PM

 IST

Three Days Holidays For Share Market | வார விடுமுறை, அரசு விடுமுறை ஆகிய நாட்களில் பங்குச்சந்தைக்கும் விடுமுறை அளிகப்படும். அந்த வகையில் ஜனவரி 24, 2026 முதல் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய பங்குச்சந்தைக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

1 / 5ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி இந்தியா தனது குடியரசு தின விழாவை கொண்டாடி வருகிறது. அந்த வகையில் ஜனவரி 26, 2026 அன்று இந்தியா தனது 77வது குடியரசு தின விழாவை கொண்டாட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இந்தியா முழுவதும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி இந்தியா தனது குடியரசு தின விழாவை கொண்டாடி வருகிறது. அந்த வகையில் ஜனவரி 26, 2026 அன்று இந்தியா தனது 77வது குடியரசு தின விழாவை கொண்டாட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இந்தியா முழுவதும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

2 / 5

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் அன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பங்குச்சந்தைகளான என்எஸ்இ, பிஎஸ்இ-க்கு அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

3 / 5

அதாவது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26, 2026 அன்று இந்திய பங்குச்சந்தைகளான என்எஸ்இ, பிஎஸ்இ-க்கு விடுமுறை அளிகப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஈக்விட்டி, ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

4 / 5

பொதுவாக வார விடுமுறை நாட்கள் மற்றும் அரசு விடுமுறைகளின் போது பங்குச்சந்தை மூடப்படும். அதன்படி தொடர் விடுமுறைகளை முன்னிட்டு ஜனவரி 24,2026 முதல் ஜனவரி 26, 2026 வரை பங்குச்சந்தை மூடப்பட உள்ளது. இந்த மூன்று நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு ஜனவரி 27, 2026 செவ்வாய்கிழமை பங்குச்சந்தை மீண்டும் திறக்கப்பட உள்ளது. 

5 / 5

வழக்கமாக பங்குச்சந்தை காலை 9.15 மணிக்கு தொடங்கி மாலை 3.30 மணிக்கு நிறைவடையும். இதுவே ப்ரீ ஓபன் பங்குச்சந்தை காலை 9 மணி அளவில் தொடங்கும். இந்த நிலையில், ஜனவரி 24, 2026 முதல் மொத்தம் மூன்று நாட்களுக்கு பங்குச்சந்தை செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.